இந்தியாவை விட இலங்கை, பாகிஸ்தான், வங்க தேசத்தில் பெட்ரோல் விலை குறைவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் பெட்ரோல் விலை ஹாங் காங், ஜெர்மனி, யு.கே உள்ளிட்ட நாடுகளை விட குறைவாக உள்ளது. அதே நேரம் பிரேசில், சீனா, ஜப்பான், அமெரிக்கா, ரஷ்யா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகளை விட அதிகம் என ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

 

ஆனால் இந்தியாவில் பெட்ரோல் விலைக்கு காரணம் மத்திய அரசா, மாநில அரசா என்பது பெரும் விவாதப்பொருளாக உள்ளது. இரண்டு அரசுகளும் வரியை அதிகமாக விதிப்பதுதான் இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகமாக இருப்பதற்கு காரணம் என மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

பாங்க் ஆப் பரோடாவின் பொருளாதார ஆய்வுக்குழு, மே 9 ஆம் தேதி பெட்ரோல் விலையை தனிநபர் வருமானத்துடன் இணைத்து ஒப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஒரு கார் கூட விற்கவில்லை.. ஷாங்காய் நகரத்தை புரட்டிப்போட்ட லாக்டவுன்..!

தரவரிசை

தரவரிசை

உலகின் 106 நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் பெட்ரோல் விலை 1.35 டாலர் என 42வது இடத்தில் உள்ளது. இந்தியாவை விட 50 நாடுகளில் பெட்ரொல் விலை அதிகம்தான். அனால் உலக நாடுகளின் சராசரி விலை 1.22 ரூபாயுடன் ஒப்பிடும் போதும் இந்தியாவில் அதிகமாக தான் உள்ளது.

இந்தியாவில் எரிபொருள் விலை ஆஸ்திரேலியா, துருக்கி, தென் கொரியா போன்ற நாடுகளுக்கு இணையாக உள்ளது.

இந்தியாவை விட கூடுதல் விலை

இந்தியாவை விட கூடுதல் விலை

ஹாங் காங், ஃபின் லாந்து, ஜெர்மனி, இதாலி, நெதர்லாந்து, க்ரீஸ், ஃப்ரன்ஸ், போர்ச்சுகல், நார்வே நாடுகளில் பெட்ரோல் விலை இந்தியாவை சிட கூடுதல் என லிட்டர் 2 டாலருக்கும் அதிகமாக விற்பனையாகிறது.

எங்கு அதிகம்? எங்கு குறைவு?
 

எங்கு அதிகம்? எங்கு குறைவு?

ஹாங் காங்கில் பெட்ரோல் விலை அதிகபட்சாமாக 2.58 டாலராக உள்ளது. மலேசியாவில் குறைந்தபட்சமாக 0.47 டலராக உள்ளது. இந்தியா மற்றும் துருக்கியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 1.35 அமெரிக்க டாலராக உள்ளது.

அண்டை நாடுகள்

அண்டை நாடுகள்

இந்தியாவின் அண்டை நாடுகளான வங்க தேசத்தில் 1.05 டாலராகவும், பாகிஸ்தானில் 0.77 டாலராகவும், இலங்கையில் 0.67 டாலராகவும் உள்ளது.

தனிநபர் சராசரி வருவாய்

தனிநபர் சராசரி வருவாய்

தனிநபர் சராசரி வருவாய் அடிப்படையில் பார்க்கும் போது வியட்நாம், கென்யா, உக்ரைன், பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை மற்றும் வெனிசுலா நாடுகளை விட இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகமாக உள்ளது. இந்தியாவின் பெட்ரோல் விலை இப்போது அதிகமாகத் தெரியவில்லை. இருப்பினும், தனிநபர் வருவாயுடன் ஒப்பிடும்போது, ​​விலை அதிகமாக இருக்கும் இடங்களிலெல்லாம் தனிநபர் வருமானம் இந்தியாவை விட அதிகமாக உள்ளது. பெட்ரோல் விலை உயரும் போது குறைந்த தனிநபர் வருமானம் உள்ள நாடுகளுக்கு ஏற்படும் பொருளாதார வலி மிகவும் அதிகமாக உள்ளது. ஏனெனில் பணவீக்கத்தில் அதன் நேரடி மற்றும் மறைமுக விளைவு அதிகமாக உள்ளது. இது குறைந்த வருமானம் கொண்ட நாடுகளை மிகவும் பாதிக்கிறது.

கென்யா, பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் வெனிசுலா போன்ற நாடுகளில் தனிநபர் வருமானம் குறைவாக உள்ளது. பெட்ரோல் விலையும் மிகவும் குறைவாக உள்ளது. எனவே இந்தியாவை விட அங்கு பெட்ரோல் விலையால் ஏற்படும் பாதிப்பு குறைவாகவே உள்ளது. இந்தியா உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் நுகர்வு மற்றும் இறக்குமதி நாடாக உள்ளது. இது அதன் எண்ணெய் தேவையில் 85 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது.

விலை உயர்வு நிறுத்தி வைப்பு

விலை உயர்வு நிறுத்தி வைப்பு

உலகளாவிய எரிசக்தி விலை ஏற்றத்தால், இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களின் பெட்ரோல், டீசல் மற்றும் பிற பெட்ரோலியப் பொருட்களின் உற்பத்திச் செலவும் அதிகரித்தது. மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி பதினைந்து நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தினர். தொடர்ந்த விலை உயராலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்கட்சிகளை விமர்சனத்தால் தற்காலிகமாக பெட்ரோல் விலை உயர்த்தப்படாமல் உள்ளது.

மத்திய, மாநில அரசுகள்

மத்திய, மாநில அரசுகள்

பெட்ரோல் விலை மத்திய அரசு விதிக்கும் கலால் வரி மற்றும் மாநில அரசு விதிக்கும் வாட் வரியாக அதிகம் உள்ளது. பெட்ரோல் விலையை மத்திய அரசிடம் குறைக்க சொன்னால் மாநில அரசுகளை கை காட்டுவதும், மாநில அரசுகளை சொன்னால் மத்திய அரசை கை கட்டுவதும், சர்வதச பதற்ற நிலை மற்றூம் எண்ணெய் நிறுவனங்களை கை காட்டுவதும் வாடிக்கையாகிவிட்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Petrol in India Is Costlier Than US, China, And Neighbours Pakistan, Sri Lanka, Bangladesh

Petrol in India Is Costlier Than US, China, And Neighbours Pakistan, Sri Lanka, Bangladesh | இந்தியாவை விட இலங்கை, பாகிஸ்தான், வங்க தேசத்தில் பெட்ரோல் விலை குறைவு.. ஆய்வறிகை வெளியீடு!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X