3,960 கோடி நஷ்டத்தில் பேடிஎம் தாய் நிறுவனம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் ஆன்லைன் பேமெண்ட்கள், பணப் பரிமாற்றங்கள் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் என பல டிஜிட்டல் களங்களில் தன் தடத்தை அழுத்தமாக பதிந்து இருக்கும் நிறுவனம் பேடிஎம். இந்த பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனம் தான் ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ். இப்போது இந்த தாய் நிறுவனம் கடந்த நிதி ஆண்டைக் காட்டிலும் சுமார் 2.5 மடங்கு கூடுதல் நஷ்டம் கண்டிருக்கிறது.

 

கடந்த 2017 - 18 நிதி ஆண்டில் ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் மொத்த நஷ்டம் 1,491 கோடி ரூபாய். ஆனால் சமீபத்தையை 2018 - 19 நிதி ஆண்டில் பேடிஎம்-ன் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ்-ன் நிகர நஷ்டம் 3,960 ரூபாயாக அதிகரித்து இருக்கிறதாம்.

 3,960 கோடி நஷ்டத்தில் பேடிஎம் தாய் நிறுவனம்..!

கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் வருவாய் 3,050 கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. இந்த வருவாய் அதற்கு முந்தைய 2017 - 18 நிதி ஆண்டில் ஈட்டிய 2,987 கோடி ரூபாயை விட 2 சதவிகிதம் மட்டுமே அதிகம் என்பது கவனிக்கத்தக்கது.

பதஞ்சலி நிறுவனத்துக்கு 3,200 கோடி கடன் ஓகே..!

வருவாய் வளர்ச்சி நேர் எதிராக, செலவுகள் பயங்கரமாக அதிகரித்து இருக்கின்றன. கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் மொத்தம் 7,254 கோடி ரூபாய் செலவழித்து இருக்கிறது ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ். 2017 - 18 நிதி ஆண்டில் 4,718 கோடி ரூபாய் மட்டுமே செலவழித்து இருந்தது. இந்த 7,254 கோடி ரூபாயில் சுமார் 6,500 கோடி ரூபாயை இதர செலவுகள் என்றே கணக்கு காட்டி இருக்கிறார்களாம்.

ஏன் இவ்வளவு செலவு எனக் கேட்டால், சந்தையை தக்க வைத்துக் கொள்ளத் தான் என்கிறார்கள். சில வருடங்கள் முன்பு வரை இந்தியாவின் டிஜிட்டல் பேமெண்ட் சந்தையில் தனி நாயகனாக வலம் வந்த பேடிஎம் இப்போது கூகுள் பே மற்றும் போன் பே உடன் மல்லு கட்டிக் கொண்டு இருக்கிறது. இப்படி தன் சந்தையை முழுமையாக தக்க வைத்துக் கொள்ள பணத்தை அள்ளி இறைத்து இருக்கிறார்கள். அதனால் தான் செலவு இரண்டு மடங்கு அதிகரித்து இருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Paytm mother company one 97 communication report loss rs. 3960 crore

The one 97 communications is the mother company of the payment company paytm. This one 97 communication had reported a Rs. 3,960 crore loss due to higher expenses to retain their market share.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X