ஓலா S1 ஸ்கூட்டர் விலை 'இந்த' மாநிலத்தில் மட்டும் ரொம்ப கம்மி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு வழியாக பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆகஸ்ட் 15 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் ஓலாவின் எஸ் 1 ரக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையானது, 99,999 ரூபாயாக விலை நிர்ணயிக்கப்பட்டது நினைவில் கொள்ளத்தக்கது.

 

சுற்று சூழலை ஊக்கப்படுத்தும் விதமாக பல மாநிலங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானிய சலுகை அளிக்கப்பட்டு வருகின்றது. இதனால் மற்ற மாநிலங்களை காட்டிலும் மானிய சலுகை அளிக்கப்பட்டு வரும் மாநிலங்களில் மின்சார வாகனங்களின் விலை சற்று குறைவாக உள்ளது.

வோடபோன் ஐடியா: லைசென்ஸ் கட்டணம் செலுத்த கூடப் பணமில்லை..!

இதனால் கிட்டதட்ட ஓலா ஸ்கூட்டர் விலையில் இருந்து 20,000 ரூபாய் வரையில் சில மாநிலங்களில் விலை குறைவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓலா விலை நிலவரம்

ஓலா விலை நிலவரம்

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டாரானது 75வது சுதந்திர தினம் அன்று, அறிமுகம் செய்யப்பட்டது. அதில் ஓலாவின் S1 ரக ஸ்கூட்டர் 121 கிலோமீட்டர் வேகம் கொண்ட வண்டியின் விலையானது 99,999 ரூபாய் எனவும், இதே 181 கிலோமீட்டர் வேகம் கொண்ட வண்டியின் விலை 1,29,999 ரூபாயாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு அறிவித்தது.

ஓலாவின் S1 pro

ஓலாவின் S1 pro

இதற்கிடையில் ஓலாவின் S1 pro சந்தையில் அதிக வேகம் கொண்ட எலெக்ட்ரிக் வண்டியாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதில் S1 ரக ஸ்கூட்டரானது ஐந்து கலர்களில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதே ஓலாவின் S1 pro ஸ்கூட்டரானது தங்க நிறம், சிவப்பு, சில்வர், பிங்க், கறுப்பு, கரு நீலம், நீலம், கிரே மற்றும் வெள்ளை உள்ளிட்ட 10 நிறங்களில் இருக்கும் என முன்னரே அறிவித்திருந்தது.

விலை ஒப்பீடு
 

விலை ஒப்பீடு

ஓலாவின் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலையானது, மற்ற முன்னணி நிறுவனங்களின் பெட்ரோல் வாகனங்களோடு ஒப்பிடும்போது சராசரி தான் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இதற்கிடையில் சில மாநிலங்களில் மின்சார வாகனங்களுக்கு அளிக்கப்பட்டு வரும் நிலையில், இது இன்னும் விலை குறைவானதாக மாறியுள்ளது.

விலை குறைவு தான்

விலை குறைவு தான்

ஓலாவின் S1 ரக வாகனத்தின் விலை டெல்லியின், மானியத் தொகை போக, 85,099 ரூபாயாகவும், இதே S1 proவின் விலையானது 1,10,149 ரூபாயாகவும் இருக்கும்.

இதே குஜராத்தில் S1 ரக வாகனத்தின் விலை 79,999 ரூபாயாகவும், இதே S1 proவின் விலையானது 1,09,999 ரூபாயாகவும் இருக்கும். ஆக மேற்கண்ட மாநிலங்களில் இந்த ஸ்கூட்டரினை வாங்கும்போது இது இன்னும் விலை குறைவானதாக மாறும் என கூறப்படுகிறது.

இங்கு என்ன விலை?

இங்கு என்ன விலை?

இதே மகாராஷ்டிராவில் S1 ரக வாகனத்தின் விலை 94,999 ரூபாயாகவும், இதே S1 proவின் விலையானது 1,24,999 ரூபாயாகவும் இருக்கும்.

