எச்சரிக்கை.. இனி பான் எண் தவறாக கொடுத்தால் ரூ,10,000 அபராதம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : பான் கார்டு எண்ணுக்கான விதிமுறைகளின் படி, உங்கள் நிரந்தர கணக்கு எண் (பான் எண்) மற்ற விவரங்களுக்கிடையில், ஒர் படிவத்தை நிரப்பும் போது அதை சரியாக கொடுக்க வேண்டும்.

 

அதை தவறாக கொடுக்கும் பட்சத்தில் 10,000 ரூபாய் அபராதம் என்றும் கூறப்பட்டுள்ளது.

வருமான வரிச் சட்டம் 1961, பிரிவு 272பி இன் கீழ், யாராவது வருமான வரித் துறையின் கீழ், யாராவது தவறான பான் எண்ணைக் கொடுத்ததாகக் கண்டறியப்பட்டால், வருமான வரித் துறை 10,000 ரூபாய் வரை அபாராதம் விதிக்கக் கூடும்.

பான் எண் கட்டாயம்

பான் எண் கட்டாயம்

வருவான வரி தாக்கல் செய்யும் போதும், குறிப்பிட்ட நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள பான் கார்டு எண்ணை மேற்கோள் காட்டுவது கட்டாயமாக இருக்கும்போது விதிமுறை பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. 20க்கும் மேற்பட்ட விஷயங்களில் பான் மேற்கோள் கட்டாயமாக இருக்கும் என்றும் வருமான வரித்துறை கொண்டுள்ளது. வங்கிக் கணக்கைத் திறப்பது, மோட்டார் வாகனங்களை வாங்குவது, பங்குகள் கடன் பத்திரங்கள், பத்திரங்கள் உள்ளிட்ட 50,000 ரூபாய்க்கும் மேற்பட்ட விஷயங்களில் பான் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

முகவரிகள் மாறாது

முகவரிகள் மாறாது

பான் கார்டு ஒதுக்கப்பட்டதும், உரிமையாளர்கள் வாழ் நாள் முழுவதும் பான் கார்டு செல்லுபடியாகும் என்பதால் நீங்கள் மீண்டும் இதற்கு விண்ணபிக்க முடியாது. நீங்கள் முகவரிகளை மாற்றினாலும் அது மாறாது என்றும் கூறப்படுகிறது. உங்கள் பான் கார்டின் நகல்களை வழங்குமாறு வங்கிகள் அடிக்கடி கேட்கின்றன. இந்த நிலையில் நீங்கள் கவனக் குறைவாக படிவத்தில் தவறான எண்ணைக் கொடுத்திருந்தாலும், அதை எப்போதும் வங்கிகள் சரிபார்க்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

படிவம் 60 நிரப்பலாம்
 

படிவம் 60 நிரப்பலாம்

உங்களுக்கு பான் எண் நினைவில் இல்லை என்றால், இரண்டு ஆவணங்களும் இப்போது ஒன்றோடொன்று மாறக் கூடியதாக இருப்பதால், நீங்கள் ஆதார் எண்ணையும் மேற்கோள் காட்டலாம். மேலும் நீங்கள் பான் எண்ணிற்கு பதிலாக ஆதார் எண்ணை வழங்குவதற்கும் இது பொருந்தும். இது தவிர பான் எண் அல்லது ஆதார் எண்னை மேற்கோள் காட்டத் தவறியதற்காகவும் இந்த அபராதம் விதிக்கப்படலாம். உங்களிடம் பான் கார்டு இல்லையென்றால் வருமானமும் வரி விதிக்கப்படக் கூடிய வரம்பிற்குக் குறைவாக இருந்தல் படிவம் 60 அறிவிப்பை நிரப்புவது நல்லது.

பான் எண் செல்லாது

பான் எண் செல்லாது

ஒரே பான் கார்டின் பல நகல்களை நீங்கள் வைத்திருக்க முடியும். ஆனால் ஒரு நபர் பல பான் கார்டுகளை வைத்திருக்க அனுமதிக்கப்படுவதில்லை. வருமான வரிச்சட்டம் 1961, 272பி இன் கீழ் நீங்கள் அபராதம் செலுத்துமாறு கேட்கப்படலாம். மேலும் நீங்கள் இரண்டு பான் கார்டுகள் வைத்திருந்தால், விரைவில் அவற்றை சரணடைய அறிவுறுத்தப்படுகிறது. மேலும் ஆதார் உடன் இணைக்கப்படாத எந்த பான் எண்ணும், டிசம்பர் 31க்குப் பிறகு வருமான வரித் துறையால் செல்லாது என்ற அறிவிக்கப்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Pan card rules: Pan card rules: who give wrong pan number to filing tax and they will pay fine of Rs.10,000

Who give wrong pan number to filing tax and they will pay fine of Rs.10,000, and where it is mandatory to pan number for financial transactions.
Story first published: Sunday, November 10, 2019, 16:24 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X