இந்தியாவின் மிக மோசமான பொருளாதார சரிவுக்கு.. பிஜேபி அரசு தான் காரணம்.. ப சிதம்பரம் பளார்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மோசமான பொருளாதார சரிவுக்கு..பிஜேபி அரசு தான் காரணம்..சிதம்பரம்!

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் 106 நாள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ப சிதம்பரம், ஜாமீன் மூலம் வெளிவந்த முதல் நாளே மத்திய பாஜக அரசை விட்டு விளாசியுள்ளார்.

அதிலும் இந்தியாவின் இந்த மோசமான பொருளாதார நிலைக்கு பிஜேபி அரசே காரணம் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த நிலையில் நிர்மலா சீதாராமன் நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை என்று கூறியிருந்த கருத்துக்கு, பின் நீங்கள் என்ன பட்டர் ஃப்ரூட்டையா சாப்பிடுவீர்கள் என்று கேலியாக கேட்டுள்ளார்.

பிஜேபி தான் காரணம்
 

பிஜேபி தான் காரணம்

பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ப சிதம்பரத்திற்கு, 106 நாட்கள் சிறை வனவாசத்திற்கு பிறகு கடந்த புதன் கிழமையன்றே ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த நிலையில் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் இந்தியாவின் தற்போதைய பொருளாதார நிலைக்கு பாஜக அரசு தான் காரணம் என்றும் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பொருளாதாரம் மற்றும் அதன் பிரச்சனைகள் பற்றி தெரிந்தவர்கள் அனைவரும் பாஜக அரசால் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்

ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்

இவ்வாறு மத்திய அரசை விட்டு வெளியேறிவர்களில் 23வது ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனும் ஒருவர். ரகுராம் ராஜன் தனது பதவிக்காலம் செப்டம்பர் 1, 2016 அன்று முடிவடைந்த நிலையில், அடுத்த முறை தொடர முடியாது என்றும் கூறினார். ஏனெனில் நான் ஒரு கல்வியாளன். ஆக இந்த பதவியில் தனக்கு விருப்பம் இல்லை எனவும் தனது கடிதத்தில் எழுதியிருந்தார்.

இந்திய பொருளாதாரம் மிகக் கவலைக்குரியது?

இந்திய பொருளாதாரம் மிகக் கவலைக்குரியது?

இந்திய பொருளாதாரம் குறித்த தனது கவலைகளை அவ்வப்போது ரகுராம் ராஜன் கொடுத்து வருகிறார். சமீபத்தில் இந்தியாவின் பொருளாதார நிலை கவலைக்குரியது என்றும் கூறியிருந்தார். மேலும் மின்சாரம் மற்றும், வங்கி சாரா நிதித் துறைகளில் உடனடி பிரச்சனைகளை அரசு சரிசெய்ய வேண்டும். மேலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி அறிமுகத்தால் இந்திய பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இந்திய பொருளாதாரம் பலவீனமான நிலையில் இருக்கும் போது இது வந்ததாகவும் கூறியிருந்தார்.

முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 

முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்

முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்ரமணியனின் பதவிக்காலம், ஜீன் 20, 2018 உடன் முடிவடைந்தது. இவர் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 2.5 சதவிகிதம் அதிகமாக மதிப்பிட்டுள்ளதாக கூறியபோது, இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆய்வாளர்கள் 2011 - 2012 முதல் 2016 - 2017 வரையிலான காலத்தில் சராசரி மொத்த உற்பத்தி விகிதம் 7 சதவிகிதமாக மதிப்பிடப்பட்டது. எனினும் சுப்ரமணியன் உண்மையான வளர்ச்சி விகிதம் 4.5 சதவிகிதமாக இருக்கலாம் என்றும் ஹார்வார்ட் பல்கலைகழகத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையில் கூறியிருந்தார்.

ஏன் பதவி விலகினார்?

ஏன் பதவி விலகினார்?

இந்த நிலையில் தனது சொந்த காரணத்திற்காக தனது பதவியை தொடர முடியாது என்றும் அவர் பதவியிலிருந்து வெளியேறினார். ஆனால் இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் இவர் தனது பதவிக்காலம் முடியும் முன்னரே வெளியேறியது தான். அமெரிக்காவில் பயின்ற இந்திய பொருளாதார நிபுணர் ஒருவர் பதவியில் இருந்து விலகுவது இதுவே முதல் முறை, எனினும் அவரின் விலகல் எனக்கு இழப்பை தந்துள்ளது என்று சொல்லி தெரியபடுத்த வேண்டியதில்லை என்று முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி அப்போது தனது கருத்தை தெரிவித்திருந்ததும் கவனிக்கதக்கது.

யார் இந்த அர்விந்த் பனகாரியா?

யார் இந்த அர்விந்த் பனகாரியா?

நிதி ஆயோக்கின் முதல் துணைத் தலைவரான அரவிந்த் பனகாரியா, கடந்த 2012ல் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டவர். அவரின் பதவிக்காலம் ஆகஸ்ட் 31, 2017வுடன் முடிவடைந்தது. அவர் தனது மீண்டும் கொலம்பிய பல்கலைகழகத்திற்கு செல்ல இருப்பதாக கூறப்பட்டது. இவர் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், உலக வர்த்தக அமைப்பு, ஐக்கிய நாடுகள் வணிகம் ஆகியவற்றில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரும் பதவிக்காலம் முடியும் முன்னரே தனது பதவியை ராஜினாமா செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உர்ஜித் படேல் ராஜினாமா

உர்ஜித் படேல் ராஜினாமா

இப்படி ஒவ்வொருவரும் மத்திய அரசுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் தான் பதவி விலகியதாக நம்பப்படுகிறது, மேலும் தற்போதைய பொருளாதார மந்த நிலையை பாஜக அரசு ஒரு சுழற்சி என்கிறது. கடவுளுக்கு நன்றி, ஏனெனில் அதை அவர்கள் பருவகாலம் என்றும் அழைக்கவில்லை. இது ஒரு கட்டமைப்பு. இந்த கட்டமைப்பு சிக்கல்களை தீர்க்க தீர்வுகள் அல்லது சீர்திருத்தங்கள் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்றும் ப சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

சீர்திருத்தம் இல்லை

சீர்திருத்தம் இல்லை

இப்ப்டி ஒவ்வொருவரும் மத்திய அரசுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் தான் பதவி விலகியதாக நம்பப்படுகிறது, மேலும் தற்போதைய பொருளாதார மந்த நிலையை பாஜக அரசு ஒரு சுழற்சி என்கிறது. கடவுளுக்கு நன்றி, ஏனெனில் அதை அவர்கள் பருவகாலம் என்றும் அழைக்கவில்லை. இது ஒரு கட்டமைப்பு. இந்த கட்டமைப்பு சிக்கல்களை தீர்க்க தீர்வுகள் அல்லது சீர்திருத்தங்கள் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்றும் ப சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

P Chidambaram said BJP government is reason for current economy situation

Congress leader P Chidambaram said BJP government is reason for current economy situation. Govt is calling the present slowdown was cyclical. I thank God they have not called it a seasonal.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X