இந்திய அரசு விதிகளை ஏற்க மறுத்த டிவிட்டர்.. பங்கு மதிப்பில் 25% சரிவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் மிகவும் பிரபலமாக விளங்கும் சமுக வலைத்தளங்களில் ஒன்றான டிவிட்டர் இந்திய அரசின் புதிய ஐடி விதிகளை ஏற்க மறுத்த நிலையில் பங்கு மதிப்பில் எதிர்வினையைச் சந்தித்து வருகிறது.

 

இந்திய அரசு சமுகவலைதளத்தில் போலி செய்திகள் மற்றும் தரவுகள் பரவுவதைத் தடுக்கும் வகையில் புதிய மீடியா கொள்கையைக் கொண்டு வந்தது. இதற்குப் பேஸ்புக், கூகிள் ஆகிய சமுகவலைதள நிறுவனங்கள் ஏற்றுக்கொண்ட நிலையில், டிவிட்டர் தொடர்ந்து மறுத்து வருகிறது.

டிவிட்டர்-ன் இன்டர்மிடியரி தகுதி

டிவிட்டர்-ன் இன்டர்மிடியரி தகுதி

இந்நிலையில் ஜூன் 16ஆம் தேதி டிவிட்டர் தனது இன்டர்மிடியரி தகுதியை இந்தியாவில் இழந்துள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் அரசு பல முறை புதிய மீடியா கொள்கைக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்ட நிலையிலும் டிவிட்டர் அதனை ஏற்க மறுத்துள்ளது, இதன் வாயிலாக intermediary தகுதியை நீக்கியுள்ளோம் எனத் தெரிவித்துள்ளது.

இன்டர்மிடியரி தகுதி என்றால் என்ன

இன்டர்மிடியரி தகுதி என்றால் என்ன

இன்டர்மிடியரி தகுதியை நீக்குவது மூலம் டிவிட்டர் தளம் இனி பல வாடிக்கையாளர்கள் பதிவிடும் தளமாக டிவிட்டரை கருத முடியாது, இதற்கு மாறாக டிவிட்டரை publisher ஆக மட்டுமே கருதப்படும். இதன் மூலம் இத்தளத்தில் பதிவிடும் அனைத்து தரவுகளுக்கும் டிவிட்டர் தான் பொறுப்பேற்கும்.

டிவிட்டர் தளத்திற்கு ஆபத்து
 

டிவிட்டர் தளத்திற்கு ஆபத்து

இது மட்டும் அல்லாமல் டிவிட்டர் மீது சட்டத்திற்குப் புறம்பான தரவுகள் மீது இனி யார் வேண்டுமானாலும் வழக்குத் தொடுக்கலாம், இதற்கு இந்திய விதிகளுக்குக் கீழ் தண்டனையும் அளிக்க முடியும். இது டிவிட்டருக்கு பெரும் நெருக்கடியான சூழ்நிலையில் வைத்துள்ளது.

டிவிட்டர் விளக்கம்

டிவிட்டர் விளக்கம்

இதுகுறித்து டிவிட்டர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்தியாவில் புதிதாக ஒரு அலுவலகத்தை அமைக்க உள்ளதாகவும், இக்காரணத்தால் புதிய மீடியா அல்லது ஐடி விதிகளை நடைமுறைப்படுத்துவதில் தாமதமாகிறது எனத் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் நியூயார்க் பங்குச்சந்தையில் டிவிட்டர் பங்குகள் தனது 52 வார உயர்வான 80.75 டாலர் அளவீட்டில் இருந்து 25 சதவீதம் குறைந்து தற்போது 60.71 டாலராக வர்த்தகம் செய்யப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

NYSE listed Twitter stocks falls 25% from 52-week high over Indian IT rules

NYSE listed Twitter stocks falls 25% from 52-week high over Indian IT rules
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X