ஓல்டு இஸ் கோல்டு தான்.. 1 ரூபாய்க்கு ரூ.45,000.. காயின் பஜாரில் உள்ள சூப்பர் சான்ஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பழையது என்றுமே பொக்கிஷம் தான். அது எதுவானாலும் சரி. ஓல்ட் இஸ் கோல்ட் என பழமொழியே உண்டு. இந்த பழமொழியை உண்மை என நிரூபிக்கும் விதமாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

 

அது உங்களிடம் பழைய ஒரு ரூபாய் நோட்டு இருந்தால், அதனை வைத்து 45,000 ரூபாய் சம்பாதிக்க உங்களுக்கு அருமையான வாய்ப்பு உள்ளது என்பது தான்.

உற்பத்தியை நிறுத்திய யமஹா.. தொழிற்சாலை தற்காலிகமாக மூடல்.. ஊழியர்கள் நிலை என்ன..?!

பலருக்கும் பழைய பொருட்கள் சேகரிப்பு என்பது பொழுதுபோக்கான விஷயமாக இருக்கலாம். சிலர் இதனையே தொழிலாகவும் செய்தும் வருகின்றனர்.

பழைய நாணய கலெக்சன்

பழைய நாணய கலெக்சன்

அந்த வகையில் பலரும் பழைய காலத்து நாணயங்களான 5 பைசா, 10 பைசா, 20 பைசா, 25 பைசா, 50 பைசா என பலவற்றையும் பார்த்திருப்போம். சிலர் சேகரித்தும் வைத்திருக்கலாம். இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் அணாக்களையும் சேகரித்து வைப்பவர்களும் உள்ளனர். ஆனால் இதனுடைய இன்றைய மதிப்பு பல லட்சங்கள், பல ஆயிரங்கள். அது விற்பனை செய்யும் இடத்தினை பொறுத்து.

1 ரூபாய் நோட்டிற்கு 45,000 ரூபாய்

1 ரூபாய் நோட்டிற்கு 45,000 ரூபாய்

அந்த வகையில் 1 ரூபாய் நோட்டினை 45,000 ரூபாய் கொடுத்து உங்களிடம் வாங்க தயாராக இருகிறார்கள் பலர். ஆக உங்களது பழைய பொக்கிஷங்களை மாற்றி பணமாக பெற்றுக் கொள்ளலாம். எனினும் இதற்கு சில கன்டிசன்களும் உண்டு. ஒன்று இந்த ரூபாய் நோட்டு 1957ம் ஆண்டு அச்சிடப்பட்டதாக இருக்க வேண்டும். அதில் அப்போதைய நிதியமைச்சர் ஹிருபாய் எம் பட்டேலின் கையெழுத்து இருக்க வேண்டும்.

காயின்பஜாரில் விற்பனை செய்யலாம்
 

காயின்பஜாரில் விற்பனை செய்யலாம்

இந்த அரிய நோட்டினை காயின்பஜார் இணையம் (https://coinbazzar.com/) மூலம் விற்பனை செய்து கொள்ளலாம். இந்த ரூபாய் நோட்டினை 44,999 ரூபாய்க்கு விற்பனை செய்து கொள்ளலாம். இந்த இணையத்தின் மூலம் ரூபாய் நோட்டுகள் மட்டும் அல்ல, பழைய காயின்களையும் விற்பனை செய்து கொள்ளலாம்.

பல நாணயங்கள்- ரூபாய்கள் விற்பனை

பல நாணயங்கள்- ரூபாய்கள் விற்பனை

இதற்காக நீங்கள் பல ஆயிரங்கள் வாங்கிக் கொள்ளலாம். சில சமயங்களில் பழைய அரிய வகை பொருட்கள் கோடிக்கணக்கில் விற்பனைக்கு செல்வதும் உண்டு. அந்த வகையில் காயின் பஜார் ஒரு ரூபாய், 100 ரூபாய் நோட்டுகள், பல நாட்டு நாணயங்கள் என பலவற்றையும் வாங்கிக் கொள்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: rupee india ரூபாய்
English summary

Old is gold.. One rupee note bundle now worth Rs.45,000: check full details here

Old is gold.. One rupee note bundle now worth Rs.45,000: check full details here
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X