பங்குச்சந்தை முதலீட்டாளர்களை அதிர்ச்சி அடைய செய்த தேசிய பங்குச்சந்தை அமைப்பின் முன்னாள் தலைவரான சித்ரா ராமகிருஷ்ணா வழக்கில் தோண்ட தோண்ட பல விஷயங்கள் வெளியாகி வருகிறது.
இதற்கிடையில் நேற்று சிபிஐ அமைப்பு என்எஸ்ஈ சித்ரா ராமகிருஷ்ணா வழக்கின் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் ஆனந்த் சுப்ரமணியம் தனது பதவிக்காலத்தில் பல்வேறு முறைகேடுகளைச் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு உள்ளார்.
இந்நிலையில் ஆனந்த் சுப்ரமணியம்-ன் மனைவி சுனிதா ஆனந்த் குறித்துப் பல முக்கியமான விஷயங்கள் வெளியாகியுள்ளது.
Russia-Ukraine: தனியார்மயமாக்கப்பட்ட பின் கைகொடுத்த ஏர்இந்தியா.. ஏன் தெரியுமா? டாடா சொன்னது என்ன?

சித்ரா ராமகிருஷ்ணா
சித்ரா ராமகிருஷ்ணா தனது பதவியின் அதிகாரத்தைப் பயன்படுத்தித் தனக்கு மிகவும் வேண்டியவரான ஆனந்த் சுப்ரமணியம்-ஐ நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியா லிமிடெட்டின் (NSE) முன்னாள் குழு தலைமை செயல் அதிகாரியாகவும், நிர்வாக இயக்குனரான சித்ரா ராமகிருஷ்ணா-வின் ஆலோசகராகவும் முகம் தெரியாத இந்த ஆனந்த் சுப்ரமணியம் நியமித்தார்.

ஆனந்த் சுப்ரமணியம் சம்பளம்
ஆனந்த் சுப்ரமணியம் இந்தப் பதவியில் நியமிக்கப்பட்ட போதே அபரிமிதமான சம்பளத்துடன் நியமிக்கப்பட்டார். இதுமட்டும் அல்லாமல் அடுத்த 2 வருடத்தில் இவருடைய சம்பளம் 5 கோடி ரூபாயாக உயர்ந்தது.

ஆனந்த் சுப்ரமணியம் மனைவி
இதேபோல் என்எஸ்ஈ அமைப்பில் ஆனந்த் சுப்ரமணியம்-ன் மனைவி சுனிதா ஆனந்த்-க்கும் பதவி கொடுக்கப்பட்டது மட்டும் அல்லாமல் ஆனந்த்-தை போலவே அதிகப்படியான சம்பளமும் கொடுக்கப்பட்டு உள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. இதுவும் சித்ரா ராமகிருஷ்ணா நிர்வாகத்தின் கீழ் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சுனிதா ஆனந்த்
செபி உத்தரவுகளின் படி ஆனந்த் சுப்ரமணியம்-ன் மனைவி சுனிதா ஆனந்த், என்எஸ்ஈ அமைப்பின் சென்னை அலுவலகத்தின் consultant ஆக ஏப்ரல் 1, 2013 - மார்ச் 31, 2014 வரையிலான காலத்திற்குச் சுமார் 60 லட்சம் ரூபாய் சம்பளத்தில் பணியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

சுனிதா சம்பள உயர்வு
இதைத் தொடர்ந்து ஏப்ரல் 1, 2014 - மார்ச் 31, 2015ஆம் ஆண்டுக் காலத்தில் வெறும் consultant ஆகப் பணியாற்றி வரும் சுனிதா ஆனந்த்-ன் சம்பளம் 72 லட்சம் ரூபாயாகும், அடுத்த வருடம் 1.15 கோடி ரூபாய் சம்பளத்துடன் consultant ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது.

1.33 கோடி ரூபாய் சம்பளம்
consultant ஆகப் பணியாற்றிய சுனிதா ஆனந்த் வெளியேறிய வருடத்தில் ஏப்ரல் 1, 2016 - டிசம்பர் 31, 2016 காலகட்டத்தில் இவருடைய சம்பளம் 1.33 கோடி ரூபாய். மேலும் ஆனந்த் சுப்ரமணியம் அக்டோபர் 2016ல் தனது பதவியிலிருந்து விலகினார்.

15 லட்சம் முதல் 5 கோடி வரை
மேலும் ஆனந்த் சுப்ரமணியம் என்எஸ்ஈ பணியில் சேர்வதற்கு முன்பு இவருடைய சம்பளம் வருடத்திற்கு வெறும் 15 லட்சம் மட்டுமே, ஆனால் 2014 முதல் 2016க்குள் இவருடைய சம்பளம் 5 கோடி ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.