நீரவ் மோடி இந்தியாவை விட்டு ஓடும் முன், சகோதரி பூர்வி மோடி செய்த வேலையை பாருங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான கடனை வாங்கிவிட்டுத் திருப்பிச் செலுத்த முடியாத காரணத்தால் ஜனவரி மாதம் 2018ல் நீரவ் மோடி நாட்டை விட்டு எஸ்கேப் ஆனார். இந்தியாவை விட்டு நீரவ் மோடி இரவோடு இரவாக வெளியேறினாலும் தன் குடும்ப உறுப்பினர்கள் யாரும் சிக்கக் கூடாது என்ற வகையில் பல மாதங்களாகத் திட்டமிட்டு வெளியேறினார்.

 

இதை உறுதி செய்யும் வகையில் நீரவ் மோடி இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு ஒரு மாதம் முன்பு அவருடை சகோதரி பூர்வி மோடி வரிச் சலுகை நிறைந்த பிரிட்டிஷ் வெர்ஜின் ஐலேண்ட் தீவில் புதிதாக ஒரு நிறுவனத்தை டிரைடென்ட் டிரஸ்ட் கம்பெனி முலம் துவங்கியுள்ளார்.

தொடர் சரிவில் இந்திய சந்தைகள்.. சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் சரிவு..!

நீரவ் மோடியின் சகோதரி

நீரவ் மோடியின் சகோதரி

அனில் அம்பானி, சச்சின் டென்டுல்கர் உட்பட 300க்கும் அதிகமாக இந்தியர்கள் வெளிநாட்டில் ரகசியமாக நிறுவனத்தைத் துவங்கிப் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களைச் சேர்த்து வைத்தது பண்டோரா பேப்பர்ஸ் ஆய்வில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த ஆய்வில் தான் நீரவ் மோடியின் சகோதரி நிறுவனத்தைத் துவங்கியது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

பூர்வி மோடி

பூர்வி மோடி

பிரிட்டிஷ் வெர்ஜின் ஐலேண்ட் தீவில் வைர வியாபாரி நீரவ் மோடியின் சகோதரி பூர்வி மோடி டிரைடென்ட் டிரஸ்ட் கம்பெனி வாயிலாக , Brookton Management Ltd என்ற நிறுவனத்தை டிசம்பர் 2017ல் துவங்கி உள்ளது. இந்த நிறுவனத்தைத் தான் தி டெபாசிட் டிரஸ்ட் அமைப்பிற்குக் கார்பரேட் ப்ரோடெக்டர் ஆக அறிவிக்கப்பட்டு உள்ளது.

பூர்வி மோடி சம்பளம் மற்றும் வருமானம்
 

பூர்வி மோடி சம்பளம் மற்றும் வருமானம்

நீரவ் மோடியின் சகோதரி பூர்வி மோடி Brookton Management Ltd நிறுவனத்தைத் துவங்குவதற்கு நிதி ஆதாரமாக Firestar நிறுவனத்தில் தான் கிரியேடிவ் டிரைக்டர் ஆக இருப்பதாகவும், அதன் மூலம் கிடைக்கும் சம்பளம் மற்றும் தனிப்பட்ட சில வருமானத்தை ஆதாரமாகக் காட்டி துவங்கியுள்ளார்.

பையர்ஸ்டார் நிறுவனம்

பையர்ஸ்டார் நிறுவனம்

இந்தப் பையர்ஸ்டார் நிறுவனம் பஞ்சாப் நேஷ்னல் வங்கி போலியான LOUs மூலம் கடன் பெற்று மோசடி செய்த பிரச்சனையில் முக்கிய நிறுவனமாகச் சேர்க்கப்பட்டு உள்ளது.

பெல்ஜியம் குடியுரிமை

பெல்ஜியம் குடியுரிமை

பெல்ஜியம் குடியுரிமை உடன் இருக்கும் பூர்வி மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடி, மெஹூல் சோக்சி ஆகியோர் செய்த 2 பில்லியன் டாலர் அதாவது 13,600 கோடி ரூபாய் அளவிலான பண மோசடியில் பூர்வி மோடியும் முக்கியக் குற்றவாளியாக உள்ளார்.

14 நிதி நிறுவனங்கள்

14 நிதி நிறுவனங்கள்

இப்புதிய நிறுவனம் மற்றும் இணைப்புத் தரவுகள் அனைத்தும் 600க்கும் அதிகமான பத்திரிக்கையாளர்கள், பத்திரிக்கை நிறுவனங்கள் இணைந்து உலகின் முன்னணி 14 நிதி நிறுவனங்கள் ரகசிய புலனாய்வு செய்ததில் கிடைத்துள்ளது.

பாண்டோரா பேப்பர்ஸ்

பாண்டோரா பேப்பர்ஸ்

இந்த ஆய்வின் முடிவுகளைத் தான் தற்போது பாண்டோரா பேப்பர்ஸ் என்ற பெயரில் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு பானாமா பேப்பர்ஸ் பெயரில் பல ரகசிய சொத்து விபரங்கள் வெளியானது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Nirav Modi sister purvi modi created new firm in BVI before brother escapes India

Nirav Modi sister purvi modi created new firm in BVI before brother escapes India
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X