ஓரே மாதத்தில் 1.5 கோடி பேரின் வேலை பறிபோனது.. கண்ணீருடன் மக்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவை வாட்டி வதைத்து வரும் 2வது கொரோனா அலையில் மத்திய அரசு லாக்டவுன் மற்றும் ஊரடங்கு விதிகளை நடைமுறைப்படுத்தும் அதிகாரத்தை மாநில அரசுக்குக் கொடுத்த காரணத்தால் வேலைவாய்ப்பை இழப்போரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது என்று கூறலாம்.

 

இன்று தங்கம் விலை சரிவு.. இனி எப்படி இருக்கும்.. வாங்கலாமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன..!

இந்த நிலையிலும் மே மாதம் மட்டும் இந்தியா முழுவதும் சுமார் 1.5 கோடி பேர் தங்களது வேலைவாய்ப்பை இழந்துள்ளனர், இதன் மூலம் 2020 மார்ச் லாக்டவுன்-க்குப் பின் தற்போது வேலைவாய்ப்பின்மை அளவீடு புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

கொரோனா தொற்று

கொரோனா தொற்று

மே மாதத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ள நிலையில் பல மாநிலங்கள் கடுமையான லாக்டவுன் கட்டுப்பாடுகளை விதித்தது வேலைவாய்ப்பு சந்தையைக் கடுமையாகப் பாதித்தது.

கடுமையான லாக்டவுன்

கடுமையான லாக்டவுன்

தொற்று எண்ணிக்கை கட்டுப்படுத்த முடியாத நிலையைக் கடக்கும் போது எடுக்கப்பட்ட முடிவு தான் இந்தக் கடுமையான லாக்டவுன். இதனால் வகைப்படுத்தாத துறையில் அதிகமானோர் வேலைவாய்ப்பை இழந்தனர். குறிப்பாக 2020 லாக்டவுனுக்குப் பின் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் கடந்த 2 மாதங்களாக மாயமாகி வருகிறது.

ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்பின்மை

ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்பின்மை

கொரோனா தொற்றுக் கிராமங்கள், டவுன் பகுதிகளில் அதிகரித்துள்ளதால் மே மாதத்தில் ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்பின்மை 7.13 சதவீதத்தில் இருந்து 10.63 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மாநிலங்களின் லோக்கல் லாக்டவுன்
 

மாநிலங்களின் லோக்கல் லாக்டவுன்

லோக்கல் லாக்டவுன் மூலம் பெரும்பாலான வர்த்தகங்கள் இயங்கி வந்தாலும் வேலைவாய்ப்பு சந்தை பாதித்துள்ளது. ஏப்ரல் மாதம் முதல் அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை அளவீடு குறைந்த காலகட்டத்தில் ஒரு வருட உச்சத்தை அடைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: unemployment cmie job
English summary

Over 15 million lost jobs in May, jobless rate hits roof in 2021

Over 15 million lost jobs in May, jobless rate hits roof in 2021
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X