இந்தியாவில் கொரோனா பாதிப்பு மக்களைப் பெரிய அளவில் பயமுறுத்திய நிலையில், மக்கள் தங்களைத் தொற்றில் இருந்து காப்பாற்றிக்கொள்ள ஒரு பக்கம் போராடிக்கொண்டு இருக்கும் வேளையில், மறுபுறம் தொற்று ஏற்பட்டால் மருத்துவச் செலவுகளில் இருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தில் அதிகளவில் முதலீடு செய்துள்ளனர்.
இந்தக் கொரோனா காலகட்டத்தில் இந்தியாவில் அனைத்துத் தரப்பு மக்களும் பாதுகாப்புக்காக ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தில் அதிகளவில் முதலீடு செய்துள்ளனர். குறிப்பாக 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் இருந்து எப்போதும் இல்லாத வகையில் அதிகளவிலானோர் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தில் முதலீடு செய்துள்ளனர் என ஆய்வுகள் கூறுகிறது
இதேபோல் இந்தக் கொரோனா பீதியை பயன்படுத்தி இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அதிக மதிப்புடைய ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தை மக்கள் மத்தியில் அதிகளவில் விற்பனை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாகத் தற்போது 1 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம் 30 வயதுடையவருக்கு வெறும் 18 ரூபாயில் இருந்து கிடைக்கும் காரணத்தால், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் போட்டிப்போட்டு விலையைக் குறைத்து அதிக மதிப்புடைய இன்சூரன்ஸ் திட்டங்களை விற்பனை செய்துள்ளது.
தடுமாறினாலும், தலைநிமிர்ந்த சென்செக்ஸ்..! 2020ல் 14 சதவீத வளர்ச்சி..!
இதேபோல 1 லட்சம் ரூபாய் முதல் 25 லட்சம் ரூபாய் வரையிலான ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தில் இந்த வருடம் அதிக க்ளைம் செய்யப்பட்ட காரணத்தால் இதன் ப்ரீமியம் விலை சுமார் 50 முதல் 100 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் 25 லட்சம் ரூபாய் முதல் 1 கோடி ரூபாய் வரையிலான ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்கள் சந்தைக்குப் புதியது என்பதாலும், இப்பிரிவுக்கான வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் மிகவும் குறைவு என்பதாலும் இதன் ப்ரீமியம் தொகை குறைவாக உள்ளது.
உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தைத் தேர்வு செய்யும் முன் சந்தையில் இருக்கும் அனைத்து திட்டங்களையும் ஆய்வு செய்து தேர்வு செய்யுங்கள்.