இந்தியாவுக்கு மீண்டும் வரும் பப்ஜி.. புதிய பெயர் BGMI.. முன்பதிவு செய்தால் சிறப்பு பரிசு அடிதூள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பப்ஜி, இந்திய கேமிங் உலகை மொத்தமாகத் திருப்பிப் போட்ட மிகப்பெரிய கேம் என்றால் மிகையில்லை, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைத்து தரப்பினரையும் பித்துப் பிடித்து அலையச் செய்தது.

 

இந்திய கேமிங் சந்தையில் உச்சத்தில் இருக்கும் போது இந்திய அரசு பாதுகாப்பு காரணத்திற்காக 200க்கும் அதிகமான சீன செயலிகளைத் தடை செய்யப்பட்ட போது பப்ஜி கேம்-ஐயும் தடை செய்தது.

இந்நிலையில் தற்போது பப்ஜி கேம்-ஐ உருவாக்கிய தென் கொரியாவின் Krafton நிறுவனம் நேரடியாக இந்தியாவில் பப்ஜி கேம்-ஐ புதிய பெயரில் அறிமுகம் செய்ய உள்ளது. முன்பு சீனாவின் டென்சென்ட் நிறுவனத்தின் வாயிலாக இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

பப்ஜி கேம்

பப்ஜி கேம்

இந்தியாவில் கிட்டத்தட்ட 10 மாதங்களுக்குப் பின்பு பப்ஜி கேம் Battlegrounds Mobile India என்ற பெயரில் வருகிறது. மே மாதத்திலேயே தனது வருகை குறித்துச் செய்தி வெளியிட்ட Krafton நிறுவனம், ஜூன் மாதம் செயலியைக் கூகிள் ப்ளே தளத்தில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

முன் பதிவுக்கு அனுமதி

முன் பதிவுக்கு அனுமதி

Battlegrounds Mobile India என்ற பெயரில் பப்ஜி கேம் வெளியிடப்பட்டாலும், இந்திய மக்களுக்கு இது எப்போதுமே பப்ஜி தான். மேலும் வழக்கம் போல் இந்தக் கேம்-ஐ பிரம்மாண்டமாகத் துவங்க வேண்டும் என்பதற்காக இந்தக் கேம் செயலிக்கு "Pre-register" கொண்டு வரப்பட்டு உள்ளது.

சிறப்புப் பரிசு காத்திருக்கிறது
 

சிறப்புப் பரிசு காத்திருக்கிறது

முன்பதிவு செய்வோருக்குக் கட்டாயம் சிறப்புப் பரிசு அளிக்கப்படும் என Krafton நிறுவனம் தனது இணையத்தளத்தில் அறிவித்துள்ளது. பேட்டில்கிரவுன்ட்ஸ் மொபைல் இந்தியா செயலியை முன் பதிவு செய்வோருக்கு ரீகான் மாஸ்க், ரீகான் டிரஸ், செலிபிரேஷன் எக்ஸ்பர்ட் டைட்டில், 300AG ஆகியவை வழங்கப்படும். இதேபோல் தேர்வு செய்யப்படும் ஒரு இந்திய ப்ளேயருக்குச் சிறப்புப் பரிசு உள்ளதாக இத்தளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பேட்டில்கிரவுன்ட்ஸ் மொபைல் இந்தியா

பேட்டில்கிரவுன்ட்ஸ் மொபைல் இந்தியா

இந்தியாவில் பேட்டில்கிரவுன்ட்ஸ் மொபைல் இந்தியா செயலி அறிமுகம் செய்யப்படும் நாள் தெரியாத நிலையில் ஜூன் 2021ல் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.

மாற்றங்கள் இருக்காது

மாற்றங்கள் இருக்காது

மேலும் பப்ஜி கேம்-ல் இருக்கும் அனைத்துமே பேட்டில்கிரவுன்ட்ஸ் மொபைல் இந்தியா செயலியில் இருக்கும் பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவும் இருக்காது என்பது பப்ஜி பிரியர்களுக்குச் சாதகமான ஒன்று.

எப்படி முன்பதிவு செய்வது?

எப்படி முன்பதிவு செய்வது?

பப்ஜி பிரியர்கள் கோடிக்கணக்கான பேர் இந்தியா முழுவதும் இருக்கும் நிலையில் அறிமுகம் பரிசையும், சிறப்புப் பரிசையும் பெற வாய்ப்பை தவறாதீர்கள். முன்பதிவு செய்யப் பிளே ஸ்டோருக்கு சென்று பேட்டில்கிரவுன்ட்ஸ் மொபைல் இந்தியா டைப் செய்யுங்கள் அல்லது கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.pubg.imobile&hl=en&gl=IN

கூகிள் கணக்கு இணைப்பு கொண்ட ப்ளே ஸ்டோரில் Pre-register என்ற பட்டனை கிளிக் செய்தால் போதும்.

ஆப் டவுன்லோடு

ஆப் டவுன்லோடு

மேலும் முன் பதிவு செய்துள்ள அனைவருக்கும் செயலி லைவ் செய்யப்பட்ட உடனேயே ஆப் தானாக டவுன்லோடு ஆகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பப்ஜி, இல்ல இனி பேட்டில்கிரவுன்ட்ஸ் மொபைல் இந்தியா பிரியர்கள் ஜாலியாகப் பல மணிநேரத்தை இந்த லாக்டவுனில் கழிக்க முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

PUBG is back to India! Battlegrounds Mobile India pre-registration link is live and special rewards

PUBG is back to India! Battlegrounds Mobile India pre-registration link is live and special rewards
Story first published: Tuesday, May 18, 2021, 12:24 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X