மொத்த கதையையும் மாற்றினார் பி.வி.சிந்து.. 2வது ஒலிம்பிக் பதக்கத்திற்கு கிடைக்கப்போகும் வெற்றி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று வெற்றிபெறுவது எந்த அளவிற்குக் கடினமோ அதைவிடக் கடினம் அந்த வெற்றியைத் தக்கவைப்பது தான், இது பிஸ்னஸுக்கு மட்டும் அல்ல விளையாட்டு, படிப்பு ஏன் அரசியல் உட்பட அனைத்திற்கும் பொருந்தும். அந்த வகையில் பேட்மிண்டன் விளையாட்டு வீரர் பி.வி.சிந்து டோக்கியோ ஓலிம்பிக் போட்டியில் ஹீ பிங்ஜியவோ-வை வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.

 

இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு பெண் விளையாட்டு வீரர் இரண்டு முறை ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றவர் எனப் பெருமையைப் பெற்றுள்ளார் பி.வி.சிந்து. இவரது வெற்றி விளையாட்டுத் துறையில் பெண் விளையாட்டு வீராங்கனைகளுக்கு அளிக்கப்படும் விளம்பர ஒப்பந்தத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தடுமாறும் தங்கம் விலை.. இன்று என்ன நிலவரம்.. வாங்கலாமா.. வேண்டாமா..!

 டோக்கியோ ஒலிம்பிக் போட்டி

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று இந்தியா திரும்பியுள்ள பி.வி.சிந்து-க்கு ஏகபோக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், இதேபோன்ற வரவேற்பு நிறுவனங்கள் மத்தியிலும் அளிக்கப்பட்டு உள்ளது.

 பி.வி.சிந்து

பி.வி.சிந்து

பல வருடங்களாகத் தொடர்ந்து உலகம் முழுவதும் நடக்கும் பேட்மிண்டன் போட்டிகளில் பி.வி.சிந்து வெற்று பெற்று வரும் காரணத்தால் இவருடைய endorsement portfolio மிகவும் வலிமை அடைந்து வருகிறது. இதோடு இந்தியாவிலேயே வெற்றிகரமான பெண் விளையாட்டு வீரர் என்ற பெயரையும் பெற்றுள்ளார்.

 விளம்பர ஒப்பந்தம்
 

விளம்பர ஒப்பந்தம்

இந்நிலையில் 2வது ஒலிம்பிக் பதக்கம் இவருடைய விளம்பர ஒப்பந்தத்தின் மதிப்பையும், வளர்ச்சியையும் அடுத்தகட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. பொதுவாகக் கிரிக்கெட் வீரர்களை மட்டுமே அதிகளவில் விளம்பரங்களில் ஒப்பந்தம் செய்யும் இந்திய நிறுவனங்கள் தற்போது பிற விளையாட்டு மற்றும் பெண் விளையாட்டு வீரர்களும் விளம்பரத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறார்கள். இதற்கு முக்கியக் காரணமும் பி.வி.சிந்து.

 பி.வி.சிந்து பிராண்ட் வேல்யூ

பி.வி.சிந்து பிராண்ட் வேல்யூ

பி.வி.சிந்து-வின் பிராண்ட் வேல்யூ 2020ல் இறுதியில் 12 மில்லியன் டாலர் என டஃப் அண்ட் பெல்ப்ஸ் கணித்துள்ளது. 2016ல் ரியோ ஒலிம்பிக் போட்டியில் பி.வி.சிந்து-வின் வெற்றிக்குப் பின் ஒரே இரவில் அனைத்து முன்னணி நிறுவனங்களின் விருப்பமான ஸ்டாராக உயர்ந்தார். இன்று இந்திய விளம்பரத் துறையில் அசைக்க முடியாத ஒரு மகாராணியாக உயர்ந்துள்ளார்.

 முக்கியப் பிராண்டுகள்

முக்கியப் பிராண்டுகள்

பி.வி.சிந்து சுமார் 10 நிறுவனங்களின் பொருட்களை என்டார்ஸ் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். பாங்க் ஆப் பரோடா, பிரிட்ஜ்ஸ்டோன் இந்தியா, பெப்சிககோ-வின் Gatorade, விசா போன்ற முன்னணி நிறுவனங்களும் இதில் அடக்கம். மேலும் 2016 முதல் பல நிறுவனங்களின் பிராண்ட் அம்பாசிட்டர் ஆக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.

 போட்டி இல்லை

போட்டி இல்லை

26 வயதான பி.வி.சிந்து தற்போது 2வது முறையாக ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளதால், இவரின் இடத்தைப் பிடிக்க அடுத்தச் சில வருடங்கள் யாரும் இல்லை என்பதால், இன்னும் அதிகமாக நிறுவனங்கள் தற்போது பி.வி.சிந்து-விடம் விளம்பர ஒப்பந்தம் செய்யலாம்.

