இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ வங்கி மார்ச் காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ள நிலையில், இக்காலகட்டத்தில் ஐசிஐசிஐ வங்கி யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 300 சதவீதம் அதிக லாபத்தைப் பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுமட்டும் அல்லாமல் கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் அதிகளவிலான முன் ஏற்பாடு செயலாக்க லாபம், மொத்த வட்டி வருமானம் என அனைத்தும் சிறப்பான வளர்ச்சியை அடைந்திருக்கும் எனக் கூறப்படுகிறது.

மார்ச் காலகட்டத்தில் கடன் வர்த்தகம் சிறப்பான வளர்ச்சி அடைந்துள்ளது நிலையில் ஐசிஐசிஐ வங்கியின் லாப அளவீடுகள் கடந்த ஆண்டை விடவும் சுமார் 318 சதவீதம் அதிகமாக இருக்கும் என்றும், நெட் இன்ட்ரஸ்ட் மார்ஜின் 14.3 சதவீதமாக உயரும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் கொரோனா மற்றும் லாக்டவுன் தாக்கத்தின் மூலம் கார்பரேட் கடன் மீதான சுமை அதிகரிக்கும் என்றும், சொத்துக்களின் தரத்தின் அளவீட்டிலும் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
ஓரு வாரத்தில் சென்செக்ஸ் 2% சரிவு.. கொரோனாவால் பெரிய இழப்பு.. அடுத்த வாரம் எப்படி இருக்கும்..?!
மேலும் 2021ல் ஐசிஐசிஐ வங்கி சுமார் 8.3 சதவீதம் சரிந்திருந்தாலும், கடந்த ஒரு வருடத்தில் 64 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்நிலையில் இன்று வெளியாகும் காலாண்டு முடிவுகளில் ஐசிஐசிஐ வங்கியின் லாப அளவீடுகள் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.