கடந்த சில நாட்களாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரதமர் நரேந்திர மோடியின் ஆத்ம நிர்பார் பாரத் (சுய சார்பு இந்தியா) தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று தன்னுடைய ஐந்தாவது மற்றும் கடைசி அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார்.
இன்று
1. மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம்
2. சுகாதாரம் & கல்வி
3. கொரோனா வைரஸ் காலத்தில் வியாபாரம்
4. கம்பெனிகள் சட்டத்தில், கிரிமினல் குற்றங்களாக இல்லாமல் மாற்றுவது
5. வியாபாரம் செய்வதை எளிமைப்படுத்துவது
6. அரசு நிறுவனங்கள் & துறை சார் கொள்கைகள்.
7. மாநில அரசு & அதன் வளங்கள்... என 7 முக்கிய விஷயங்களைப் பற்றிப் பேசி இருக்கிறார்.
அதில் குறிப்பாக, இந்திய பொதுத் துறை கம்பெனிகள் (Public Sector Undertaking) மற்றும் தனியார் கம்பெனிகள், பங்குச் சந்தைகளில் பட்டியலிடுவது தொடர்பாக இரண்டு முக்கிய விஷயங்களைப் பேசி இருக்கிறார். அதை தான் இங்கு பார்க்க இருக்கிறோம்.
1. இனி இந்திய பொதுத் துறை நிறுவனங்கள், வெளிநாட்டு பங்குச் சந்தைகளில் பட்டியலிட்டுக் கொள்ள அனுமதிக்கப்படும் எனச் சொல்லி இருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
2. அதே போல ஈக்விட்டி பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திரங்களை (Non Convertible Debentures - NCD), பங்குச் சந்தைகளில் பட்டியலிட்டு இருக்கும் கம்பெனிகள், பங்குச் சந்தைகளில் பட்டியலிட்ட கம்பெனிகளாக கருதப்படாது எனச் சொல்லி இருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.