மின்சார வாகன சந்தையில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ஓசூரில் மிகப்பெரிய ஆலையை உருவாக்கி வருகின்றது.
ஏற்கனவே இந்த ஆலையில் ஒரு பகுதியில் உற்பத்தியினை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இந்த ஆலையில் இருந்து ஓலா நிறுவனம் ஒரு நாளைக்கு 1000 வாகனங்களை உற்பத்தி செய்வதாக தெரிவித்துள்ளது.
தற்போது ப்யூச்சர்பாக்டரி இப்போது ஒரு நாளைக்கு கிட்டதட்ட 1000 ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்கிறது எனதனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும் தயாரிக்கப்பட்ட மின்சார ஸ்கூட்டர்களை முன்பதிவு செய்ய வரிசையாக நிற்கும் படத்தையும் அகர்வால் பகிர்ந்துள்ளார். இது தான் இன்றைய உற்பத்தி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முகேஷ் அம்பானியின் சொத்து பிரிக்கும் மெகா திட்டம்.. 3 சூப்பர் ஸ்டார்களுக்கு என்ன தேவை..!
வாடிக்கையாளர்களுக்காக மீண்டும் விற்பனைக்காக தொடங்கப்படும் என்றும் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

முதல் 100 டெலிவரி
ஸ்கூட்டர்களின் டெலிவரி செய்வதில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், ஓலா டிசம்பர் 16 அன்று டெலிவரியினை தொடங்கியது.
இதற்கிடையில் முதல் 100 ஸ்கூட்டர்கள் சென்னை மற்றும் பெங்களூரு வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்பட்டன.

சோதனை ஓட்டம்
தற்போது ஓலாவின் எஸ் 1 ஸ்கூட்டரானது நாட்டின் பல்வேறு பகுதிகளில், சோதனை சவாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதேபோல கிராமப்புற பகுதியானலும் சரி, நகரப்பகுதியானலும் சரி டெலிவரி மிக விரைவாக செய்யப்பட்டு வருகின்றது. இதற்காக பலரும் பாராட்டுகளை கூறி வருகின்றனர்.
இது குறித்து மஹிந்திரா குழுமத்தின் தலைவர் கூட ஸ்மார்ட் மூவ் பவிஷ் என பாராட்டியிருந்தார்.

நல்ல விஷயம்
சந்தைக்கு வரும் முன்பே பலத்த எதிர்பார்ப்புகளை உருவாக்கிய ஓலா மின்சார வாகனம், பெட்ரோலுக்கு மாற்றாக பார்க்கப்பட்டது. எனினும் இதன் பிரத்யேக வாகன ஷோரூம்கள் என எதுவும் இல்லை, ஆன்லைனில் புக் செய்து வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் டெஸ்ட் டிரைவ் என்பது பலருக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. இது வாகனங்கள் ஓட்டிப்பார்த்து வாங்க பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஎம்ஐ ஆப்சன்
ஓலா தனது விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் சில நிதி நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளதாகவும் முன்னதாக அறிவித்திருந்தது. ஆக இப்படி பல சலுகைகளுக்கு மத்தியில் தற்போது பல நகரங்களிலும் டெஸ்ட் டிரைவ் ஆப்சனை கொண்டு வந்துள்ளது. இது மேற்கொண்டு சந்தையில் விற்பனையை ஊக்கப்படுத்த காரணமாக அமையலாம். எப்படியோ இன்னும் சந்தையில் ஓலா ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.