ஆயில் அன்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (ONGC) நிறுவனத்தின் பங்கு விலை 15 ஆண்டுகளில், முதன் முறையாக 100 ரூபாய்க்கு கீழ் சரிந்து தற்போது வர்த்தகமாகி வருகிறது.
குறிப்பாக சொல்லவேண்டுமானால் இன்று 96.60 ரூபாய் வரை சென்ற பங்கு விலையானது, தற்போது 99.35 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
இதன் சந்தை மதிப்பானது சுமார் 1,25,740 கோடி ரூபாயாக உள்ளது. இது முந்தைய மூன்று வருட பணப்புழக்கத்தை விட குறைவாகவே உள்ளது.
பாபாஜிக்கு அசுர வளர்ச்சியால்ல இருக்கு.. ஏர் போர்ட்லேயே சட்டுன்னு கடை விரிச்சிட்டாரே!

லாபம் வீழ்ச்சி
சரி அரசு நடத்தி வரும் ஒரு மிகப்பெரிய எண்ணெய் நிறுவனம் இந்த அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது ஏன்? எதற்காக இப்படி ஒரு வீழ்ச்சியை கண்டுள்ளது. காரணம் என்ன? உண்மையை சொல்லப்போனால் கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் இதன் லாபம் 47.07% வீழ்ச்சி கண்டு 4,151.63 கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. இதே இதன் வருவாய் 23,710.05 கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் 27,694.09 கோடி ரூபாயாக இருந்துள்ளது. ஆக இந்த முடிவுகள் மிக ஏமாற்றமளிக்கும் விதமாக உள்ளதாக நம்பப்படுகிறது.

பங்கு விற்பனை வேண்டாம்
லாபம் வீழ்ச்சி ஒரு புறம் இந்த பங்கு விலை வீழ்ச்சிக்கு வழி வகுத்துள்ளது என்றாலும், மத்திய அரசின் பங்கு விற்பனையானது முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு வேதனையை கொடுத்துள்ளது என்றே கூறலாம். கடந்த இரண்டு ஆண்டுகளில் ஓஎன்ஜிசி-யில் அரசாங்கத்தின் பங்குதாரர்கள் டிசம்பர் 2019வுடன் முடிவடைந்த காலாண்டில் 62.78% குறைந்துள்ளது. இதுவே டிசம்பர் 2017ல் 67.72% இருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்னும் வீழ்ச்சி காணலாம்
மத்திய அரசின் பங்கு விற்பனை திட்டமானது, மத்திய அரசின் 2021ம் நிதியாண்டின் இலக்கான 2,10,000 கோடி ரூபாய் இலக்கை அடைவதற்கு அரசாங்கத்தின் பங்குகள் விற்பனை வழிவகுக்கும் என்றும், கடந்த வாரம் எஸ்பிஐகேப் செக்யூரிட்டீஸ் கூறியுள்ளது. ஆக இனி வரும் காலங்களில் ஓஎன்ஜிசி பங்கின் விலையானது இன்னும் குறைய வாய்ப்புள்ளதாக முதலீட்டாளர்கள் மத்தியில் கருத்துகள் நிலவி வருகிறது.

நம்பிக்கை இழப்பு
முந்தைய ஆறு மாதங்களுடன் ஒப்பிடும்போது செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த அரை ஆண்டுக்கு உள்நாட்டு எரிவாயு விலை கடுமையாக வீழ்ச்சியடையும் என்று ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். மேலும் கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த 9 மாதத்தில் 4.3% எண்ணெய் உற்பத்தி குறைந்துள்ளது. மேலும் உற்பத்தி மேம்பாடு குறித்த நம்பிக்கை குறைவாக உள்ளது என்றும், ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் இருந்து அறிய முடிகிறது. இதனால் இந்த பங்கின் மீதான நம்பிக்கையை முதலீட்டாளர்கள் இழந்துள்ளனர். இதனால் பங்கு விலையானது தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது.