நஷ்டத்தில் பேடிஎம், போன் பே, அமேசான் பே..! கூகுள் பே மட்டும் பேட் லாபத்தில்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் கடந்த 2017 - 18 நிதி ஆண்டில் மட்டும், யூ பி ஐ என்றழைக்கப்படும் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இண்டர்ஃபேஸ் வழியாக சுமாராக 5.4 பில்லியன் (540 கோடி) பணப் பரிவர்த்தனைகள் நடந்து இருக்கிறதாம்.

 

இந்த 540 கோடி பணப் பரிவர்த்தனைகள் வழியாக சுமார் 8.76 லட்சம் கோடி ரூபாய் பணம் கைமாறி இருக்கிறதாம். இந்த பெரிய தொகை மற்றும் எண்ணிக்கை இந்த 2018 - 19 நிதி ஆண்டில் முதல் 6 மாதங்களிலேயே நடந்து விட்டதாம்.

அதாவது 2018 - 19 நிதி ஆண்டில் 2019 ஏப்ரல் முதல் 2019 செப்டம்பர் வரையான ஆறு மாத காலத்திலேயே யூ பி ஐ சேவை வழியாக சுமார் 500 கோடி பணப் பரிவர்த்தனைகள் நடந்து இருக்கிறது. இந்த 500 கோடி பணப் பரிவர்த்தனைகள் வழியாக 9 லட்சம் கோடி ரூபாய் பணம் கைமாறி இருக்கிறது.

ஆத்தாடி ஒரே வருடத்தில் 7000 கோடி ரூபாய்க்கு மார்க்கெட்டிங் & விளம்பரமா?

அசுர வளர்ச்சி

அசுர வளர்ச்சி

இப்படி யூ பி ஐ சேவையை, என் பி சி ஐ அமைப்பு கடந்த 2016-ம் ஆண்டில் தொடங்கியதில் இருந்தே, யூ பி ஐ பணப் பரிவர்த்தனைகள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு, அதிகரித்துக் கொண்டே இருக்கின்றனவாம். இவ்வளவு பெரிய பணப் பரிவர்த்தனை சந்தையைப் பிடிக்க கூகுள் பே, அமேசான் பே, பேடிஎம், போன் பே என முக்கியமான நான்கு முன்னணி நிறுவனங்களும் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு களத்தில் குதித்து இருக்கிறார்கள். அதற்கு என்ன ஆதாரம் என்று கேட்கிறீர்களா..?

விளம்பர செலவுகள்

விளம்பர செலவுகள்

கூகுள் பே, அமேசான் பே, பேடிஎம், போன் பே ஆகிய நான்கு நிறுவனங்களும் கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் மொத்தம் 7000 கோடி ரூபாயை விளம்பரம், மார்க்கெட்டிங், ப்ரொமோஷன் என செலவுகளைச் செய்து இருக்கிறார்களாம். கடந்த 2017 - 18 நிதி ஆண்டில் இந்த நான்கு நிறுவனங்கள் செய்த விளம்பரம் மற்றும் ப்ரொமோஷன் செலவுகள் சுமாராக 3,400 கோடி ரூபாயாகத் தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனை செலவு செய்து இவர்களால் லாபம் பார்க்க முடிகிறதா..? என்றால் பதில் இல்லை.

எவ்வளவு நஷ்டம்
 

எவ்வளவு நஷ்டம்

ப்ளூம்பெர்க் க்விண்ட் நிறுவனத்தின் 2018 - 19 நிதி ஆண்டின் பேட் (PAT - Profit After Tax) கணக்குப் படிப் பார்த்தால், பேடிஎம் நிறுவனம் 3,959 கோடி ரூபாய் நஷ்டத்தில் இருக்கிறது. போன் பே நிறுவனம் 1,904 கோடி ரூபாய் நஷ்டத்தில் இருக்கிறது, கூகுள் பே மட்டும் 5.1 கோடி ரூபாய் லாபத்தில் இருக்கிறது. அமேசான் பே 1,160 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்து இருக்கிறது.

யூ பி ஐ

யூ பி ஐ

இந்தியாவின் என் பி சி ஐ நிறுவனத்தின் யூ பி ஐ சேவை ஒரு Interoperable சேவை. இந்த சேவையை யார் வேண்டுமானாலும், இடைத்தரகராக இருந்து சேவையை வழங்கலாம். அதனால் தான் பல நிறுவனங்கள் இன்று நமக்கு யூ பி ஐ சேவையை வழங்கிக் கொண்டு இருக்கிறார்கள். இப்போது வரை யூ பி ஐ முறையில் பி 2 பி (Person to person) பணப் பரிமாற்றத்தைச் செய்ய எந்த நிறுவனமும் கட்டணங்களை வசூலிப்பது இல்லை. இந்தியாவில் நடக்கும் 90 சதவிகித யூ பி ஐ பணப் பரிவர்த்தனைகள் இந்த பி 2 பி பணப்பரிவர்த்தனைகள் தான். அப்படி என்றால் பேமெண்ட் நிறுவனங்களுக்கு வருவாய் வருவதில்லையா..?

வருவாய் Vs லாபம்

வருவாய் Vs லாபம்

பேடிஎம், போன் பே, கூகுள் பே, அமேசான் பே ஆகிய நான்கு நிறுவனங்களின் வருவாயையும் கடந்த 2018 - 19 நிதி ஆண்டுக்கு கணக்கிட்டால் 5,150 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி இருக்கிறார்கள். இது கடந்த 2017 - 18 நிதி ஆண்டில் ஈட்டிய 3,850 கோடி ரூபாயை விட சுமார் 33 சதவிகிதம் அதிகம் இருப்பினும் லாபம் தான் ஈட்டவில்லை. அதற்கு காரணம் மேலே சொன்ன விளம்பரம் மற்றும் ப்ரமோஷன் செலவுகள் தான். இந்த செலவுகள் கடந்த 2017 - 18 நிதி ஆண்டை விட 2018 - 19 நிதி ஆண்டில் கணிசமாக அதிகரித்து இருப்பது தான் காரணம் எனத் தெளிவாகப் புரிகிறது. ஆகையால் பேமெண்ட் நிறுவனங்களும் லாபம் ஈட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Payment companies are in loss

Payment companies like paytm, google pay, phone pe, amazon pay are facing loss in the payment business.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X