பிப்சர் - பயோஎன்டெக் நிறுவனத்தின் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு, உலகில் முதல் நாடாக பிரிட்டன் அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கிடையில் இந்தியாவில் பிப்சர் நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று பிஎஸ்இ-யில் 5% வரை அதிகரித்து, 5,385.60 ரூபாய் வரை அதிகரித்திருந்தது.
உடலில் செலுத்தப்பட்ட 94.5% பேருக்கு கோவிட்-19 தொற்றில் இருந்து பாதுகாப்பளிக்கும் இந்த கொரோனா வைரஸ் தடுப்பூசி, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்குவது பாதுகாப்பானது என்று பிரிட்டனின் ஒழுங்காற்று அமைப்பான MHRA தெரிவித்துள்ளது.
பேடிஎம்-ன் 30% பங்குகளை விற்கும் சீனா ஆன்ட் குரூப்.. எல்லாம் புரளி நம்பாதீங்க.. பதறும் பேடிஎம்!

அடுத்த வாரம் முதல் தடுப்பூசி
அதிக முன்னுரிமை வழங்கப்படும் குழுக்களைச் சேர்ந்த மக்களுக்கு அடுத்த வாரம் முதல் இந்த கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படுவது தொடங்கும். இரண்டு டோஸ்களாக வழங்கப்படவேண்டிய இந்த தடுப்பூசியின், 30 மில்லியன் டோஸ்களை பிரிட்டன் ஏற்கனவே ஆர்டர் செய்துள்ளது. இந்த தடுப்பு மருந்து முறையாக BNT162b2 என்று அழைக்கப்படுகிறது. இது அவசரகால பயன்பாட்டிற்காக அங்கீகாரம் பெற்றது.

40 மில்லியன் டோஸ்களுக்கு ஆர்டர்
இங்கிலாந்து அரசு ஆரம்பத்தில் 30 மில்லியன் டோஸ்களை ஆர்டர் செய்த நிலையில், கடந்த அக்டோபர் மாதத்தில் அதனை 40 மில்லியன் டோஸ்களாக அதிகரித்தது. இது இங்கிலாந்தின் 66 மில்லியன் மக்கள் தொகையில், மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு போடுவதற்கு போதுமான இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

10 மாதங்களில் பயன்பாட்டு வந்த தடுப்பூசி
பொதுவாக தடுப்பூசி ஒன்று உற்பத்தி செய்ய உத்தேசிக்கப்பட்டு, ஆராய்ச்சி நிலையில் இருந்து பயன்பாடு வரை வருவதற்கு 10 ஆண்டுகள் வரை ஆகும். பிப்சர் மற்றும் பயோஎன்டெக் தயாரித்துள்ள இந்த கொரோனா வைரஸ் தடுப்பூசி வெறும் பத்தே மாதங்களில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதுவரை உலகில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் மிகவும் குறைவான காலத்தில் பயன்பாட்டுக்கு வந்தது இந்தத் தடுப்பூசி இது தான். இந்தத் தடுப்பு மருந்து செலுத்தப்படுபவர்களுக்கு மூன்று வார இடைவெளியில் இரண்டு டோஸ்கள் வழங்கப்பட வேண்டும்.

பிப்சர் பங்கு விலை
இது குறித்து பிப்சர் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக அதிகாரியுமான ஆல்பர்ட் போர்லா, இது வரலாற்று தருணம் என்று கூறியுள்ளார்.
.இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது முடிவில் பிஎஸ்இ-யில் 2.44% ஏற்றம் கண்டு, 5229.90 ரூபாயாக முடிவடைந்துள்ளது.