11வது நாளாக அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலை.. இன்னும் எவ்வளவு தான் அதிகரிக்குமோ?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாடு முழுவதும் இன்று பரப்பரப்பாக பேசப்படும் விஷயங்களில் ஒன்று பெட்ரோல், டீசல் விலையும் தான். ஏனெனில் தொடர்ந்து 11 நாளாக இன்றும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

நாட்டில் கொரோனாவினை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் லாக்டவுனால் அடைபட்டு கிடந்தது. இதன் காரணமாக பெரும்பாலான வாகனங்கள் இயங்கவில்லை. பெரும்பாலான தொழிற்சாலைகளும் இயங்கவில்லை. எனினும் தற்போது லாக்டவுனில் சற்று தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

11வது நாளாக அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலை.. இன்னும் எவ்வளவு தான் அதிகரிக்குமோ?

இதன் காரணமாக பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தியா மட்டும் அல்ல, உலக நாடுகளில் சிலவும் லாக்டவுனில் தளர்வுகள் அளித்துள்ளன. இதனால் எரிபொருள் தேவையானது உலகம் முழுக்க அதிகரித்து வருகிறது. இதனால் கச்சா எண்ணெய் விலையும் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.இது எரிபொருள் விலையும் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.

ஒரு புறம் உற்பத்தியினை தொடங்கியுள்ள ஆலைகள், நிறுவனங்கள், போக்குவரத்தினை தொடங்கியுள்ள வாகனங்கள் என பலவும் இயங்க ஆரம்பித்துள்ள நிலையில், எரிபொருளின் விலை மீண்டும் உச்சத்தினை எட்டியுள்ளது. இதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக மத்திய அரசும் மாநில அரசுகளும் பெட்ரோல் டீசல் விலை மீதான கலால் வரியையும் சமீபத்தில் உயர்த்தியுள்ளன.

இந்த நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 49 பைசா அதிகரித்து, 80.86 பைசாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே டீசல் விலையும் லிட்டருக்கு 52 பைசா உயர்ந்து 73.69 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதன் மூலம் கடந்த 11 நாட்களில் பெட்ரோல் விலை 6.02 ரூபாய் உயர்ந்தும், டீசல் விலை 6.40 ரூபாய் உயர்ந்தும் காணப்படுகிறது. இது வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதோடு, இன்னும் எவ்வளவு தான் அதிகரிக்குமோ என்ற கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இதே டெல்லியில் பெட்ரோல் விலை 77.28 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே டீசல் விலையானது 75.79 ரூபாயாக உயர்ந்துள்ளது.

 

மும்பையில் பெட்ரோல் விலை 84.15 ரூபாயாகவும், இதே டீசல் விலையானது 74.32 ரூபாயாக உயர்ந்துள்ளது.

கொல்கத்தாவில் பெட் ரோல் விலையானது 79.08 ரூபாயாகவும், டீசல் விலையானது 71.38 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Petrol diesel prices are hiked for 11th consecutive day

Wednesday fuel price rise the 11th consecutive day of the increase in the rates since june 7.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X