இனி ஓட்டி பார்த்து வாங்கலாம்.. எந்தெந்த ஊர்களில்.. ஓலா கொடுத்த சூப்பர் அப்டேட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஓலா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக அறிமுகம் செய்தது. இந்த நிலையில் தற்போது அதன் டெஸ்ட் டிரைவ் இந்தியா முழுவதும் தொடங்கவுள்ளது.

 

சந்தைக்கு வரும் முன்பே பலத்த எதிர்பார்ப்புகளை உருவாக்கிய ஓலா மின்சார வாகனம், பெட்ரோலுக்கு மாற்றாக பார்க்கப்பட்டது.

எனினும் இதன் பிரத்யேக வாகன ஷோரூம்கள் என எதுவும் இல்லை, ஆன்லைனில் புக் செய்து வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் டெஸ்ட் டிரைவ் என்பது பலருக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. இது வாகனங்கள் ஓட்டிப்பார்த்து வாங்க பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும் புரட்சியை ஏற்படுத்தலாம்

பெரும் புரட்சியை ஏற்படுத்தலாம்

இந்தியாவில் ஓலா நிறுவனம் பிரம்மாண்ட ஹைப்பர்சார்ஜர் நெட்வொர்க்கினை அமைக்க உள்ளதாகவும் ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த நிலையில் இது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக தற்போது டெஸ்ட் டிரைவ் ஆப்சனும் வந்துள்ளது.

எங்கெங்கு டெஸ்ட் டிரைவ்

எங்கெங்கு டெஸ்ட் டிரைவ்

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நவம்பர் 27 முதல் பல நகரங்களில் டெஸ்ட் டிரைவ் ஆப்சன் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

குறிப்பாக சூரத், திருவனந்தபுரம், கோழிக்கோடு, விசாகப்பட்டினம், விஜயவாடா, வதோரா, புவனேஷ்வர், திருப்பூர், ஜெய்ப்பூர் மற்றும் நாக்பூர் ஆகிய நகரங்களில், எஸ் 1 மற்றும் எஸ் 1 புரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் டெஸ்ட் செய்யலாம் என அறிவித்துள்ளது.

ஏற்கனவே பல நகரங்களில் டெஸ்ட் டிரைவ்
 

ஏற்கனவே பல நகரங்களில் டெஸ்ட் டிரைவ்

இந்த மாதத்தின் தொடக்கத்தில் பல மெட்ரோ நகரங்களில் தனது டெஸ்ட் டிரைவினை ஆரம்பித்தது. அதில் ஓலாவின் எஸ் 1 மற்றும் எஸ் 1 புரோ மாடல்கள் மட்டும் டெஸ்ட் டிரைவுக்கு கொண்டு வந்துள்ளது.

இது பெங்களூரு, டெல்லி, அகமதாபாத், கொல்கத்தாவில் நவம்பர் 10 முதலும், மும்பை, சென்னை, ஹைத்ராபாத், கொச்சி, புனே உள்ளிட்ட நகரங்களில் நவம்பர் 19ல் இருந்தும் டெஸ்ட் டிரைவ் ஆப்சனை கொண்டு வந்துள்ளது.

இரு சக்கர வாகனங்களுக்கு சார்ஜிங்

இரு சக்கர வாகனங்களுக்கு சார்ஜிங்

ஓலாவின் சார்ஜிங் பாயிண்டுகள் வாடிக்கையாளார்கள் எளிதில் அடையும் விதமாக இருக்கும். குறிப்பாக மால்கள், ஐடி பூங்காக்கள், அலுவலக கட்டிடங்கள், உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் என்று ஓலா அறிவித்தது. ஓலாவின் எலெக்ரிக் ஸ்கூட்டரில் உள்ள பேட்டரியை 18 நிமிடம் சார்ஜ் செய்தால், இதன் மூலம் நீங்கள் 75 கிலோமீட்டர் பயணம் செய்ய முடியும் என்கிறது.

ஆகஸ்டில் அறிமுகம்

ஆகஸ்டில் அறிமுகம்

இதற்கிடையில் தான் கடந்த ஆகஸ்ட் 15 அன்று ஓலாவின் S1 ரக ஸ்கூட்டர் 121 கிலோமீட்டர் வேகம் கொண்ட வண்டியின் விலையானது 99,999 ரூபாய் எனவும், இதே 181 கிலோமீட்டர் வேகம் கொண்ட வண்டியின் விலை 1,29,999 ரூபாயாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு அறிவித்தது.

என்னென்ன நிறம்

என்னென்ன நிறம்

இதில் S1 ரக ஸ்கூட்டரானது ஐந்து கலர்களில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதே ஓலாவின் S1 pro ஸ்கூட்டரானது சிவப்பு, சில்வர், தங்க கலர், பிங்க் கலர், கறுப்பு, கரு நீலம், நீல நிறம், கிரே மற்றும் வெள்ளை உள்ளிட்ட 10 நிறங்களில் இருக்கும் என முன்னரே அறிவித்திருந்தது.

இஎம்ஐ ஆப்சன் உண்டு

இஎம்ஐ ஆப்சன் உண்டு

மேலும் ஓலா தனது விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் சில நிதி நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளதாகவும் முன்னதாக அறிவித்திருந்தது. ஆக இப்படி பல சலுகைகளுக்கு மத்தியில் தற்போது பல நகரங்களிலும் டெஸ்ட் டிரைவ் ஆப்சனை கொண்டு வந்துள்ளது. இது மேற்கொண்டு சந்தையில் விற்பனையை ஊக்கப்படுத்த காரணமாக அமையலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: ola ஓலா
English summary

Ola electric scooter is set to begin its test run from November 27th 2021

Ola electric scooter is set to begin its test run from November 27th 2021/
Story first published: Sunday, November 21, 2021, 15:39 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X