நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. மீனவர்களுக்கு என்ன சலுகை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த இரண்டு தினங்களாகவே பல அதிரடியான சலுகைகளை வாரி வழங்கி வருகிறார் நிர்மலா சீதாராமன்.

அந்த வகையில் இன்றும் பல அதிரடியான அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். குறிப்பாக விவசாயம், பால்வளம், மீன் பிடித்தல், உயிரினங்களைத் வளர்த்தல், விவசாய கட்டமைப்பு என பல அதிரடியான திட்டங்களைத் அறிவித்து வருகிறார்.

நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. மீனவர்களுக்கு என்ன சலுகை..!

 

குறிப்பாக மீன் வளத் திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் ஊக்குவிப்பு நிதியினை அறிவித்துள்ளார். குறிப்பாக மீன்வளத்துறை மேம்பாட்டிற்காக 11,000 கோடி ரூபாய் நிதியினை அறிவித்துள்ளார்.

மீன்பிடி துறைமுகம் மற்றும் மீன் சந்தைகளுக்கான உள்கட்டமைப்பு மற்றும் குளிர் சாதன சேமிப்பு கிடங்கு வசதிகளூக்காக 9000 கோடி ரூபாய் நிதியினை ஒதுக்கியுள்ளார்.

இது ஐந்து ஆண்டுகளில் 70 லட்சம் டன் கூடுதல் மீன் உற்பத்தி வழிவகுக்கும் என்றும் கூறியுள்ளார். இதன் காரணமாக வேலைவாய்ப்புகள் பெருகும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கடல் மற்றும் உள்நாட்டு மீன்வளத்தின் ஒருங்கிணைந்த நிலையான அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக பி.எம்.எம்.எஸ்.ஒயை தொடங்கும் என்றும் நிர்மலா சீதாராமன் தனது உரையில் தெரிவித்துள்ளார். இது மட்டும் அல்ல இன்னும் சிறப்பான பல அறிவிப்புகளை தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

இதுவரை விவசாயம் சிறுகுறு தொழில் மற்றும் தொழில் முனைவோருக்கு பல சலுகைகளை அறிவித்து வருகிறார். குறிப்பாக வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு கூடுதல் விலை கிடைக்கும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், எண்ணெய் வித்துக்கள், வெங்காயம், உருளை ஆகியவற்றின் மீதுள்ள கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Nirmala sitharaman announcement about fishermen through PMMSY

Finance minister nirmala sitharaman announced Rs 20,000 Cr for Fishermen through Pradhan Mantri Matsya Sampada Yojana.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X