அமெரிக்காவின் அழுத்தத்தினை தாண்டி எண்ணெய் இறக்குமதி.. இந்தியாவினை புகழ்ந்த இம்ரான் கான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா சலுகை விலையில் எண்ணெய் வாங்குவதற்கு பாகிஸ்தான் முன்னாள் இம்ரான் கான் பாராட்டு தெரிவித்துள்ளார்.

 

ரஷ்யா - உக்ரைன் இடையேயான பிரச்சனைக்கு மத்தியில், ரஷ்யாவிடம் இருந்து பல்வேறு நாடுகளும் எரிபொருள் வாங்குவதை தடை செய்து வருகின்றது.

ரூ. 5 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்.. இன்னும் எவ்வளவு இழப்பு ஏற்படுமோ?

இதற்கிடையில் இந்தியாவிற்கும் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை தடை செய்ய வேண்டும் என்று பல நாடுகளும் அழுத்தம் கொடுத்து வருகின்றன.

 சலுகை விலையில் எண்ணெய் சப்ளை

சலுகை விலையில் எண்ணெய் சப்ளை

எனினும் இப்பிரச்சனையின் ஆரம்பத்தில் இருந்து நடுநிலையாக இருந்து வரும் இந்தியா, எதனையும் கருத்தில் கொள்ளாது, மக்களின் நலனை கருத்தில் கொண்டு ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை வாங்கி வருகின்றது. இந்தியாவுக்கு ரஷ்யா சலுகை விலையில் எண்ணெய் சப்ளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இம்ரான் கான் பாராட்டு

இம்ரான் கான் பாராட்டு

இதற்காக பல நாடுகளும் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுத்து வந்தாலும், அதனையும் தாண்டி, ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் கொள்முதல் செய்து வருகின்றது. குறிப்பாக அமெரிக்காவின் அழுத்தத்தினையும் தாண்டி ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கி வரும் இந்தியாவினை பாராட்டியுள்ளார் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான்.

ட்விட்டரில் வேதனை
 

ட்விட்டரில் வேதனை

இது குறித்து இம்ரான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில், குவாட் அமைப்பில் உறுப்பினராக இருந்தபோது, தனது மக்களின் நலனுக்காக அமெரிக்காவின் அழுத்தத்தினையும் தாண்டி ரஷ்யாவிடம் இருந்து, இந்தியா எண்ணெய் வாங்குகிறது. இதனைத்தான் தன்னிச்சையான வெளியுறவுக் கொள்கை மூலம் எனது தலைமையிலான அரசும் செய்ய முயற்சித்தது. ஆனால் அது முடியவில்லை என தெரிவித்துள்ளார்.
தலையற்ற கோழி

மேலும் தற்போதைய பாகிஸ்தான் அரசு வெளிநாட்டு அழுத்தம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த பொருளாதார சிக்கலால், தலையற்ற கோழி போல அங்கும் இங்கும் திரிகிறது என தெரிவித்துள்ளார்.

 

இந்தியாவிடம் பாடம் கற்றுக் கொள்ளுங்கள்

இந்தியாவிடம் பாடம் கற்றுக் கொள்ளுங்கள்

அதோடு பாகிஸ்தான் இந்தியாவிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு சுயமரியாதை உள்ளது. எந்தவெளி நாட்டு சக்தியும் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க முடியாது. இந்தியர்களுக்கு மிகப்பெரிய சுயமரியாதை உள்ளது. அவர்களுக்கு யாரும் ஆணையிட முடியாது. அவர்களின் வெளியுறவுக் கொள்கைகளுக்கு அழுத்தம் கொடுக்கவோ தடுக்கவோ முடியாது என்றும் முன்னதாக ஒரு உரையில் இம்ரான் கான் கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.

இந்தியா வரி குறைப்பு

இந்தியா வரி குறைப்பு

இதற்கிடையில் இந்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9.50 ரூபாயும், டீசல் மீதான வரியை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைத்து அறிவித்துள்ளது. இது நுகர்வோர் மத்தியில் பெரும் ஆறுதலை அளித்துள்ளது எனலாம்.
சர்வதேச சந்தையில் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வரும் இந்த சூழலில் இந்த வரி குறைப்பாது நிச்சயம் சற்று ஆறுதலைக் கொடுக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Petrol price cut: why pakistan former PM Imran khan praises india again?

Former Pakistani Prime Minister Imran Khan has praised India for buying oil from Russia at concessional prices.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X