 ஆண்கள் ஆதிக்கத்தை உடைத்த பெண்

ஆண்கள் ஆதிக்கத்தை உடைத்த பெண்

இவை அனைத்திற்கும் தாண்டி பி.வி.சிந்து விளையாட்டு வீரர்களுக்கு அளிக்கப்படும் விளம்பரங்களுள் ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் குறிப்பிடத்தக்க ஒப்பந்தங்கள், வர்த்தகம் பெற்று நீண்ட காலம் களத்தில் நின்றுள்ளார்.

 2வது ஒலிம்பிக் வெற்றிக்குப் பின்

2வது ஒலிம்பிக் வெற்றிக்குப் பின்

பி.வி.சிந்து-வின் 2வது ஒலிம்பிக் வெற்றிக்குப் பின்பு பல முன்னணி உணவு நிறுவனங்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் விளம்பரத்திற்காக ஒப்பந்தம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சிந்துவின் பிராண்ட் வேல்யூ 2021ஆம் ஆண்டு இறுதிக்குள் 15 முதல் 18 மில்லியன் டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 பிட்னஸ் மற்றும் விளையாட்டுத் துறை

பிட்னஸ் மற்றும் விளையாட்டுத் துறை

தற்போது பிட்னஸ் மற்றும் விளையாட்டுத் துறையில் இருக்கும் நிறுவனங்களின் பிராண்டுகள் அனைத்தும் பி.வி.சிந்து-வுக்கு ஏற்றதாக உள்ளது. ஆனாலும் பி.வி.சிந்து பல முன்னணி வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனங்களுக்கு விளம்பர தூதர் ஆக உள்ளார்.

 பி.வி.சிந்து சோசியல் மீடியா

பி.வி.சிந்து சோசியல் மீடியா

மேலும் பி.வி.சிந்து-வின் சோசியல் மீடியா கணக்கில் சுமார் 70 லட்சம் பேர் அவரைப் பின்தொடர்ந்து வருகின்றனர். இதனால் இளம் தலைமை முறையினர் அதாவது மில்லினியல், ஜெனரேஷன் Z ஆகிய பிரிவை டார்கெட் செய்யும் நிறுவனங்களுக்குப் பி.வி.சிந்து-வின் சமுக வலைத்தளம் பெரும் துணையாக இருக்கும்.

 புதிய நிறுவனங்கள்

புதிய நிறுவனங்கள்

2வது வெற்றிக்குப் பின்பு பி.வி.சிந்து-வை எட்டெக் அதாவது ஆன்லைன் கல்வி நிறுவனங்கள், பின்டெக், ஈகாமர்ஸ், சில முன்னணி பியூட்டி மற்றும் பேஷன், லைப்ஸ்டைல் நிறுவனங்கள் அணுக அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது என விளம்பர சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

 பிராண்ட் வேல்யூ

பிராண்ட் வேல்யூ

சமீபத்தில் டஃப் அண்ட் பெல்ப்ஸ் வெளியிட்டுள்ள பிரான்ட் வேல்யூ அறிவிப்பின் படி, இந்தியாவிலேயே முதல் இடத்தில் 237.7 மில்லியன் டாலர் உடன் விராட் கோலி உள்ளார். இவரைத் தொடர்ந்து எம்.எஸ். தோனி 41.2 மில்லியன் டாலர் உடன் விளையாட்டுத் துறையில் 2வது இடத்தில் உள்ளார். சச்சின் டெண்டுல்கர் 25.1 மில்லியன் டாலர் உடன் 3வது இடத்தில் உள்ளார். ரோஹித் சர்மா 23 மில்லியன் டாலர் உடன் உள்ளார்.

 ஒட்டுமொத்த பெண்களின் வெற்றி

ஒட்டுமொத்த பெண்களின் வெற்றி

பி.வி.சிந்துவின் வெற்றி அவருக்கானது மட்டும் அல்ல பல பெண்கள் விளையாட்டுத் துறையில் சீரியஸ் ஆக இறங்கவும், நாட்டுக்குப் பதக்கங்களை வாங்கி கொடுக்க முடியும் என நம்பிக்கையையும் விதைத்துள்ளது.

 கிரிக்கெட் ஆதிக்கம்

கிரிக்கெட் ஆதிக்கம்

விளம்பரம், பணம், சம்பாத்தியம் போன்ற அனைத்தும் இனி கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டும் அல்ல அனைத்து விளையாட்டுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் கிடைக்கும் என உணர்த்தியுள்ளார். பல புது நிறுவனங்கள் வரும் நிலையில் பிற விளையாட்டுத் துறை வீரர்களைப் பிராண்ட் அம்பாசிடர் ஆக அறிவிக்கவும் வாய்ப்புகள் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

PV Sindhu rewrite endorsement story for athletes and women after a big win at Tokyo Olympics

PV Sindhu rewrite endorsement story for athletes and women after a big win at Tokyo Olympics
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X