உள்ள நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, உள்ளூர் பொருட்களையே பொதுமக்கள் வாங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதன் மூலம் உள்ளூர் தயாரிப்பாளர்கள் மற்றும் வியாபாரிகளின் வாழ்விலும் ஒளியேற்றுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்நாட்டு பொருட்கள் வாங்குங்கள்
மேலும் உள்ளூரில் தயாரித்த பொருள்களை வாங்குவதன் மூலம், நாட்டின் பொருளாதாரத்தினை உயர்த்த இந்த தீபாவளியைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளார். உள்ளூரில் தயாரித்தப் பொருள்களை வாங்குவதன் மூலம், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த இந்த தீபாவளியைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தீபாவளி வாழ்த்துகள்
நாட்டு மக்களுக்கு தனது தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்ட பிரதமர் மோடி, தீபாவளியை முன்னிட்டு கடைவீதிகளுக்குச் செல்லும் மக்கள், உள்ளூரில் தயாரித்த பொருள்களை வாங்கி, உள்ளூர் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளியுங்கள். மேலும் எப்போது ஒவ்வொரு குடிமக்களும் பெருமையோடு உள்ளூர் தயாரிப்புப் பொருள்களை வாங்குகிறோமோ, உள்ளூர் தயாரிப்புகளைப் பற்றி பேசுகிறோமோ அப்போது, நாம் நமது உள்ளூர் தயாரிப்புப் பொருள்களின் தகவல்களை மற்றவர்களிடம் கொண்டு சேர்க்கிறோம்.

உள்ளூர் தயாரிப்புகள்
அது அப்படியே தொடர்ந்து மற்றவர்களிடம் சென்று சேரும் என்று மோடி தெரிவித்துள்ளார். வெறும் அகல் விளக்கை மட்டும் உள்ளூர் தயாரிப்பாக வாங்காமல், தீபாவளிக்காக வாங்கும் அனைத்தையுமே உள்ளூர் தயாரிப்பாக வாங்க வேண்டும், அது உள்ளூர் தயாரிப்பாளர்களை ஊக்குவிக்கும் என்று கூறியுள்ளார்.

பல திட்டங்கள் தொடக்கி வைப்பு
அதோடு தனது தொகுதியான வாரணாசியில் பணிகள் முடிந்த பல திட்டங்களை மக்களின் பணிக்காக திறந்து வைத்தார். அதோடு பல புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். இந்த திட்டங்களின் மொத்த மதிப்பு 614 கோடி ரூபாயாகும். அதோடு 220 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய 16 திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும் 394 கோடி மதிப்பிலான 14 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
உண்மையில் உள் நாட்டு பொருட்களை வாங்கும்போது அவற்றிற்கான தேவையும் அதிகரிக்கும். இதன் மூலம் உள் நாட்டு வியாபரிகளின் கையில் பணப்புழக்கமும் அதிகரிக்கும். இதனால் அவர்கள் வாழ்வு பிரகாசமாகுமே..