இதே ராஜஸ்தானில் S1 ரக வாகனத்தின் விலை 89,968 ரூபாயாகவும், இதே S1 proவின் விலையானது 1,19,138 ரூபாயாகவும் இருக்கும்.

இதே மற்ற மாநிலங்களில் S1 ரக வாகனத்தின் விலை 99,999 ரூபாயாகவும், இதே S1 proவின் விலையானது 1,29,999 ரூபாயாகவும் இருக்கும்.

கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்

கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்

எனினும் ஓலாவின் இந்த விலை விகிதமானது மாநில அரசுகளின் வரி விகிதம் என்பது சேர்க்கப்படாமல் உள்ளது. இதனுடன் பதிவு கட்டணம் மற்றும் இன்சூரன்ஸ் கட்டணங்கள் சேர்க்கப்படும் போது இன்னும் சற்று விலை அதிகமானதாக தெரியலாம்.

இஎம்ஐ ஆப்சன் உண்டு

இஎம்ஐ ஆப்சன் உண்டு

ஓலா தனது விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் சில நிதி நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் மாதந்தோறும் தவணை தொகையாக 2,999 ரூபாய் முதல் செலுத்த வேண்டியிருக்கும் என்று அறிவித்துள்ளது.

எப்போது டெலிவரி

எப்போது டெலிவரி

பல அம்சங்களுடன் வெளியாகியுள்ள இந்த ஸ்கூட்டர், நாட்டில் 1000 நகரங்களில் டெலிவரி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 8ல் இருந்து வாங்க தொடங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அக்டோபர் மாதத்தில் இருந்து தான் டெலிவரி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் ஆர்வம்

வாடிக்கையாளர்களின் ஆர்வம்

ஏற்கனவே ஓலாவின் இந்த ஸ்கூட்டர்களை 499 ரூபாய் முன்பணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், வெறும் 24 மணி நேரத்தில் 1 லட்சம் ஸ்கூட்டர்களுக்கு மேல் புக்கிங் செய்யப்பட்டு வரலாறு படைத்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் தற்போது வரையில் ஓலாவின் எஸ் 1 வாகனத்தினை 499 ரூபாயில் புக் செய்து கொள்ளலாம் என இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பவிஷ் அகர்வால் கூறியுள்ளார்.

பிற வசதிகள்

பிற வசதிகள்

ஓலா S1 வாகனத்தின் ஐகானின் ட்வின் ஹெட்லேம்ப்ஸ், அலாய் வீல்கள், உள்ளிட்ட பல அம்சங்களுடன், இரண்டு வாகனத்திலும் ஒரே எலக்ட்ரிக் மோட்டார் தான் இடம் பெற்றிருக்கிறது. 8.5 kW திறன் கொண்டு இந்த மோட்டார் உள்ளது. இந்த பைக்கில் ஸ்மார்ட் வெஹிகிள் கண்ட்ரோல் யூனிட் இடம்பெற்றுள்ளது. இது தவிர 3 ஜிபி ரேம் மெமரி, 4ஜி கனெக்டிவிட்டி, வைஃபை, புளூடூத் வசதி உள்ளிட்ட பல வசதிகளும் உள்ளன.

தமிழகத்திற்கு பெருமை

தமிழகத்திற்கு பெருமை

மொத்தத்தில் மின்சார வாகன சந்தையில் புதிய சரித்திரம் படைக்கவுள்ள ஓலா நிறுவனம், தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதனால் வேலை வாய்ப்புகளும் பெருகும். மின்சார வாகனங்களினால் சுற்றுசூழலும் பாதுகாக்கப்படும் என்பது நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: ola ஓலா
English summary

Ola S1 to be cheaper in Gujarat, Delhi and Rajasthan; check price range, EMI, booking & delivery date

Ola latest updates.. Ola S1 to be cheaper in Gujarat, Delhi and Rajasthan; check price range, EMI, booking & delivery date
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X