கச்சா எண்ணெய் விலை ரஷ்யா - உக்ரைன் பிரச்சனையின் காரணமாகக் கடந்த வாரம் 120 டாலர் வரையில் உயர்ந்த நிலையில், வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று யாரும் எதிர்பார்க்காத வகையில் WTI மற்றும் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 130 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
இந்தத் தடாலடி உயர்வுக்கு இரு முக்கியக் காரணங்கள் உள்ளது.
1600 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி கண்ட சென்செக்ஸ்.. நிஃப்டி 15,700-க்கு மேல் வர்த்தகம்..!

கச்சா எண்ணெய் விலை
கச்சா எண்ணெய் விலை உயர்வால் இன்று ஆசிய பங்குச்சந்தை மிகப்பெரிய சரிவைப் பதிவு செய்துள்ளது. குறிப்பாக ஜப்பான், ஹாங்காங் சந்தைகள் காலை வர்த்தகம் துவங்கும் போதே 3 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

130 டாலர்
இன்றைய வர்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் அதிகப்படியாக 10 சதவீதம் உயர்ந்து 130 டாலரை தொட்டது, இதேபோல் அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் விலை அதிகப்படியாக 126 டாலர் வரையிலும் உயர்ந்துள்ளது. இந்தத் தடாலடி உயர்வுக்கு இரண்டு முக்கியக் கரணங்கள் உள்ளது.

ரஷ்யா கச்சா எண்ணெய்
ரஷ்யா மீது தற்போது அனைத்து சேவைகளும் பொருட்களுக்கும் தடை விதித்துள்ள நிலையில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக்கு மட்டுமே தடை விதிக்கப்படாமல் இருக்கிறது. இந்நிலையில் அமெரிக்க அரசு தற்போது ரஷ்யா-வின் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஏற்றுமதிக்குத் தடை விதிக்க ஐரோப்பிய நாடுகள் உடன் ஆலோசனை செய்து வருகிறது.

அமெரிக்காவின் திட்டம்
இந்தத் தடை உறுதியாகும் பட்சத்தில் கச்சா எண்ணெய் சந்தையில் மிகப்பெரிய அளவில் தட்டுப்பாடு உருவாகும், இதனால் விலை தாறுமாறாக உயர துவங்கியுள்ளது. மேலும் ரஷ்யாவுக்கு வருடத்திற்கு 110 பில்லியன் டாலர் வருமானம் கிடைக்கும் வர்த்தகம் இந்தத் தடை மூலம் பாதிக்கப்படும்.

ஈரான் பேச்சுவார்த்தை
இதைத் தொடர்ந்து ஈரான் நாட்டு உடனான மேற்கத்திய நாடுகளின் அணுசக்தி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து தாமதமாகும் காரணத்தால் ஈரானிய கச்சா எண்ணெய் சர்வதேச சந்தைகளுக்குள் விரைவில் வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறைந்துள்ளது.

முதல் நாள்
ஒருபக்கம் ரஷ்யா கச்சா எண்ணெய் மீது தடை, மறுப்புறம் ஈரான் நாட்டு கச்சா எண்ணெய் சந்தைக்குள் வருவதற்கும் தடை இதனால் கச்சா எண்ணெய் விலை தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் ஏற்கனவே கணித்தது போல் இந்த வாரத்தின் முதல் நாளே 130 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.