கொஞ்சம் பொறு ராஜா.. ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும்.. ப சிதம்பரம் பொளேர்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முன்னாள் நிதியமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப சிதம்பரம் சிலிண்டர் விலை அதிகரிப்பு குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

 

சிலிண்டர் விலை 25 ரூபாய் அதிகரிப்பினை தொடர்ந்து, தற்போது பாராளுமன்ற கூட்டத்தொடர் நடந்து கொண்டுள்ளது. இந்த கூட்டம் நடந்து முடிந்தவுடன், அரசாங்கம் ஒவ்வொரு நாளும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார்.

எண்ணெய் நிறுவனங்கள் கடந்த ஜூலை மாதம் கேஸ் விலையில் 25.50 ரூபாய் உயர்த்தின. இதற்கிடையில் நடப்பு மாதத்திலும் 25 ரூபாய் உயர்த்தியுள்ளன. கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் விலை மாறாமல் இருந்தது. இதற்கிடையில் பெட்ரோல் விலையும் இனி மீண்டும் உயரத் தொடங்கலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

எஸ்பிஐ-யின் சுதந்திர தின விழா சலுகை.. 0% செயல்பாட்டு கட்டணம்.. எத்தனை நாட்களுக்கு..!

சிலிண்டர் விலை அதிகரிப்பு

சிலிண்டர் விலை அதிகரிப்பு

காங்கிரஸ் தலைவர் ப சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் எல்பிஜி விலையானது, கடந்த ஒன்பது மாதங்களில் 265 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இனி பெட்ரோல், டீசல் விலையும் அதிகரிக்கும். அதற்காக காத்திருங்கள். அவை ஒவ்வொரு நாளும் அல்லது ஒவ்வொரு மூன்றாவது நாளும் அதிகரிக்கும். இப்போது பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால், அதிகரிக்கப்படாமல் உள்ளது என கூறியுள்ளார்.

அரசின் மீது பெரும் சுமை

அரசின் மீது பெரும் சுமை

இதற்கிடையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காங்கிரஸ் தலைமையிலான அரசு எண்ணெய் விலையைக் குறைப்பதற்காக 1.44 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன் பத்திரங்களை வெளியிட்டது. இது போன்ற நடவடிக்கைகளை தான் எடுக்க விரும்பவில்லை என்றும், அப்போது வெளியிடப்பட்ட கடன் பத்திரங்களுக்கு வட்டி வழங்க வேண்டிய மோசமான நிலை, பாஜக அரசின் தலையில் விழுந்துள்ளது.

ஏன் வரியை குறைக்க முடியவில்லை?
 

ஏன் வரியை குறைக்க முடியவில்லை?

இந்த சுமையினை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளதால் தான், பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். .

இதற்கிடையில் இது குறித்து ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள மற்றொரு ட்விட்டர் பதிவில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் நிவாரணம் அளிக்கும் வகையில் எண்ணெய் பத்திரங்களுக்கு வழங்கியதாக நிதியமைச்சரின் அறிக்கை வெளியிட்டுள்ளது ஆச்சரியமாக இருக்கிறது. இது அறியாமையை வெளிப்படுத்துகிறது என்றும் கூறியுள்ளார்.

அரசுக்கு உரிமை இல்லை

அரசுக்கு உரிமை இல்லை

எரிபொருள் மீதான அதிகப்படியான வரி மற்றும் செஸ் மூலம் பல மடங்கு லாபம் ஈட்டியதால், எரிபொருள் மானியம் குறித்து கருத்து தெரிவிக்க மோடி தலைமையிலான அரசுக்கு உரிமை இல்லை என்று கடுமையாகச் சாடியுள்ளார்.

தற்போதைய நிலவரம்

தற்போதைய நிலவரம்

தற்போது இந்தியாவில் பெட்ரோல் விலையானது 100 ரூபாயினை தாண்டி வர்த்தகம் செய்யப்பட்டு வருகின்றது. இதனால் விலைவாசி மேலும் உயர்ந்து வருகின்றது. இது கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களை மேற்கொண்டு மோசமான நிலைக்கு தள்ளியுள்ளது. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் சர்வதேச சந்தையில் விலை குறைந்த நிலையிலும் கூட, இந்தியாவில் எரிபொருள் விலையானது உச்சம் தொட்டது.

கஜானா நிரம்பியுள்ளது

கஜானா நிரம்பியுள்ளது

இது அரசின் வரி அதிகரிப்பு தான் முக்கிய காரணம் என்ற நிலையில், வரியை குறைக்க வேண்டும் என்று பலதரப்பில் இருந்தும் கோரிக்கைகள் இருந்து வருகின்றன. இதனால் அரசின் வருவாய் பட்டையை கிளப்பிக் கொண்டிருந்தாலும், மக்கள் மேலும் நெருக்கடியான நிலைக்கே தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு அரசு தரப்பில் வரியை குறைக்க முடியாது என்றே கூறப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் முந்தைய காங்கிரஸ் அரசு தான் என்று நிதியமைச்சர் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது யோசிக்க வேண்டியது தான்

இது யோசிக்க வேண்டியது தான்

மேலும் மக்களின் கவலை என்பது ஏற்புடையதே. ஆனால் மத்திய மாநில அரசுகள் விவாதித்து வழியை உருவாக்கும் வரையில் வேறு தீர்வு இல்லை. எண்ணெய் பத்திரங்கள் மீதான கடன் சுமை இல்லையெனில், எரிபொருள் மீதான கலால் வரியை குறைக்கும் நிலையில் நான் இருந்திருப்பேன் என நிதியமைச்சர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Petrol diesel price updates.. Petrol and diesel prices will increase daily Congress leader P Chidambaram says

Petrol diesel price updates.. Congress leader P Chidambaram has said that Petrol and diesel prices will increase daily
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X