100 ஆண்டுகளில் பார்த்திராத இந்திய பட்ஜெட்.. பெரும் சிக்கலில்.. உண்மை நிலவரம் தான் என்ன..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட் அறிக்கையானது வெளியிடப்பட்டது. ஏனெனில் கடந்த ஆண்டு கொரோனாவின் மூலம் தாக்கப்பட்ட பின்பு, பொருளாதாரம் மிக மோசமான சரிவினைக் கண்டது.

 

இதன் காரணமாக பொருளாதாரத்தினை மீட்டெடுக்கவும், தொழிற்துறைகளுக்கான பல அறிவிப்புகளும் வரும் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் தற்போது அந்த நம்பிக்கையானது கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியுள்ளது. பரவி வரும் இரண்டாம் கட்ட பரவலானது அந்த நம்பிக்கையை தகர்த்துக் கொண்டுள்ளது.

மதிப்பிட முடியா அளவு தாக்கம்

மதிப்பிட முடியா அளவு தாக்கம்

ஏனெனில் கொரோனாவின் இரண்டாம் கட்ட பரவல் என்பது மதிப்பிட முடியா அளவுக்கு தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது. குறிப்பாக பலி எண்ணிக்கையானது அதிகரித்து கொண்டே செல்லும் இந்த நிலையில், பல லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். தொழிற்துறைகள் பலவும் முடங்கியுள்ளன. அதிலும் பல மாநிலங்களில் தாக்கத்தினை குறைக்கும் விதமாக முழு லாக்டவுன் அமல்படுத்தபட்டுள்ளது. இதனால் இன்னும் பொருளாதாரம் பின்னடைவை நோக்கி செல்லலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

பட்ஜெட் இலக்கு

பட்ஜெட் இலக்கு

இதற்கிடையில் போதிய மருத்துவ கட்டமைப்பு வசதிகள் இன்மை, உள்கட்டமைப்பு வசதிகள், மருந்து பற்றாக்குறை, ஆக்சிஜன் தட்டுப்பாடும் நிலவி வருகின்றது. ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடான இந்தியாவில், கடந்த பட்ஜெட் அறிக்கையில் உள்கட்டமைப்பு மற்றும் ஹெல்த்கேர் துறையினை மீட்டெடுப்பது தான் இலக்காகவும் இருந்தது. ஆனால் தற்போது நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் இது நிறைவேறுமா? என்பது சந்தேகமாகத் தான் பார்க்கப்படுகிறது.

வருவாய் முடக்கம்
 

வருவாய் முடக்கம்

ஏனெனில் கொரோனாவின் காரணமாக நாடே முடங்கிய நிலையில், அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் முடங்கியது. அதோடு மேற்கண்ட மூலதன முதலீடுகளுக்கு, சில பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதன் மூலம் கிடைக்கும் நிதியினை பயன்படுத்த திட்டமிட்டிருந்த நிலையில், அதுவும் முடியாத நிலையில், புதிய முதலீடுகள் கேள்விக்குறியாக உள்ளன.

100 ஆண்டுகளில் இல்லாத பட்ஜெட்

100 ஆண்டுகளில் இல்லாத பட்ஜெட்

இதுபோன்ற வரவு செலவு திட்டத்தினை 100 ஆண்டுகளில் இந்தியா பார்க்காது என்றும் அப்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது. ஏனெனில் அந்த நேரத்தில் கொரோனா தடுப்பூசி மற்றும் நுகர்வோர் தேவையானது பலமாக அதிகரித்தது. கடந்த ஆண்டில் துவணடு போன பொருளாதாரமும் அப்போது மீண்டு வர தொடங்கியது.

கொரோனாவுடன் போராட்டம்

கொரோனாவுடன் போராட்டம்

ஆனால் தற்போது இந்தியா அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக, இரண்டாவது நாடாக கொரோனா வைரஸ் உடன் போராடி வருகின்றது. நாள் ஒன்றுக்கு சுமார் 3 லட்சம் கொரோனா புதிய வழக்குகளை பதிவு செய்து வரும் நிலையில், பலி எண்ணிக்கையானது நாள் ஒன்று 4,000 ஆயிரத்துக்கு மேலாக அதிகரித்துள்ளது. ஆக மொத்தத்தில் பட்ஜெட்டில் கணிக்கப்பட்ட பெரும்பாலான கணிப்புகள் தற்போது நிச்சயமற்ற நிலையில் உள்ளன.

கேள்விக்குறியான பொருளாதாரம்

கேள்விக்குறியான பொருளாதாரம்

இதனால் தற்போது முதலீடுகளை இந்த நெருக்கடியான நிலையானது கேள்விக் குறியாக்கியுள்ளது. இதற்கிடையில் பல்வேறு ஆய்வு நிறுவனங்கள் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் குறித்தான கணிப்புகளை மீண்டும் மாற்றியமைத்து வருகின்றனர். மூடிஸ் நிறுவனம் இந்தியாவின் ஜிடிபி விகிதத்தினை 13.7%ல் இருந்து 9.3% ஆக குறைத்துள்ளது.

தாமதமாகி வரும் தனியார்மய நடவடிக்கை

தாமதமாகி வரும் தனியார்மய நடவடிக்கை

தடுப்பூசி செலவினங்களுக்காக அரசு பட்ஜெட்டில் கணிசமான தொகையை ஒதுக்கியது. ஆனால் இரண்டாம் கட்ட பரவலுக்காக எந்த நிதியினையும் ஒதுக்கீடு செய்யவில்லை. இதனால் அரசுகள் தற்போது பல செலவினங்களை குறைக்க வேண்டியிருக்கும். தற்போது கொரோனா பரவல் காரணமாக தனியார்மய நடவடிக்கையும் தாமதமாகி வருகின்றது.

பங்கு விற்பனை

பங்கு விற்பனை

எப்படியிருப்பினும் இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் சில நிறுவனங்களின் பங்கினை விற்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், ஏர் இந்தியா உள்ளிட்ட பங்குகள் விற்பனை செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர இரு வங்கிகள் மற்றும் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பங்கும் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Once in a 100 years budget runs into trouble as covid- 19 strikes back

Coronavirus impact.. 100 years budget runs into trouble as covid- 19 strikes back
Story first published: Monday, May 17, 2021, 14:37 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X