இந்தியாவின் இடத்தை நிரப்ப முயலும் பாகிஸ்தான்.. மலேசியாவுக்கு ஆதரவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாகிஸ்தான் மலேசியாவிலிருந்து அதிக பாமாயிலை வாங்கும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடந்த செவ்வாய்கிழையன்று அறிவித்துள்ளார்.

 

இது ஒரு ராஜதந்திர திட்டமாக கூறப்படுகிறது. ஏனெனில் மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதியை இந்தியா முழுக்க கட்டுபடுத்திய பின்னர், இந்தியாவிற்கு விற்பனை செய்து வந்த பாமாயிலை இது ஈடு செய்ய உதவும் என்றும் மறைமுகமாக தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதிக்கு இந்தியா கடுமையான கட்டுப்பாடுகளை விதித்ததுடன், அவற்றை மலேசியாவிலிருந்து வாங்குவதை தவிர்க்குமாறும் முறைசாரா வகையில் வணிகர்களை கேட்டுக் கொண்டது.

இந்த பட்ஜெட்டில் தான் மிக அதிகம்.. வரலாறு காணாத அளவில் மத்திய அரசின் சொத்துக்கள் விற்பனை..!

மலேசியாவுக்கு ஆதரவாக பாகிஸ்தான்

மலேசியாவுக்கு ஆதரவாக பாகிஸ்தான்

உலகிலேயே எண்ணெய் இறக்குமதியில் முக்கிய பங்கு வகித்து வரும் இந்தியா, அதிகளவு இறக்குமதியையே நம்பி உள்ளது. இந்த நிலையில் மலேசியாவில் இருந்து அதிகளவிலான பாமாயிலை இறக்குமதி செய்து வருகிறது. காஷ்மீர் விவகாரம் மற்றும் குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் இந்திய அரசின் நிலைப்பாட்டை மலேசியா கடுமையாக விமர்சித்தது. இந்த நிலையில் மலேசியாவின் இந்த செயல் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்ததாகவும் அந்த சமயத்தில் செய்திகள் வெளியாகின.

நிறுத்தி வைப்பு

நிறுத்தி வைப்பு

இதே போல் எஃப்ஏடிஎஃப் (FATF)விவகாரத்திலும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக மலேசியா அந்த சமயத்தில் வாக்களித்தது. இந்த பிரச்சனையினால் பாகிஸ்தான் எஃப்ஏடிஎஃப்பின் பிளாக் லிஸ்ட் நடவடிக்கையில் இருந்து தப்பித்தது. ஆக இது போன்ற பல பிரச்சனைகளினால் மலேசியா பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த நிலையிலேயே, இந்தியா மலேசியாவுடனான பாமாயில் வர்த்தகத்தை முடித்துக் கொண்டது.

பாகிஸ்தான் பிரதமர் ஆலோசனை
 

பாகிஸ்தான் பிரதமர் ஆலோசனை

மலேசியா பிரதமர் மகாதீர் மொஹமட் செவ்வாயன்று மலேசியாவிற்கு விஜயம் செய்த கானுடன் பாமாயில் பற்றி விவாதித்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த சந்திப்பில் பாகிஸ்தான் பிரதமர் கான் மலேசியாவில் இருந்து அதிக அளவில் பாமாயிலை இறக்குமதி செய்து கொள்ளவதாக கூறியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தன்னால் முடிந்த அளவு ஈடு செய்யும்

தன்னால் முடிந்த அளவு ஈடு செய்யும்

மேலும் தன்னால் முடிந்த அளவு பாகிஸ்தான் அனைத்தையும் ஈடுசெய்யும் என்று கூறியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் கடந்த மாதம் பாகிஸ்தான் கடந்த மாதம் 1,35,000 டன் பாமாயிலை பாகிஸ்தான் வாங்கியிருக்கலாம். இது ஒரு வரலாற்று உச்சம். கடந்த ஆண்டு பாகிஸ்தான் மலேசியாவில் இருந்து 1.1 மில்லியன் டன் பாமாயிலை வாங்கியதாகவும், இதே இந்தியா 4.4 மில்லியன் டன் பாமாயிலை வாங்கியதாகவும் மலேசியா பாமாயில் கவுன்சில் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Pakistan plans to buy more palm oil to Malaysia

Pakistan will buy more palm oil from Malaysia, said Pakistan pm imran khan. And he aim to help offset sales after India put curbs on Malaysian imports.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X