டெல்லி: கடந்த சில வாரங்களாகவே மாநிலங்களின் ஜிஎஸ்டி வருவாய் வீழ்ச்சிக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பலமாக இருந்து வருகிறது.
இதற்கிடையில் வருவாய் இழப்பை ஈடுகட்ட கடன் வாங்க அறிவுறுத்தும் மத்திய அரசை எதிர்த்து, பாஜக தலைமை அல்லாத மாநிலங்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
சில தினங்களுக்கு முன்பு ஜிஎஸ்டி வருவாய் இழப்பை ஈடுகட்ட, மத்திய அரசு 2 புதிய கடன் திட்டங்களை அறிவித்தது.

அதென்ன அரசின் திட்டங்கள்
சரி அப்படி என்ன அரசு திட்டங்களை வகுத்தது. எதற்காக சில மாநிலங்கள் எதிர்ப்பினைக் காட்டி வருகின்றன. மத்திய அரசின் புதிய திட்டத்தின் படி, முதல் திட்டத்தின் படி 97,000 கோடி ரூபாய் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம். இதே இரண்டாவது திட்டத்தின் படி, மாநிலங்கள் சந்திக்கவுள்ள ஜிஎஸ்டி வருவாய் பற்றாக்குறையான 2.35 லட்சம் கோடியையும், ஒட்டுமொத்தமாக மாநில அரசுகள் கடனான பெற்றுக் கொள்ளலாம் என்பது தான்.

பாஜக அல்லாத சில மாநிலங்கள் எதிர்ப்பு
ஆனால் இந்த திட்டமானது பல மாநிலங்களில் எதிர்ப்பினைப் பெற்றுள்ளது. குறிப்பாக பாஜக தலைமை அல்லாத மாநிலங்களில் இந்த எதிர்ப்பானது வந்துள்ளது. குறிப்பாக இந்த புதிய கடன் திட்டங்களுக்கு கேரளம் பஞ்சாப், மேற்கு வங்க மாநிலங்களும், புதுச்சேரி டெல்லி மற்றும் யூனியன் பிரதேசங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

அரசு என்ன சொல்கிறது?
எனினும் இதற்கு பதிலளிக்கும் விதமாக அரசு தரப்பில், எந்த மா நிலங்களிலும் பிரச்சனை இருக்கக்கூடாது என்ற அருன் ஜெட்லியின் உறுதிப்பாட்டை நாங்கள் மதிக்கிறோம். மேலும் கடனை திருப்பிச் செலுத்தும்போது மாநிலங்களின் செஸ் நன்மைகளைப் பெற அனுமதிக்கும் என்று ஒரு மத்திய அரசாங்க அதிகாரி கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

நெருக்கடியை மேலும் அதிகரிக்கும்
அரசின் இந்த முடிவுகளுக்கு பாஜக ஆட்சி செய்யும் சில மாநிலங்கள் முதல் விருப்பத்தை ஆதரிக்க தங்கள் விருப்பங்களை சுட்டிக் காட்டின. இது குறித்து பஞ்சாப் அரசு சார்பில் வெளியான அறிக்கையில், மத்திய நிதியமைச்சகத்தின் கடன் வாய்ப்பு அறிவிப்பானது. மாநிலங்கள் மீது மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும், கடன் வாங்குவது என்பது மாநிலங்களின் எதிர்காலத்தினை பிணையம் வைப்பதாக அமையும்.

மற்ற அரசுகள் என்ன சொல்கின்றன
இதே டெல்லயில் துணை முதல்வர், மாநிலங்களுக்கு இழப்பீட்டை மத்திய அரசு வழங்க மறுப்பது இந்தியாவின் கூட்டாட்சி வரலாற்றில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய துரோகமாகும் என்றும் கூறியுள்ளார்.
இதே மேற்கு வங்கத்தின் நிதியமைச்சர், கடன் வாங்குவது மாநிலங்களின் கடன் சுமையை மேலும் அதிகரிக்கச் செய்யும். ஆனால் மத்திய அரசுக்கு கடன் பெறும் திறன் உள்ளது. மத்திய அரசுக்காக ரிசர்வ் வங்கி பணம் அச்சடிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

கேரளா அரசு என்ன சொல்கிறது?
இதே கேரளா நிதியமைச்சர், ஜிஎஸ்டி நடைமுறையால் மாநிலங்களுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு மற்றும் கொரோனா பாதிப்பால் ஏற்பட்டிருக்கும் வருவாய் இழப்பு ஆகியவற்றுக்கும் இடையே வேறுப்பாட்டைக் கொண்டுவர மத்திய அரசு முயற்சிப்பதும், இழப்பீட்டை முழுமையாக தர மறுப்பதும் மாநிலங்களின் அரசியலமைப்பு சட்ட உரிமைகளுக்கு எதிரானதாகும்.