திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு.. முடங்கிய NSE.. மீண்டும் எப்போது துவக்கம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: தேசிய பங்கு சந்தை என்றழைக்கப்படும் NSE தொழில் நுட்ப கோளாறு காரணமாக முடங்கியுள்ளது.

 

இதில் ஸ்பாட் நிஃப்டி, பேங்க் நிஃப்டி மற்றும் நிஃப்டி சார்ந்து குறியீடுகள் அனைத்தும் வர்த்தகமாகவில்லை. இதன் காரணமாக NSE-யில் வர்த்தகர்கள் எந்த ஈக்விட்டி ஆர்டர்களும் போட இயலவில்லை என்றும் அறிவித்துள்ளது.

எனினும் மும்பை பங்கு சந்தை எப்போதும் போல் வர்த்தகமாகிக் கொண்டுள்ள நிலையில், வர்த்தகர்கள் அதில் எப்போதும் போல வர்த்தகம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

என்ன தான் பிரச்சனை

என்ன தான் பிரச்சனை

குறிப்பாக என்எஸ்இ-யில் உள்ள 11 குறியீடுகளும் வர்த்தகமாகவில்லை என்றும் கூறப்படுகிறது. இரண்டு சேவை இணைப்புகள் மூலம், பல தொலைத்தொடர்பு இணைப்புகள் மூலம் என்எஸ்இ செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் சேவை வழங்குனர்கள் இருவரும் தங்களது இணைப்புகளில் சிக்கல் இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளனர். இதன் காரணமாக என்எஸ்இ சேவையிலும் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

சந்தை அப்டேட் ஆகவில்லை

சந்தை அப்டேட் ஆகவில்லை

காலை 10.15 மணிக்கு நிஃப்டி இன்டெக்ஸ் முந்தை நாளின் முடிவு விலையில் இருந்து 113 புள்ளிகள் அதிகரித்து, 14,820 புள்ளிகளாகவே இருந்தது. இதே பேங்க் நிஃப்டி 1.45% அதிகரித்து 35,626.60 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இந்த விலையில் மாற்றம் இல்லை என செய்திகள் கூறுகின்றன. எனினும் நிஃப்டி மற்றும் பேங்க் நிஃப்டியின் பியூச்சர் விலைகள் வர்த்தகமாகிக் கொண்டுள்ளதாகவும் என்டிடிவி செய்திகள் கூறுகின்றன.

எப்போது முடக்கம்
 

எப்போது முடக்கம்

இதற்கிடையில் காலை 11.40 மணிக்கு முடங்கிய என்எஸ்இ சந்தையானது, மீண்டும் வர்த்தகம் 1.15 மணிக்கு தொடங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

என்எஸ்இ-யில் ஏற்பட்ட இந்த பிரச்சனை காரணமாக இண்டிராடே ஆர்டர்கள் squared off ஆகலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும் வர்த்தகம் தொடங்கிய பின்னரே உண்மை நிலவரம் என்ன என்று தெரியவரும்.

செபி அபராதம்

செபி அபராதம்

என்எஸ்இ உலகின் மிகப்பெரிய பங்கு சந்தை, ஆனால் இது போன்ற தொழில்நுட்ப கோளாறு என்பது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டும் இது போன்ற பிரச்சனை ஏற்பட்டது. இதற்காக செபியும் அபராதம் விதித்தது. இதனால் ஏற்படும் இழப்புகளையும் ஈடு செய்ய கொள்கைகளை கொண்டு வர செபி திட்டமிட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

NSE halts trading in all segments due to technical issue

NSE halts updates.. NSE halts trading in all segments due to technical issue
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X