நெடுஞ்சாலைத் துறை மேம்பாட்டுக்கு ரூ.15 லட்சம் கோடி.. நிதின் கட்கரி தகவல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்தில் மத்திய அரசு பற்பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் நெடுஞ்சாலை துறையை மேம்படுத்த அடுத்த ஐந்து ஆண்டுகளில் 15 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

 

அதிலும் மோட்டார் வாகன சட்ட திருத்தம், பாஸ்டேக் என தொடர்ந்து பல புதிய மாற்றங்களை நெடுஞ்சாலைத் துறையில் அரசு சீரமைத்து வருகிறது. இதன் மூலம் அரசுக்கு செலவுகள் குறைந்து வருவாய் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நெடுஞ்சாலைத் துறை மேம்பாட்டுக்கு ரூ.15 லட்சம் கோடி.. நிதின் கட்கரி தகவல்..!

இந்த நிலையில் தான் மத்திய அமைச்சர் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 15 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இது குறித்த அறிக்கையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் தரைவழிப் போக்குவரத்து துறை மற்றும் கப்பல் துறையிலும் இணைந்து 17 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போது நடைமுறைக்கு வந்துள்ள பாஸ்டேக் முறையில் கட்டணம் நடைமுறைக்கு வந்த நிலையில், டோல்கேட்டுகளின் வருமானம் கணிசமான அளவு உயரும் என்றும் கட்கரி கூறியுள்ளார்.

மேலும் அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் 22 பசுமை அதிவேக சாலைகள் உட்பட உலகத் தரம் வாய்ந்த சாலைகளை வழங்க நெடுஞ்சாலைத் துறையில் மட்டும் 15 லட்சம் கோடி ரூபாயை உட்செலுத்துவதைக் காணலாம் என்றும் கட்கரி தெரிவித்துள்ளார்.

தற்போது டோல்கேட்களின் மூலம் தினசரி 25 கோடி ரூபாய் வருமானம் வந்து கொண்டிருக்கிறது. இதே ஆண்டுக்கு 8,000 கோடி ரூபாய் வருமானம் கிடைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் டிசம்பர் இரண்டாவது வாரம் வரை 10 மில்லியன் பாஸ்டேக்குகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் நாடு முழுவதும் உள்ள 523 டோல்பிளாசாக்களில் தொந்தரவு இல்லாத இயக்கத்தை உறுதி செய்வதற்காக டிஜிட்டல் கொடுப்பனவுகளை எளிதாக்குவதற்கு அரசாங்கம் வகுத்த பஸ்டேக் சிஸ்டம் பயனுள்ளதாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

மேலும் அடுத்த 2020ம் ஆண்டில் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி ஆகியவற்றுக்கான அனைத்து தடங்களையும் இணைப்பதற்காக 12,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Nitin gadkari said highways sector to see Rs.15 lakh crore investments in five year term

Nitin gadkari said highways sector to see Rs.15 lakh crore investments in next five years. And we have spent Rs.17 lakh crore in the highways and shipping sectors combined in the last year.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X