சாமனியர்களுக்கு இது மேலும் பிரச்சனை தான்.. பெட்ரோல் விலை 6வது நாளாக மீண்டும் அதிகரிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக இருக்கும் பெட்ரோல் டீசல் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சொல்லப்போனால் இந்த கொரோனாவின் வருகைக்கு பின்பு தனி மனித இடைவெளி, பொதுப் போக்குவரத்து தடை, சுகாதாரம் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக உள்ளன.

 

இதற்கிடையில் இன்று தொடர்ந்து ஆறாவது நாளாக பெட்ரோல் விலையானது அதிகரித்து காணப்படுகிறது.

குறிப்பாக மெட்ரோ நகரங்களாக டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் சில நகரங்களில் பெட்ரோல் விலையானது அதிகரித்து காணப்படுகிறது. இன்று மட்டும் விலை லிட்டருக்கு 11 பைசா அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக சொல்லவேண்டுமானால் கடந்த ஆகஸ்ட் 16லிருந்து பெட்ரோல் விலையானது ஏற்றம் கண்டு வரும் நிலையில், ஆகஸ்ட் 19ல் மட்டும் ஏற்றம் காணவில்லை.

பெட்ரோல் விலை நிலவரம்

பெட்ரோல் விலை நிலவரம்

டெல்லியில் பெட்ரோல் விலையானது லிட்டருக்கு 1.3 ரூபாயும், மும்பையில் 1.2 ரூபாயும் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் இன்று டெல்லி பெட்ரோல் விலையானது 81.73 ரூபாயாகவும், இதே மும்பையில் பெட்ரோல் விலையானது 88.39 ரூபாயாகவும் உள்ளது. இதே மற்ற மெட்ரோ நகரங்களான, சென்னையில் லிட்டருக்கு 84.73 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 83.24ரூபாயாகவும், ஹைதராபாத்தில் 84.94 ரூபாயாகவும், இதே பெங்களூருவில் 79.89 ரூபாயாகவும், நொய்டாவில் 82.09 ரூபாயாகவும் காணப்படுகிறது.

டீசல் விலை நிலவரம்

டீசல் விலை நிலவரம்

எனினும் இன்று டீசல் விலையில் மாற்றமில்லை. டெல்லியில் டீசல் விலை லிட்டருக்கு 73.56 ரூபாயாகவும், மும்பையில் டீசல் விலை லிட்டருக்கு 80.11 ரூபாயாகவும், இதே சென்னையில் டீசல் விலை லிட்டருக்கு 78.86 ரூபாயாகவும், கொல்கத்தாவில் டீசல் விலை லிட்டருக்கு 77.06 ரூபாயாகவும், ஹைதராபாத்தில் டீசல் விலை லிட்டருக்கு 80.17 ரூபாயாகவும், பெங்களூருவில் டீசல் விலை லிட்டருக்கு 77.88 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை
 

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை

இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் சர்வதேச சந்தையில் wti கச்சா எண்ணெய் விலையானது 0.14% சரிந்து காணப்படுகிறது. தற்போது பேரலுக்கு 0.06 டாலர்கள் குறைந்து 42.56 டாலர்களாக காணப்படுகிறது. இதே பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையானது 0.18% ஏற்றம் கண்டும் காணப்படுகிறது. இது தற்போது பேரலுக்கு 0.10 டாலர் அதிகரித்து 45.75 டாலராக வர்த்தகமாகி வருகின்றது.

கச்சா எண்ணெய் உற்பத்தியும் குறைவு

கச்சா எண்ணெய் உற்பத்தியும் குறைவு

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக எண்ணெய் உற்பத்தியானது பாதிக்கும் மேலாக குறைக்கப்பட்டுள்ளது. எனினும் உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக கச்சா எண்ணெய் தேவையானது குறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக உற்பத்தியே குறைந்தாலும், அது பெருமளவில் பாதிப்பினை ஏற்படுத்தவில்லை எனலாம். எனினும் உற்பத்தி குறைவு காரணமாக விலை சற்று அதிகரித்தே காணப்படுகிறது. இதன் காரணமாக எரிபொருள் விலையும் அதிகரித்து காணப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Petrol prices increased 6th consecutive day in a row

Petrol prices increased Sixth consecutive day in a row, but today diesel prices unchanged.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X