இந்த ஆதார் விவரங்களை மாற்றலாமா..? டாக்குமெண்டே தேவை இல்லையா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆதார். இன்று இந்தியாவில் அரசிடம் இருந்து ஏதாவது ஒரு சேவையைப் பெற வேண்டும் என்றாலும் சரி, வங்கி போன்ற நிதி நிறுவனங்களில் வங்கிக் கணக்கு திறப்பது என்றாலும் சரி ஆதார் அவசியம் ஆகிவிட்டது.

 

இப்போது, பலருக்கும் ஆதாரில் இருக்கும் விவரங்களில் சில விவரம் மட்டும் தவறாக இருக்கிறது என்றால் என்ன செய்வது என தெரியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அதற்கு விடை, நாம் ஆதார் சேவை மையத்துக்குச் செல்ல வேண்டும். நம்முடைய பெயர், பிறந்த தேதி, விலாசம், போன்றவைகளை மாற்ற தகுந்த ஆதாரங்கள் (டாக்குமெண்ட்கள்) நமக்கு தேவையாக இருக்கிறது.

ஆனால் இதற்கு தேவை இல்லை

பிரியாணி போட இருக்கும் இந்திய ரயில்வேஸ்..!

மின்னஞ்சல் முகவரி,

புகைப்படம்,

பாலினம்,

கைரேகைகள் (பயோ மெட்ரிக்ஸ்)

மற்றும் நம்முடைய கண்களின் ரெடினா ஸ்கேன் போன்றவைகளை மாற்ற எந்த ஒரு டாக்குமெண்ட்களும், ஆதாரங்களும் தேவை இல்லை எனச் சொல்லி இருக்கிறார்கள் ஆதார் நிறுவன தரப்பினர்கள். இதை தன் ட்விட்டர் கணக்கு வழியாகவும் சொல்லியிருக்கிறது ஆதார் தரப்பு.

ஆதார் சேவா கேந்திரா

ஆதார் சேவா கேந்திரா

அரசு தரப்பில் நிறுவப்பட்டு இருக்கும், இந்த ஆதார் சேவை மையத்துக்கு, நம் ஆதார் அட்டை உடன் சென்றால் போதும், மேலே சொன்ன ஆறு விவரங்களில் எதை வேண்டுமானாலும் எளிதில் மாற்றிக் கொள்ளலாம் எனச் சொல்லி இருக்கிறார்கள் அதார் தரப்பினர்கள். இதில் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் மிக மிக முக்கியம்.

ஏன் முக்கியம்
 

ஏன் முக்கியம்

நம்முடைய மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் வழியாகத் தான், ஆதார் சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் வரும். சாதாரணமாக நம் வீட்டு விலாசத்தை மாற்ற வேண்டும் என்றால் கூட நம் மொபைலுக்கு வரும் ஓடிபியை வைத்து தான் மாற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதார் சேவா கேந்திரா

ஆதார் சேவா கேந்திரா

இந்த ஆதார் சேவை மையத்தில் புதிதாக ஆதார் கார்ட் கொடுப்பது, ஏற்கனவே ஆதார் வைத்திருப்பவர்களுக்கு விவரங்களை மாற்றிக் கொடுப்பது என எல்லா சேவைகளையும் செய்கிறார்கள். இந்த சேவை மையத்துக்கு நேரில் சென்றோ அல்லது ஆன்லைன் வழியாகவோ எப்படி வேண்டுமானலும் அப்பாயின்ட்மென்ட் வாங்கிக் கொள்ளலாம். ஆன்லைனில் அப்பாயின்ட்மென்ட் வாங்க - https://appointments.uidai.gov.in/bookappointment.aspx

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

no documents needed for these 6 detail change in aadhar

To change our photograph, biometrics (finger print and iris scan), gender, mobile number and email ID in aadhar no documents needed, uidai said in its tweet.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X