ஓவர் நைட்டில் 350 பேர் கோடீஸ்வரர் ஆனார்கள்.. எந்த ஊரில் தெரியுமா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஓரே இரவில் 350 பேர் கோடீஸ்வரர் ஆனார்கள் என்றால் வெளிநாட்டில் தான் இருக்கும் எனத் தப்புக் கணக்கு போட வேண்டாம், வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியாவில் பல நிறுவனங்கள் உள்ளது. இந்தியாவில் இருக்கும் பல நிறுவனங்கள் தற்போது உலக நாடுகளுக்குத் தனது சேவையை விரிவாக்கம் செய்வதற்காகப் பணியாற்றி வருகிறது.

 

அந்த வகையில் தனது மாபெரும் ஐபிஓ மூலம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த இந்திய பேமெண்ட் மற்றும் டிஜிட்டல் நிதியியல் சேவை நிறுவனமான பேடிஎம் தான் ஓரே இரவில் 350 முன்னாள் மற்றும் தற்போதைய ஊழியர்களைக் கோடீஸ்வரர்களாக மாற்றியுள்ளது.

சோமேட்டோ: 1 பில்லியன் டாலர் முதலீட்டுத் திட்டம்.. 430 கோடி நஷ்டத்தால் மாஸ்டர் பிளான்..!

 ஸ்டார்ட்அப் நிறுவன

ஸ்டார்ட்அப் நிறுவன

பொதுவாக ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முக்கிய அதிகாரிகளைத் தங்களது நிறுவனத்தில் வைத்துக்கொள்ளவும், நிறுவனத்தை வலிமையாக அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லவும் சம்பளத்துடன் சேர்ந்து ESOP திட்டத்தின் மூலம் அதிகளவிலான ஊழியர்களுக்கு நிறுவனப் பங்குகளைக் கொடுப்பார்கள். இது கார்பரேட் நிறுவனத்தில் சற்றுக் குறைவு.

 பேடிஎம் நிறுவனம்

பேடிஎம் நிறுவனம்

இப்படிப் பேடிஎம் நிறுவனத்தில் துவக்க காலத்தில் பணியாற்றிய பல முக்கியமான ஊழியர்களுக்குப் பேடிஎம் நிர்வாகம் ESOP திட்டத்தின் மூலம் நிறுவன பங்குகளைக் கொடுத்துள்ளது. தற்போது பேடிஎம் ஐபிஓ வெளியிட்டு 18,300 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை பெற்றுள்ளது.

 பேடிஎம் ஐபிஓ
 

பேடிஎம் ஐபிஓ

பேடிஎம் நிறுவனம் வெளியிட்டுள்ள ஐபிஓ-வில் ஒரு பங்கு விலை 2,080 - 2,150 ரூபாய் வரையிலான தொகையில் விற்பனை செய்ய உள்ளது. இதன் மூலம் ஏற்கனவே நிறுவனப் பங்குகளை வைத்திருக்கும் பலரின் பங்குகள் இன்று பல கோடி ரூபாய்க்கு மதிப்பிற்கு உயர்ந்துள்ளது.

 350 கோ

350 கோ

இதன் மூலம் இந்த ஐபிஓ மூலம் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புடைய பங்குகளை வைத்துள்ள பேடிஎம் ஊழியர்கள் எண்ணிக்கை மட்டும் சுமார் 350 என ரெயூட்டர்ஸ் தெரிவித்துள்ளது. ஐபிஓ வாயிலாகப் பேடிஎம் சுமார் 350 கோடீஸ்வர்களை உருவாக்கியுள்ளது.

பேடிஎம் 2010ல் ஒரு சிறு அலுவலகத்தில் துவங்கப்பட்டு இன்று 10,000 ஊழியர்களைக் கொண்டு இயங்கி வருகிறது.

 16 பில்லியன் டாலர் மதிப்பீடு

16 பில்லியன் டாலர் மதிப்பீடு

ஐபிஓ மூலம் 18,300 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்த பேடிஎம் நிறுவனத்தின் மொத்த மதிப்பு 16 பில்லியன் டாலர். பேடிஎம் நிறுவனத்தின் ஐபிஓ வெளியிடும் போது ஆங்கர் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டிய நிலையில் முதல் 2 நாட்கள் பெரிய அளவில் முதலீடு செய்யவில்லை. 3வது நாளில் தான் பேடிஎம் ஐபிஓ பங்குகள் முழுமையாக விற்கப்பட்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Paytm creates 350 crorepatis overnight after India's Biggest IPO

Paytm creates 350 crorepatis overnight after India's Biggest IPO
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X