பியுஷ் கோயலை சாடிய ப சிதம்பரம்.. 5 ட்ரில்லியன் டாலரைத் தொட்டு விடலாம் என ட்ரோல் வேறு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியப் பொருளாதாரம் மந்த நிலையைத் தாண்டி, இன்று நிதி நெருக்கடியிலும் சிக்கித் தவித்துக் கொண்டு இருக்கிறது.

 

மத்திய அரசுக்கு வர வேண்டிய வரி வருவாய்கள் குறைந்ததை, மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு நிறுவனங்கள் வழியாக நிரப்ப முயற்சித்துக் கொண்டு இருக்கிறது.

ஆனால், இந்தியாவில் முதலீடு செய்தவர்களிடம் கடுமையாக பேசுகிறது இந்த மத்திய அரசு.

என்ன பிரச்சனை

என்ன பிரச்சனை

கடந்த ஜனவரி 15, 16, 2020-ல் உலக ஆன்லைன் வியாபாரியான அமேசான், சம்பவ் (SMBhav) என்கிற பெயரில் சிறு குறு தொழில்முனைவோர்களுக்கான கூட்டத்தை டெல்லியில் நடத்தியது. இந்த கூட்டத்திலேயே அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசாஸ், இந்தியாவில் சிறு குறு தொழில்களை டிஜிட்டைஸ் செய்ய 1 பில்லியன் டாலர் முதலீடு செய்யப் போவதாகச் சொன்னார்.

பெரிய உதவி இல்லை

பெரிய உதவி இல்லை

இந்த முதலீட்டைக் குறித்துப் பேசிய பியுஷ் கோயல் "அமேசான் நிறுவனம் இந்தியாவில் 1 பில்லியன் டாலரை முதலீடு செய்வதால், இந்தியாவுக்கு எந்த ஒரு பெரிய உதவியையும் செய்யவில்லை" எனச் சொன்னார். இந்த கருத்துக்கு, முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் பதிலடி கொடுத்து இருக்கிறார்.

கண்டுக்காதீங்க
 

கண்டுக்காதீங்க

முதலில் பொருளாதாரத்துக்கு நோபல் பரிசு பெற்ற அபிஜித் பேனர்ஜி சொல்வதைக் கண்டு கொள்ளவில்லை. இப்போது அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசாஸை கண்டு கொள்ளவில்லை. பியுஷ் கோயல் மேற்கொண்டு கூகுள் நிறுவனத்தின் தலைவர் சுந்தர் பிச்சை சொல்வதையும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சத்யா நாதெல்லா சொல்வதையும் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார் ப சிதம்பரம்.

பொருளாதார வெளங்கிடும்

பொருளாதார வெளங்கிடும்

இப்படியே யார் சொல்வதையும் கண்டு கொள்ளாமல் இருந்தால் பொருளாதாரம் வளர்ந்துவிடும் என ட்ரோல் செய்து இருக்கிறார். இப்படி பியுஷ் கோயல், யார் சொல்வதை கண்டு கொள்ளாமல், யாருடைய கருத்துக்கும் செவி சாய்க்காமல் இருந்தால் தொடர்ந்து 5 மாதங்களாக சரிவில் இருக்கும் இறக்குமதியும், தொடர்ந்து 8 மாதங்களாக சரிவில் இருக்கும் ஏற்றுமதியும் அதிகரிக்கத் தொடங்கிவிடும் என பயங்கரமாக ட்ரோல் செய்து இருக்கிறார்.

அது ஒரு விஷயமே இல்ல

அது ஒரு விஷயமே இல்ல

அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பிசாஸை, பியுஷ் கோயல் கண்டு கொள்ளவில்லை என்றால், அவர்கள் செய்த முதலீட்டை பொருட்படுத்தவில்லை என்றால், ஜெஃப் பிசாஸ் போன்ற பெரு நிறுவன முதலாளிகளுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார் ப சிதம்பரம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

p chidambaram tweets about piyush goyal snub

Former finance minister P Chidambaram tweeted about Piyush goyal snub about 1 billion dollar amazon investment for digitizing SMEs.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X