இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பேமெண்ட் நிறுவனமான பேடிஎம் வியாபாரிகள் மற்றும் வர்த்தகர்களிடம் இருந்து பேமெண்ட் பெறுவதற்காக வசூலிக்கும் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்துள்ளது.
இதன் மூலம் இனி பேடிஎம் மூலம் பேமெண்ட்களைப் பெறும் வியாபாரிகள் ஜீரோ கட்டணத்தில் பேடிஎம் வேலெட், யூபிஐ ஆப்கள் மற்றும் ரூபே கார்டுகள் மூலம் பேமெண்ட் பெற முடியும்.
இதனால் வங்கிகள் மற்றும் இதர நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய 600 கோடி ரூபாய் தொகையைப் பேடிஎம் நிறுவனமே செலுத்த உள்ளது.
முதுமையிலும் சீரான வருமானம் வேண்டுமா? அரசின் தேசிய ஓய்வூதிய திட்டம் சரியான வழி..!

கொரோனா
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் காரணத்தால் இந்தியாவில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வர்த்தகப் பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் இந்தச் சூழ்நிலையில், பேடிஎம் பேமெண்ட் சேவையைப் பயன்படுத்தும் பல லட்சம் வியாபாரிகளுக்குச் சேவை கட்டணத்தை 100 சதவீதம் ரத்து செய்துள்ளது.

ஜீரோ கட்டணம்
பேடிஎம் நிறுவனத்தின் இந்த அறிவிப்பின் மூலம் இனி பேடிஎம் மூலம் பேமெண்ட்களைப் பெறும் வியாபாரிகள் ஜீரோ கட்டணத்தில் பேடிஎம் வேலெட், யூபிஐ ஆப்கள் மற்றும் ரூபே கார்டுகள் மூலம் பேமெண்ட் பெற முடியும்.
மேலும் இந்தப் பேமெண்ட் சேவைக்காக வங்கிகள் மற்றும் இதர நிதி நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய 600 கோடி ரூபாய் தொகையைப் பேடிஎம் நிறுவனமே செலுத்த உள்ளது.

கூடுதல் நிதி
சேவை கட்டணத்தை ரத்து செய்யப்பட்டதன் மூலம் கொரோனா காலத்தில் வியாபாரிகள் மத்தியில் கூடதல் நிதி வர்த்தகத்திற்காகச் செலவு செய்ய முடியும், இதனால் வர்த்தகம் மற்றும் பணப் புழக்கம் அதிகரிக்கும் எனப் பேடிஎம் நம்புகிறது.

லாபம்
பேடிஎம் நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் பேடிஎம் தளத்தில் இருக்கும் சுமார் 1.7 கோடி வியாபாரிகள் லாபம் அடைவார்கள் எனத் தெரிவித்துள்ளது. இதேபோல் வியாபாரிகள் தங்களது பேமெண்ட்-ஐ வங்கி கணக்கில் அல்லது பேடிஎம் வேலெட்-ல் பெற வாய்ப்பு அளித்துள்ளது.

பேடிஎம் ஆல் இன் ஒன் QR
இதேபோல் பேடிஎம் ஆல் இன் ஒன் QR சேவையின் கீழ் பேடிஎம் வேலெட், யூபிஐ, ருபே, NEFT மற்றும் RTGS போன்ற அனைத்துத் தளத்தில் இருந்தும் எண்ணிக்கை மற்றும் அளவில் வரம்பில்லா சேவையை ஜீரோ கட்டணத்தில் அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.