தனியார் மருத்துவமனைகளின் லாபம் 35 – 40% குறையும்.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸினால் நடப்பு நிதியாண்டில் தனியார் மருத்துவமனைகளின், செயல்பாட்டு லாபம் 40% குறையலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஏனெனில் நாட்டில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்த லாபத்தினை எடுத்துக் கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவின் காரணமாக தனியார் மருத்துவமனைகளின் பில்லிங் வெகுவாக குறைந்துவிட்டது.

 தனியார் மருத்துவமனைகளின் லாபம் 35 – 40% குறையும்.. !

 

கொரோனாவின் காரணமாக மக்கள் மருத்துவ மனைகளை பெரும்பாலும் தவிர்த்து வருகின்றனர் என்கிறது ஒரு அறிக்கை. எனினும் இரண்டாம் ஆண்டின் பாதியில் மருத்துவமனைகளின் படுக்கை ஆக்கிரமிரப்புகள், லாக்டவுனுக்கு முந்தைய நிலையை போல 65 - 70% நிலைகளை உறுதிபடுத்தும் என்றும் இந்த அறிக்கை எதிர்பார்க்கிறது. இது தொற்று நோய் சிகிச்சையில் கூடுதல் வருவாயுடன், வருவாயின் ஒட்டுமொத்த சரிவை 16 - 18 சதவீதமாகக் குறைக்க கூடும் என்றும் இந்த அறிக்கை எதிர்பார்க்கிறது. முந்தைய இரண்டு நிதியாண்டுகளில் 17 சதவீதமாகக் வருவாய் வளர்ச்சியினை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த மார்ச் மாத இறுதியில் தொடங்கிய இந்த தொற்று நோயினால் லாக்டவுன் போடப்பட்டது. அதோடு அரசு மக்களை வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறும், மருத்துவமனைகளுக்கும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் செல்ல அறிவுறுத்தியது.

இதனால் மக்கள் அறுவை சிகிச்சைகளை தள்ளி வைக்க தொடங்கியதும், மருத்துவமனைகள் நெருக்கடிப் பாதையில் உள்ளன. அவைகள் எந்தவொரு மருத்துவமனைக்கும், குறிப்பாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கும் மிகவும் லாபகரமான நடைமுறைகளான இருந்தன.

ஆக தள்ளி வைக்கப்பட்ட இந்த சிகிச்சைகளினால் மருத்துமனைகளுக்கு லாபம் குறைந்துள்ளது. அதோடு அதிகரிக்கும் செலவுகள் ஆகியன இந்த நிதியாண்டில் தனியார் மருத்துவமனைகளின் இயக்க லாபத்தினை 35 - 40% குறைக்க வழிவகுக்கும் என்றும் கிரிசில் கூறியுள்ளது.

 தனியார் மருத்துவமனைகளின் லாபம் 35 – 40% குறையும்.. !

அவசர சிசிக்சையின் வருவாய் 28 - 30 சதவீதம் தொடர்ந்தாலும், ஆனால் மிகக் குறைந்த மட்டத்தில் லாக்டவுன் போது குறைவான விபத்துகள் கொடுக்கப்பட்டன. எனினும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் வருவாய் 15 - 20 சதவீதம் பங்களிக்கலாம். ஆனால் இது மற்ற வருவாய் நீரோடைகளைப் போல லாபகரமானது அல்ல. கூடுதலாக மருத்துவமனைகளில் உயர் நிலையான செலவு கட்டமைப்பைக் கொண்டு, ஒட்டுமொத்த படுக்கை ஆக்கிரமிப்புகள் நஷ்டத்தினை குறைக்க வழி வகுக்கும் என்றும் இந்த அறிக்கை கூறியுள்ளது.

இது பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கான அதிகரித்த செலவினங்களுடன் இணைந்து இந்த நிதியாண்டில் இயக்க லாபத்தில் 35 - 40 சதவீதம் சரிவுக்கு வழிவகுக்கும் என்றும் அறிக்கை கூறியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Private hospitals profits may crash 35 – 40% in this fiscal

Private hospitals profits may crash 35 – 40% in this fiscal
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X