மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே புதிய அறிவிப்பு.. மும்பை மக்கள் மகிழ்ச்சியின் உச்சம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகவும் காஸ்ட்லியான நகரமான மும்பையில் வசிக்கும் மக்களுக்கு மிகப்பெரிய அறிவிப்பை அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே வெளியிட்டு உள்ளார்.

 

இந்த அறிவிப்பால் மும்பை நகரில் வசிக்கும் மக்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.

முதல் இந்திய நிறுவனம்.. இன்று 70 நாடுகளில் வர்த்தகம்..!

 மகாராஷ்டிரா முதல்வர்

மகாராஷ்டிரா முதல்வர்

மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே வெளியிட்டுள்ள அறிவிப்பில் மும்பை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 500 சதுரடி-க்கும் குறைவான பரப்பளவில் இருக்கும் வீடுகளுக்குச் சொத்து வரி செலுத்தத் தேவையில்லை எனவும் 100% தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதாகவும் அறிவித்துள்ளார். இதை மும்பை மாநகராட்சி பகுதியில் இருக்கும் மக்கள் மிகப்பெரிய சலுகையாகப் பார்க்கின்றனர்.

 உத்தவ் தாக்கரே

உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே இந்த முடிவை மகாராஷ்டிரா மாநிலத்தின் நகர்ப்புற வளர்ச்சித் துறை உடனான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்பு அறிவித்துள்ளார் என்பது மிகவும் முக்கியமானது.

 ஜிஎஸ்டி வரி
 

ஜிஎஸ்டி வரி

இந்தியாவில் ஜிஎஸ்டி வரி அமலாக்கம் செய்யப்பட்ட நாளில் இருந்து மாநில அரசின் வரி வருமானத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக அனைத்து மாநிலங்களும் புலம்பி வரும் நிலையில் மகாராஷ்டிரா மாநில அரசின் இந்த முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

 500 சதுரடி வீடு

500 சதுரடி வீடு

மும்பை அதிக மக்கள் வாழும் பகுதி என்பதால் மும்பை மாநகராட்சி பகுதியில் 500 சதுரடிக்கு குறைவாக இருக்கும் வீடுகளின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே இருக்கும், இந்த நிலையில் இதன் மூலம் கிடைக்கும் சொத்து வரி வருமானத்தை இழக்கத் தயாராகியுள்ளது மகாராஷ்டிரா மாநில அரசு.

 மாநகராட்சி தேர்தல்

மாநகராட்சி தேர்தல்

மும்பை மாநகராட்சி தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே இந்த வரி சலுகையை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வரிச் சலுகை முடிவை உடனடியாக அமலாக்கம் செய்யவும் முதல்வர் தனது அறிவிப்பின் வாயிலாக உத்தரவிட்டுள்ளார்.

 468 கோடி ரூபாய் இழப்பு

468 கோடி ரூபாய் இழப்பு

தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள 500 சதுரடிக்கு குறைவாக இருக்கும் வீடுகளுக்குச் சொத்து வரிச் சலுகை மூலம் சுமார் 16 லட்சம் வீட்டு உரிமையாளர்கள் பலன் அடைய உள்ளனர், இதன் மூலம் இம்மாநில அரசுக்கு 468 கோடி ரூபாய் நஷ்டம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

No property tax: Maharashtra CM Uddhav Thackeray big announcment for upto 500 sq ft house owners

No property tax: Maharashtra CM Uddhav Thackeray big announcment for upto 500 sq ft house owners மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே புதிய அறிவிப்பு.. மும்பை மக்கள் மகிழ்ச்சியின் உச்சம்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X