எல்லாம் டிஜிட்டல் மயம்.. இண்டர்நெட் இல்லாத ஏழை எளிய மக்களை கவனிக்காத கர்நாடக அரசு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

SOS முதல் ஆக்சிஜன் சிலிண்டர் தகவல், மருத்துவமனை படுக்கை தகவல், வேக்சின் ஸ்லாட் வரை அனைத்திற்கும் சமுக வலைத்தளம், இணையத் தளங்கள் பெரிய ஆளவில் உதவியுள்ளது மட்டும் அல்லாமல் பலரின் உயிரை காப்பாற்றியுள்ளது.

 

ஆனால் இண்டர்நெட் வசதி இல்லாமல் இருக்கும் ஏழை எளிய மக்கள் உயிர் காக்கும் இந்த முக்கியமான தகவல்களை உரிய நேரத்தில் பெற முடியாமல் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளதாக வல்லுனர்களும், சமுக ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர்.

கொரோனா குறித்த தரவுகளைச் சிறந்த முறையில் மக்களுக்குக் கொண்டு சேர்க்க அரசு தவறியுள்ளது மட்டும் அல்லாமல் அவர்களை முறையான சேவைகளைப் பெற முடியாமல் முடக்கியுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

 இண்டர்நெட்-ம் மக்களும்..

இண்டர்நெட்-ம் மக்களும்..

2019 நவம்பர் மாதம் இண்டர்நெட் மற்றும் மொபைல் அசோசியேஷன் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் 40 சதவீத மக்கள் மட்டுமே இண்டர்நெட் பயன்படுத்தி வருகின்றனர், இது கர்நாடகாவில் 42 சதவீதம்.

 பெங்களூர் நகரம்

பெங்களூர் நகரம்

இதேபோல் பெங்களூரில் சுமார் 66 லட்சம் இண்டர்நெட் பயன்பாட்டாளர்களில் கர்நாடகாவின் அர்பன் பகுதியில் 35 சதவீத பெண்களும், கிராமப் பகுதியில் 24.8 சதவீத பெண்கள் மட்டுமே இண்டர்நெட் பயன்படுத்தி வருகிறார்கள். இதேபோல் 71.5 சதவீத நகரத்து ஆண்கள் மற்றும் 55.6 சதவீத கிராமப்புற பெண்கள் மட்டுமே இண்டர்நெட் பயன்படுத்தி வருகிறார்.

இதன் மூலம் டிஜிட்டல் பிரிவினை உண்மை என உணர்த்துகிறது என ஜனகிரஹா என்னும் என்ஜிஓ அமைப்பின் தலைவர் ஸ்ரீநிவாஸ் ஆலவில்லி தெரிவித்துள்ளார்.

 ஏழை எளிய மக்கள்
 

ஏழை எளிய மக்கள்

ஒருபக்கம் ஏழை எளிய மக்கள் அதிகாரிகளைச் சந்திக்க முடியாத நிலையில், மறுபக்கம் உதவிக்காக அளிக்கப்பட்ட எண்களை அழைத்தால் இணைக்கப்படுவது இல்லை, மேலும் வேக்சினுக்காக ஆன்லைனில் புக் செய்ய முடியாதவர்கள் சுகாதார மையத்திற்குக் காலையிலேயே சென்று டோக்கன் பெற நினைத்தாலும் ஆதிக்கம் உள்ளவர்கள் டோக்கன்களை மறைமுகமாகப் பெற்றுக்கொள்கிறார்கள்.

 ஆங்கிலத்தில் அறிக்கை

ஆங்கிலத்தில் அறிக்கை

இதேபோல் பெங்களூரில் அளிக்கப்படும் கொரோனா பரிசோதனை அறிக்கை ஆங்கிலத்தில் கொடுக்கப்படுவதால் பலர் அறிக்கையைப் படிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர். கோவிட் தொற்று இந்தியாவில் இருக்கும் டிஜிட்டல் பிரிவினையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது என வினய் ஸ்ரீநிவாஸா என்ற மற்றொரு சமுக ஆர்வளர் தெரிவித்துள்ளார்.

 நோட்டீஸ் மற்றும் ஆட்டோ மூலம் அறிவிப்பு

நோட்டீஸ் மற்றும் ஆட்டோ மூலம் அறிவிப்பு

அரசு அமைப்பு மற்றும் நிர்வாக அமைப்புகள் மாநிலம் முழுவதும் கொரோனா வழிகாட்டி, பரிசோதனை, வேக்சின் ஆகியவற்றைக் குறித்த விழிப்புணர்வை நோட்டீஸ் மற்றும் ஆட்டோ மூலம் சிறு சிறு பகுதிகளுக்கு ஸ்பீக்கர் மூலம் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என வினய் ஸ்ரீநிவாஸா தெரிவித்துள்ளார்.

 ஊரக மக்கள்

ஊரக மக்கள்

கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு வெளியில் இருக்கும் பலருக்கு ஆக்சிமீட்டர் என்றால் என்ன..? வேக்சின் எங்குப் போடப்படுகிறது..? தொற்று ஏற்பட்டால் எப்படி மருத்துவமனையில் அனுமதி பெறுவது போன்ற அடிப்படை விஷயங்கள் கூடத் தெரியாமல் உள்ளனர்.

 கர்நாடக அரசு

கர்நாடக அரசு

மத்திய அரசு மக்களுக்குப் போதுமான வேக்சினை கொடுக்க முடியாமல் எப்படித் தவறு செய்துள்ளதோ, அதேபோன்று கர்நாடக அரசு மக்களுக்குத் தேவையான சிகிச்சை, படுக்கைகள் அளிக்க முடியாமல் மென்பொருள் பழுது ஏற்பட்டு உள்ளது எனக் காரணம் கூறி வருகிறது என டிஜிட்டல் உரிமை ஆர்வலர் அனிவர் அரவிந் தெரிவித்துள்ளார்.

 தமிழ்நாடு நிலை

தமிழ்நாடு நிலை

இப்படியான பிரச்சனை கர்நாடகாவில் மட்டும் தான் உள்ளதா..? இந்தியாவின் பிற பகுதிகளில் மக்கள் படும் இன்னல்கள் என்ன..? என்பதைக் கமெண்ட்-ல் பதிவு செய்யுங்கள். குறிப்பாகத் தமிழ்நாட்டில் சாமானிய மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Poor left out as Covid deepens digital divide in Karnataka

Karnataka latest news.. Poor left out as Covid deepens digital divide in Karnataka
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X