கோல் இந்தியா.. 3 நாளாக வலுத்த போராட்டம்.. உற்பத்தி பாதிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டுள்ள நிலையில், நாட்டின் முன்னணி நிலக்கரி உற்பத்தி நிறுவனமான கோல் இந்தியாவின் ஊழியர்கள் சங்கம் மூன்று நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

இதனால் அங்கு நிலக்கரி உற்பத்தியானது முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.

சரி எதற்காக ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இத்துறையில் தனியார் துறையினரின் பங்களிப்பை அரசு ஊக்குவித்த நிலையில், ஊழியர் சங்கங்கள் இந்த போராட்டத்தினை கையில் எடுத்துள்ளன.

கோல் இந்தியா.. 3 நாளாக வலுத்த போராட்டம்.. உற்பத்தி பாதிப்பு..!

கடந்த வியாழக்கிழமையன்று ஆரம்பித்த இந்த போராட்டத்தினால், தற்போது மீண்டும் உற்பத்தி ஆரபிக்க இயலாத நிலை இருந்து வருகிறது.

எப்படி இருப்பினும் கோல் இந்தியா கடந்த வியாழக்கிழமையன்று 4.81 லட்சம் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. சராசரி உற்பத்தி 13 லட்சம் டன் ஆகும். ஊழியர் சங்களின் போராட்டத்தின் முதல் நாளான வியாழக்கிழமையன்று 5.78 லட்சம் டன்னாக வெளி அனுப்பப்பட்டுள்ளது. இது சராசரியை விட 42 சதவீதம் வீழ்ச்சியாகும். இது சராசரியாக 14 லட்சம் டன்னாக சரக்கு ஏற்றுமதி செய்யப்படும்.

தங்கம் தேவை வீழ்ச்சி தான்.. ஆனாலும் தொடர்ந்து உச்சம் காணும் தங்கம்..!

இதே இரண்டாவது நாளாக 4.52 லட்சம் டன் நிலக்கரி சரக்கினை அனுப்பியுள்ளது. கடந்த 10 நாள் உற்பத்தியின் சராசரி 32.17 சதவீதமாகும். இது ஜூன் 22 முதல் ஜூலை 1 வரையிலான14.0504 லட்சம் டன்னாக இருந்தது.

இதே நிபுணர்கள், இந்த 3 நாள் போராட்டத்தில் நிலக்கரி உற்பத்தியினால் மின்சார துறைக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறுகின்றனர். இதனால் மின்சார உற்பத்தியுல் பாதிக்கவில்லை என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இந்த வணிக ரீதியிலான இந்த முடிவு ரத்து செய்யப்படவில்லை எனில், ஆகஸ்ட் 18ம் தேதியன்று ஒரு நாள் போராட்டம் நடக்கும் என்றும் கூறப்படுகிறது. கடந்த மூன்று நாள் போராட்டத்தில் 75 - 80 சதவீதம் முதல் நிலக்கரி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

No coal production amid 3 day strike

Big strike.. Coal production nil during three day strike.
Story first published: Sunday, July 5, 2020, 15:58 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X