கொரோனா-வால் இந்தியாவிற்கு 40 பில்லியன் டாலர் சேமிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா-வால் மக்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டும், பொருளாதார வளர்ச்சி தரைதட்டியும், வேலைவாய்ப்பு உச்சக்கட்ட ஆபத்தில் இருக்கும் இந்த மோசமான வேளையில் அப்படி என்ன நல்ல விஷயம் நடந்திருக்கப்போகிறது.

 

சொன்ன நம்பமாடீங்க கொரோனா வந்த காரணத்தால் இந்திய அரசுக்கு சுமார் 40 பில்லியன் டாலர் செலவுகளைச் சேமிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையை வைத்து நாட்டில் ஏழை மக்களின் சுகாதாரத்தைச் சிறப்பான முறையில் மேம்படுத்த முடியும். ஆனால் இது எல்லாம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கையில் தான் உள்ளது.

 கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலை

செவ்வாய்க்கிழமை அமெரிக்கச் சந்தை வர்த்தகத்தில் WTI கச்சா எண்ணெய்க்கான மே மாத பியூச்சர்ஸ் விலை வரலாறு காணாத வகையில் 300 சதவீதம் சரிந்து -40 டாலருக்கு விலைக்குக் குறைந்தது. இந்திய கச்சா எண்ணெய் சந்தைக்கும் WTI கச்சா எண்ணெய் சந்தைக்கும் நேரடி தொடர்பு இல்லையென்றாலும் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிர்ணயம் செய்யும் போது இதன் விலையும் முக்கியக் காரணியாக அமைகிறது.

கொரோனா பாதிப்பின் காரணமாக உலக நாடுகளில் கச்சா எண்ணெய் தேவை குறைந்தது மட்டும் அல்லாமல் போக்குவரத்து பிரச்சனை மிகவும் அதிகமாக இருந்த காரணத்தால் இதன் வர்த்தகம் அதிகளவில் பாதிக்கப்பட்டுக் கச்சா எண்ணெய் விலை அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.

பட்ஜெட் 2020

பட்ஜெட் 2020

2020-21 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் மத்திய அரசு கச்சா எண்ணெய் வாங்குவதற்காக ஒரு பேரல் கச்சா எண்ணெய் சராசரி அளவாக 66 டாலர் என்ற கணக்கீட்டில் சுமார் 105 பில்லியன் டாலர் அளவிலான தொகையை ஒதுக்கீடு செய்தது. ஆனால் தற்போது நிலைமையே வேறு.

உதாரணமாக டிசம்பர் 2019ல் பிரெண்ட் கச்சா எண்ணெய் 69 டாலர், ஜனவரியில் 64 டாலர், சீனாவில் கொரோனா தாக்கம் மற்றும் அரபு நாடுகள் - ரஷ்யா உடனான உற்பத்தியில் ஏற்பட்ட பாதிப்பு ஆகியவற்றின் காரணமாகப் பிப்ரவரி மாதம் 56 டாலராகக் குறைந்தது. இது மார்ச்-ல் 32 எனவும் ஏப்ரல் மாதத்தில் 21 டாலர் என மிகக் குறைவான விலையை அடைந்துள்ளது.

விலை வித்தியாசம்
 

விலை வித்தியாசம்

இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயரும் என வைத்துக்கொள்வோம், அப்படியும் இந்த ஆண்டின் சராசரி விலையாக ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 40 டாலர் அக மட்டுமே இருக்கும். அப்படியென்றால் மத்திய அரசு கச்சா எண்ணெய் வாங்குவதற்காக ஒதுக்கப்பட்ட நிதி 105 பில்லியன் டாலரில் இருந்து 64 பில்லியன் டாலராகக் குறையும்.

இந்த 64 பில்லியன் டாலர் தொகை பெட்ரோல் டீசல் பயன்பாட்டு அளவில் தற்போது ஏற்பட்டுள்ள தொய்வை சேர்க்காமல் கணக்கிடப்பட்டவை. இப்படியிருக்கை கிட்டதட்ட 40 பில்லியன் டாலர் தொகை சேமிப்புச் செய்ய முடியும்.

கொரோனாவிற்கு நன்றி

கொரோனாவிற்கு நன்றி

இந்தியாவில் கொரோனா ஒழிப்பிற்காக மத்திய நிதியமைச்சகம் சுமார் 23 பில்லியன் டாலர் அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதேபோல் நடப்பு நிதியாண்டில் சுகாதார நில திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி 9 பில்லியன் டாலர்.

இதை ஒப்பிடுகையில் கச்சா எண்ணெய் விலை குறைவினால் சேமிக்கப்பட்ட 40 பில்லியன் டாலர் தொகை பல மடங்கு அதிகம். இந்த நிதியை 3 சிறப்பான திட்டங்களில் செலவு (முதலீடு) செய்யலாம்.

1. ஆரம்பச் சுகாதார நிலையம்

1. ஆரம்பச் சுகாதார நிலையம்

Human Development Index பட்டியலில் இந்தியா 129வது இடத்தில் இருப்பதற்கு முக்கியக் காரணம், நாட்டின் மொத்த ஜிடிபி-யில் 1 சதவீதத்திற்கும் குறைவான தொகையைத் தான் மக்களின் சுகாதாரத்திற்காக இந்திய அரசு பயன்படுத்துகிறது.

இந்நிலையில் இந்த 40 பில்லியன் டாலர் தொகையை வைத்து நாட்டில் ஒவ்வொரு பஞ்சாயத்து-க்கும் ஒரு ஆரம்பச் சுகாதார நிலையம் அமைத்து தேவையான ஊழியர்கள், மருத்து மற்றும் உபகரணங்களை வாங்கலாம். இதனால் நாட்டு மக்களின் வாழ்வியல் முறை மேம்படும்.

2. அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு

2. அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு

இந்த நிதியை கொண்டு நாட்டு மக்களின் விலை உயர்ந்த மருத்து சிகிச்சைக்கான மருத்துவக் காப்பீடு கொடுக்க முடியும். இதன் மூலம் இதய அறுவை சிகிச்சை போன்ற விலை உயர்ந்த மருத்துவச் சிகிச்சைகளைச் சமானிய மக்களுக்குக் கொடுக்க முடியும்.

 3. ஆராய்ச்சி மற்றும் இன்னோவேஷன்

3. ஆராய்ச்சி மற்றும் இன்னோவேஷன்

கொரோனா வந்த பின்பு இந்திய உணர்ந்த மிகப்பெரிய பாடம். இந்த நோயைப் பரிசோதனை செய்யக் கூட நம்மிடம் தகுந்த தொழில்நுட்பம் இல்லை என்பது தான். இந்நிலையில் மாநில அளவில் அனைத்துத் துறை சார்ந்த research, innovation தளத்தை உருவாக்கலாம். இது பல வகையில் இந்தியாவை வலிமைப்படுத்தும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Oil price crash saves 40 billion dollar to india

The sharp and unexpected fall in WTI crude prices, falling to a negative territory for May 20 contract can have significant bearing on the Indian economy. Let us analyse its implications and what can be done to utilise this windfall.
Story first published: Wednesday, April 22, 2020, 20:04 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X