தீபாவளி சமயத்தில் வெங்காயம் விலை 100% அதிகரிக்கலாம்.. ஷாக் கொடுக்கும் அறிக்கை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெங்காயம் விலை மீண்டும் வரவிருக்கும் விழாக்கால பருவத்தில் உச்சத்தினை தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

பொதுவாக விழாக்கால பருவங்களில் அத்தியாவசிய பொருட்களான வெங்காயம் உள்ளிட்ட பலவற்றின் விலை அதிகரிக்கும். இதனால் மக்கள் சாதாரண நாட்களை விட அதிக விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

சென்னை, குஜராத் ஆலைகள் நிறுத்தம்.. ஃபோர்டு டீலர்களின் கதி என்ன.. ரூ.2000 கோடி செலவு என்னாவது..!

இதற்கிடையில் வரவிருக்கும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் வெங்காயத்தின் விலை உயர்ந்த நிலையில் இருக்கும்.

விலை அதிகரிக்கலாம்

விலை அதிகரிக்கலாம்

சுற்றுசூழல் மாறுபாடு காரணமாக அறுவடை தாமதமாகலாம். இதனால் விழாக்கால பருவத்தில் சந்தைக்கு வரத்து என்பது குறைவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் தேவை அதிகரிக்கும் இந்த பருவத்தில், பற்றாக்குறை என்பது மேற்கொண்டு விலை அதிகரிப்புக்கு வழிவகுக்கலாம் என கிரிசில் அறிக்கை கூறுகின்றது.

பயிர்கள் உற்பத்தி பாதிப்பு

பயிர்கள் உற்பத்தி பாதிப்பு

டக்டே சூறாவளி காரணமாக கரீப் பருவத்தில் பயிர்கள் பயிரிடுவது தாமதமாகியது. பயிரிடப்பட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதனால் உற்பத்தியும் குறையலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. நடப்பு ஆண்டில் வெங்காயத்தின் விலையானது கடந்த 2018வுடன் ஒப்பிடுகையில், 100% அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உற்பத்தி குறையலாம்
 

உற்பத்தி குறையலாம்

மகாராஷ்டிராவில் பயிர் நடவு செய்வதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, கரீப் பருவத்தில் விலை கிலோவுக்கு 30 ரூபாயினை தாண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உற்பத்தி முந்தைய ஆண்டினை காட்டிலும் 1 - 5% குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் வெங்காயத்தின் விலை குறைய வாய்ப்புள்ளது.

விலையை கட்டுப்படுத்த என்ன செய்ய

விலையை கட்டுப்படுத்த என்ன செய்ய

நடவு செய்வதற்கான முக்கிய மாதமான ஆகஸ்ட் மாதத்தில் மழை பற்றாகுறையால், பயிர் செய்வது தாமதமானது. இதனால் உற்பத்தியும் குறையலாம் என எதிர்பார்கப்படுகிறது. எனினும் இந்த நேரத்தில் விலையை கட்டுக்குள் வைக்க, ஏற்றுமதியை குறைக்கலாம். இதன் மூலம் விலை குறைய வாய்ப்புள்ளது என கிரிசில் அறிக்கையானது சுட்டிக் காட்டியுள்ளது.

கடந்த ஆண்டு நிலவரம் என்ன?

கடந்த ஆண்டு நிலவரம் என்ன?

கடந்த ஆண்டில் பண்டிகை காலத்தில் வெங்காயத்தின் விலையானது இரு மடங்காக அதிகரித்தது. குறிப்பாக கடந்த ஆண்டின் இறுதியில் வெங்காயம் அறுவடை சமயத்தில் அதிகப்படியான பருவமழை காரணமாக, வெங்காய விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டது. சொல்லப்போனால் வழக்கமான அறுவடையில் குறைந்தபட்சம் 10% குறைந்ததாக அப்போது தரவுகள் சுட்டிக் காட்டின.

உச்சம் தொட்ட விலை

உச்சம் தொட்ட விலை

இதே காலகட்டத்தில் விநியோக சங்கிலியும் பாதிக்கப்பட்ட நிலையில், வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக வெங்காயம் விலை மக்களை அப்போதும் பெரும் பாதிப்புக்குள்ளாக்கியது. அந்த சமயத்தில் அரசு இறக்குமதி சலுகைகளை ஊக்குவித்திருந்தாலும், வெங்காயத்தின் விலையானது, கிலோ 150 ரூபாய் முதல் 160 ரூபாய் வரையிலும் கூட விற்பனையாகியது.

விவசாயிகள் ஆர்வம்

விவசாயிகள் ஆர்வம்

இந்த நிலையில் நடப்பு ஆண்டில் முக்கியமாக ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் கரீப் பருவ பயிரை சீரற்ற மழை மற்றும் கனத்த மழை என்பது மோசமாக பாதித்தது.

நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை என்பது ஜூன் 3ம் தேதியன்று தொடங்கியது. இது கரீப் பருவத்திற்கு நல்ல தொடக்கத்தினை கொடுத்தது. விவசாயிகளும் எளிதில் அழுகும் தக்காளியை விட, வெங்காயம், மிளகாயை பயிரிடவே அதிகம் விரும்புகின்றனர். எனினும் பருவ நிலை மாறுபாட்டால் உற்பத்தி பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராபி பருவ பயிர்கள்

ராபி பருவ பயிர்கள்

சராசரியாக இந்தியாவினை பொறுத்தவரையில் வெங்காயத்தின் நுகர்வானது ஒவ்வொரு மாதமும், 13 லட்சம் டன்னாக இருக்கிறது. இதற்காக கரீப், தாமதமான கரீப், ராபி பருவத்தில் பயிர்கள் பயிரிடப்படுகின்றன. இந்த பருவங்களில் ராபி பருவம் என்பது மொத்த உற்பத்தியில் 70% பங்களிப்பு செய்கின்றது.

கரீப் பருவம்

கரீப் பருவம்

எனினும் இந்தியாவின் முக்கியமான பண்டிகை காலக்கட்டம் என்றால் அது செப்டம்பர் - நவம்பர் தான். இந்த காலகட்டத்தில் கரீப் பருவ வெங்காயம் தான் முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த கரீப் பருவத்தில் மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரா , கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் அதிக வெங்காயத்தினை உற்பத்தி செய்கின்றன. இது மொத்த கரீப் உற்பத்தியில் 75% அதிகமாகும். ஆனால் பருவழையின் காரணமாக மகாராஷ்டிராவில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

2- 3 வாரங்கள் தாமதமாகலாம்

2- 3 வாரங்கள் தாமதமாகலாம்

மொத்தத்தில் கரீப் பருவ பயிர்களின் சந்தை வரத்து என்பது 2 - 3 வாரங்கள் தாமதமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரையில் விலை என்பது அதிகமாக இருக்கலாம். விலையை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 2022ம் நிதியாண்டில் 2 லட்சம் டன் இருப்பு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Onion prices may high this festival season on erratic monsoon

Onion prices may increase of more than 100% in coming festival season due to erratic monsoon
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X