பேடிஎம் கம்பெனி, தன் அப்ளிகேஷனில், scratch card-ஐ அடிப்படையாகக் கொண்ட கிரிக்கெட் ப்ரொமோஷனைக் காட்டியது.
இது ஆன்லைன் சூதாட்டம் (Online Gambling) தொடர்பான விதிமுறைகளை, பேடிஎம் கம்பெனி மீறியதாகச் சொல்லி, கூகுள் கம்பெனி, கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பேடிஎம் செயலியை நீக்கியது.
கூகுள் தரப்பில் இருந்து, பல முறை பேடிஎம் கம்பெனியிடம், இந்த பிரச்சனையை சரி செய்யச் சொன்னார்களாம். ஆனால் பேடிஎம் மீண்டும் மீண்டும் கூகுளின் விதிமுறைகளை மீறியது என கூகுள் தரப்பில் சொன்னதாக இந்தியா டுடேவில் செய்தி வெளியாகி இருந்தது.
வந்தாச்சு 'ஜியோ பே'.. கூகிள் முதல் பேடிஎம் வரை இனி டன்டனக்கா தன்..!

மீண்டும் ப்ளே ஸ்டோரில் வந்த பேடிஎம் (Paytm)
அதே நாளில் சில மணி நேரங்களுக்குப் பிறகு, கூகுள் நிறுவனத்துடன் பேசி, கூகுள் ப்ளே ஸ்டோரில் மீண்டும் வந்தது பேடிஎம் (Paytm) செயலி. Paytm for Business, Paytm mall, Paytm Money போன்றவைகள் வழக்கம் போல ப்ளே ஸ்டோரில் கிடைத்துக் கொண்டு இருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் எகனாமிக் டைம்ஸ் பத்திரிகைக்குக் கொடுத்த பேட்டியில் சில காரசார கருத்துக்களை முன் வைத்து இருக்கிறார் பேடிஎம் கம்பெனியின் சி இ ஓ.

கூகுளுக்கு எதிரான போராட்டம் நீண்ட நெடியது
பேடிஎம் (Paytm) இந்திய விதிகளை முழுமையாக கடைபிடித்து வருகிறது. ஆனாலும் கூகுள் தன் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியதை கடுமையான விமர்சித்து இருக்கிறார். கூகுள் கம்பெனிக்கு எதிரான என் போராட்டம் நீண்ட நாட்களுக்கு இருக்கும் எனவும் பேடிஎம் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி விஜய் சேகர் சர்மா சொல்லி இருக்கிறார்.

கூகுளுக்கு எதிராக வழக்கு போடுவீர்களா
எகனாமிக் டைம்ஸ் பத்திரிகை தரப்பில் இருந்து, கூகுள் நிறுவனத்தை எதிர்த்து சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பீர்களா என்று கேட்டார்கள். அதற்கு "கூகுளுக்கு எதிரான போராட்டத்தில் எல்லா வழிகளும் திறந்து இருக்கின்றன" எனச் சொல்லி அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார் பேடிம் கம்பெனியின் முதன்மைச் செயல் அதிகாரி விஜய் சேகர் சர்மா.

கூகுள் பேமெண்ட் அப்ளிகேஷனிலேயே இருக்கு
இதே போன்ற விஷயங்கள் (Scratch Card), பல்வேறு செயலிகளில் செய்கிறார்கள். அவ்வளவு ஏன் கூகுள் கம்பெனியின் சொந்த பேமெண்ட் அப்ளிகேஷனான Google Pay செயலியில் கூட செய்கிறார்கள் என காரசாரமாகப் பேசி இருக்கிறார் பேடிஎம் கம்பெனியின் முதன்மைச் செயல் அதிகாரி விஜய் சேகர் சர்மா.

அமெரிக்க ஆதிக்கம்
மேலும் பேசியவர், இந்தியாவின் நாஸ்காம் மற்றும் IAMAI போன்ற அமைப்புகள், அமெரிக்காவின் பெரிய டெக்னாலஜி கம்பெனிகளால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது எனவும் விமர்சித்து இருக்கிறது. எனவே, நியாயமாக லோக்கல் டெக்னாலஜி கம்பெனிகளைப் பிரதிபலிக்கும் விதத்தில், புதிய அமைப்பைத் தொடங்க வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார். இது பற்றிய பேச்சுகள் நடந்து கொண்டு இருபப்தாகவும் சொல்லி இருக்கிறார் பேடிஎம் தலைவர் விஜய்.

கூகுள் தரப்பு
எங்கள் கூகுள் ப்ளே சூதாட்ட விதிமுறைகள் (Google Play Gambling Policy), ஆன்லைன் கெசினோக்களை அனுமதிப்பதில்லை. விளையாட்டுப் போட்டிகளில் பெட்டிங் செய்ய உதவும் வரைமுறை செய்யப்படாத சூதாட்ட செயலிகளுக்கு (unregulated gambling apps that facilitate sports betting) ஆதரவு கொடுப்பதில்லை எனச் சொல்லி இருக்கிறது கூகுள் தரப்பு.