ஐஸ்கிரீம் முதல் ஐபோன் வரை: பேடிஎம்-ன் சூப்பர் ஈஎம்ஐ ஆஃபர்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நிதியியல் உலகில் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்வது என்பது சாதாரண விஷயமில்லை. ஒன்னு இல்லைன்னா இன்னொன்னு என்று மக்கள் வேகமாக அடுத்தடுத்த சேவைக்கு மாறும் நிலையில் உள்ளனர் மக்கள்.

 

இந்த நேரத்தில் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என வங்கிகளும், டிஜிட்டல் பேமெண்ட் நிறுவனங்களும் பல புதிய முயற்சிகளைச் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த வாரம் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு இல்லாமல் ரீடைல் கடைகளில் வாங்கும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்குக் கடைகளிலேயே Cardless EMI சேவையைக் கொடுத்து இவ்வங்கி வாடிக்கையாளர்களைக் குஷிப்படுத்தியது.

தற்போது பேடிஎம் தனது போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் அருமையான சேவையை அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

தைவான் நிறுவனத்தின் ரூ.1,100 கோடி முதலீடுக்கு ஒப்புதல்.. தமிழ்நாட்டு மக்களுக்கு ஜாக்பாட்..!

பேடிஎம் போஸ்ட்பெய்டு

பேடிஎம் போஸ்ட்பெய்டு

இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பேமெண்ட் மற்றும் டிஜிட்டல் நிதியியல் சேவை நிறுவனமாக விளங்கும் பேடிஎம், தனது போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாதத்தில் செய்த செலவுகள் அனைத்தையும் ஈஎம்ஐ-ஆக மாற்றிக்கொள்ளும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

5 லட்சம் கடைகள் மற்றும் வலைத்தளம்

5 லட்சம் கடைகள் மற்றும் வலைத்தளம்

இப்புதிய சேவை மூலம் பேடிஎம் போஸ்ட்பெய்டு எவ்விதமான தடையுமின்றி விருப்பமான பொருட்களை வாங்கலாம். பேடிஎம் பை நவ் மற்றும் பே லேட்டர் சேவை மூலம் வாங்கிய பொருட்களுக்கான தொகையைப் பேடிஎம் கணக்கில் சேர்த்துவிட்டு அதை எவ்விதமான பிரச்சனையும் இல்லாமல் ஈஎம்ஐ-ஆக மாற்றிக்கொள்ள முடியும்.

7 நாள்
 

7 நாள்

இப்புதிய சேவையின் கீழ் பேடிஎம் வாடிக்கையாளர்கள் ஒரு மாதம் முழுவதும் செய்த செலவுகளை ஒரே பில்லாக மாற்றப்பட்டு, பில் உருவாக்கப்பட்ட 7 நாட்களுக்குள் ஈஎம்ஐ-ஆக மாற்றிக்கொள்ள வேண்டும்.

மேலும் ஈஎம்ஐ-க்கான தொகையை யூபிஐ, டெபிட் கார்டு, நெட் பேங்கிங் போன்றவற்றின் மூலம் செலுத்தலாம்.

ஐஸ்கிரீம் முதல் ஐபோன் வரை

ஐஸ்கிரீம் முதல் ஐபோன் வரை

இந்தச் சேவை மூலம் பேடிஎம் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்கள் மளிகை பொருட்கள், பால், வீட்டுக்குத் தேவையான பொருட்கள் முதல், உணவு, மருந்து, எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், ஆடை, பர்னிச்சர், டாக்ஸி கட்டணம், ஈகாமர்ஸ் ஷாப்பிங் என அனைத்து பொருட்களுக்கும் பொருந்தும் என்பதால் அனைத்துத் தரப்பு மக்களும் அதைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

கொரோனா

கொரோனா

கொரோனா பாதிப்பால் இன்னும் பல இந்திய குடும்பங்கள் பொருளாதார ரீதியில் தடுமாறி வரும் நிலையில், பேடிஎம் நிறுவனத்தின் இந்த ஈஸி ஈஎம்ஐ ஆஃபர் பெரிய அளவில் அனைவருக்கும் உதவும்.

வரம்பு

வரம்பு

இந்தப் போஸ்ட்பெய்டு சேவைக்கு வாடிக்கையாளர்களின் நிதிநிலை அடிப்படையில் Lite, Delite மற்றும் Elite என 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. இதில் Lite வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாதம் 20,000 ரூபாய் வரையில் பொருட்களை வாங்கி ஈஎம்ஐ-ஆக மாற்றிக்கொள்ளக் கூடிய வசதியை பேடிஎம் அளிக்கிறது.

இதேபோல் Delite மற்றும் Elite வாடிக்கையாளர்களுக்கு 1,00,000 ரூபாய் வரையில் வரம்பு அளிக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: paytm emi பேடிஎம்
English summary

Paytm new flexible EMI option for postpaid users: Big surprise for common man

Paytm new flexible EMI option for postpaid users: Big surprise for common man
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X