கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கச்சா எண்ணெய் விலையானது கடந்த சில மாதங்களாக சரிவினைக் கண்டு வந்தது. அதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக லாக்டவுன் அந்த சமயத்தில் நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், எரிபொருள் தேவையானது குறைவாக இருந்து வந்தது.
இந்த நிலையில் தற்போது லாக்டவுனில் சற்று தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், பெட்ரோல் டீசல் தேவையானது அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக எரிபொருள் விலையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் கடந்த ஐந்து தினங்களாகவே பெட்ரோல், டீசல் விலையானது தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த ஐந்து நாட்களில் லிட்டருக்கு கிட்டதட்ட 3 ரூபாய் வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு
கடந்த ஞாயிற்று கிழமை முதல் பெட்ரோல் விலையானது லிட்டருக்குய் 2.74 ரூபாயும், இதே டீசல் விலையானது 2.83 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் லிட்டருக்கு 60 பைசாவும், இதே செவ்வாய் கிழமையன்று 40 பைசாவும், இதே புதன் கிழமை அன்று 55 பைசாவும் அதிகரித்தது.

இது தான் காரணமா?
சர்வதேச சந்தையில் கொரோனா பாதிப்பு காரணமாக கச்சா எண்ணெய் விலையானது தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், தற்போது பல நாடுகளில் குறையத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய்க்கான தேவை சற்று குறைய தொடங்கியுள்ளது. இதன் காரணமாக விலையும் சர்வதேச சந்தையில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் எதிரிரொலியாக இந்திய சந்தையிலும் எரிபொருள் விலையானது அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இனியும் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும்
மேலும் அடுத்து வரும் 10 நாட்களுக்கும் பெட்ரோல் டீசல் விலையானது அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் பெட்ரோல், டீசல் விலையானது லிட்டருக்கு 5 ரூபாய் வீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த மாதத்தில் கச்சா எண்ணெய் விலையானது மைனஸில் சென்று திரும்பிய நிலையில் தற்போது பேரலுக்கு 40 டாலர் என்ற நிலையில் உள்ளது.

கடந்த 83 நாட்களாக அதிக மாற்றமில்லை
கடந்த 83 நாட்களில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையானது படு வீழ்ச்சி கண்டு வந்த போது, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் கொண்டு வரப்படவில்லை. ஆனால் சர்வதேச சந்தையில் விலை அதிகரிக்க ஆரம்பித்ததுமே, இங்கு பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க தொடங்கி விட்டது. அதோடு நுகர்வோருக்கு கிடைக்க வேண்டிய அனைத்து பலன் களையும் கலால் வரியாக, பெட் ரோலுக்கு 10 ரூபாயும், டீசலுக்கு 13 ரூபாயும் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் விலை அதிகரிக்க ஆரம்பித்துள்ள நிலையில் இன்னும் எவ்வளவு அதிகரிக்கும் என்று தெரியவில்லை.