அம்பானியுடன் போட்டிப்போடும் தமனி.. பணக்காரர்கள் பட்டியலில் திடீர் மாற்றம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ராதாகிஷன் தமனி இந்தப் பெயர் பலருக்கும் புதியதாக இருக்கும், ஆனால் அடுத்தச் சில வாரங்களுக்கு இவர் தான் இந்தியாவின் தலைப்பு செய்தி. இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் சில வருடங்களுக்கு முன்பு நுழைந்து இன்று நாட்டின் மிகப்பெரிய பணக்காரர் ஆக இருக்கும் முகேஷ் அம்பானியுடன் போட்டிப் போடும் அளவிற்குக் குறுகிய காலகட்டத்திற்கு வளர்ச்சி அடைந்துள்ளார்.

 

சொல்லப்போனால் பல வருடங்களாக டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் இருப்போரை ஒரே வருடத்தில் கீழே தள்ளி தற்போது நாட்டின் 2வது பெரிய பணக்காரர் ஆக உயர்ந்துள்ளார்.

அவென்யூ சூப்பர்மார்ட்ஸ்

அவென்யூ சூப்பர்மார்ட்ஸ்

இந்தியாவின் சில்லறை விற்பனை துறையில் சில நிறுவனங்கள் மட்டும் தான் ஆதிக்கம் செலுத்திய வருகிறது, அதிலும் சில நிறுவனம் தான் லாபகரமாக இயங்கி வருகிறது. அப்படிப்பட்ட ஒரு ரீடைல் நிறுவனம் தான் டிமார்ட். டிமார் சூப்பர்மார்கெட் எல்லோருக்கும் தெரியும் ஆனால் இதன் தாய் நிறுவனமான அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் நிறுவனத்தைப் பற்றிப் பலருக்கும் தெரியாது. அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் தான் ராதாகிஷன் தமனி.

இந்திய ரீடைல் சந்தை

இந்திய ரீடைல் சந்தை

இந்தியாவில் தற்போது அமெரிக்காவின் வால்மார்ட், அமேசான் முதல் ரிலையன்ஸ் ரீடைல் வரையில் சில்லறை வர்த்தகச் சந்தையை யார் பிடிப்பது என்பதில் தான் கடுமையாகப் போட்டி போட்டு வருகிறது. அப்படியிருக்கும் பட்சத்தில் டிமார்ட் ஏற்கனவே அதிகளவிலான வர்த்தகத்தையும், வாடிக்கையாளர்களையும் பெற்று அசத்தி வருகிறது.இந்தியாவில் தற்போது அமெரிக்காவின் வால்மார்ட், அமேசான் முதல் ரிலையன்ஸ் ரீடைல் வரையில் சில்லறை வர்த்தகச் சந்தையை யார் பிடிப்பது என்பதில் தான் கடுமையாகப் போட்டி போட்டு வருகிறது. அப்படியிருக்கும் பட்சத்தில் டிமார்ட் ஏற்கனவே அதிகளவிலான வர்த்தகத்தையும், வாடிக்கையாளர்களையும் பெற்று அசத்தி வருகிறது.

வால்மார்ட், அமேசான், ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனங்கள் மத்தியில் நடக்கும் வர்த்தகப் போட்டியின் காரணமாகத் தற்போது டிமார்ட்-இன் தாய் நிறுவனமான அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் நிறுவன பங்குகள் அதிகளவிலான வளர்ச்சி அடைந்து வருகிறது.

ராதாகிஷன் தமனி
 

ராதாகிஷன் தமனி

இந்நிலையில், அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் நிறுவன பங்குகள் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 5 சதவீதம் வளர்ச்சி அடைந்த நிலையில் ராதாகிஷன் தமனி-யின் மொத்த சொத்து மதிப்புச் சனிக்கிழமை யாரும் எதிர்பார்க்காத வகையில் 17.8 பில்லியன் டாலராக உயர்ந்தது.

இதன் மூலம் இந்திய பணக்காரர்கள் பட்டியில் இருக்கும் அனைவரையும் தள்ளிவிட்டு 2வது இடத்திற்கு முன்னேறினார் ராதாகிஷன் தமனி.

ஆசிய சந்தை

ஆசிய சந்தை

ராதாகிஷன் தமனி-ன் சொத்து மதிப்பு வளர்ச்சி மூலம் இந்திய சந்தையில் முன்னேறியது மட்டும் அல்லாமல் ஆசிய பணக்காரர் பட்டியலிலும மிகப்பெரிய உயர்வைச் சந்தித்துள்ளார்.

மேலும் இந்தியாவில் பணக்காரர்கள் பட்டியில் முதல் இடத்தில் முகேஷ் அம்பானி இருக்கும் நிலையில் 2வது இடத்தில் ராதாகிஷன் தமனி இருக்கிறார்.

டாப் 5 பணக்காரர்கள்

டாப் 5 பணக்காரர்கள்

ராதாகிஷன் தமனி இந்திய பணக்காரர்கள் பட்டியில் 2வது இடத்திற்கு முன்னேறிய நிலையில் ஹெச்சிஎல் ஷிவ் நாடார் (16.5 பில்லியன் டாலர்), கோட்டாக் மஹிந்திரா வங்கி தலைவர் உதய் கோட்டாக் (14.9 பில்லியன் டாலர்), கெளதம் அதானி (14.1 பில்லியன் டாலர்), லக்ஷமி மிட்டல் (12.1 பில்லியன் டாலர்) ஆகியோர் பின்னுத்தள்ளியுள்ளார்.

முதல் இடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 57.4 பில்லியன் டாலர்.

அதிரடி வளர்ச்சி

அதிரடி வளர்ச்சி

டிமார்ட்-ன் தாய் நிறுவனமான அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் நிறுவனங்கள் பங்குகள் நடப்பு ஆண்டில் மட்டும் சுமார் 31 சதவீதம் வளர்ச்சி அடைந்து இந்நிறுவனத்தின் மதிப்பு 36,000 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பை ஒப்பிடுகையில் விப்ரோ, ஓஎன்ஜிசி, அல்டராடெக் சிமெண்ட், ஹெச்எப்சி லைப் இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களை விடவும் அதிகமாகும்.

என்ன காரணம்..?

என்ன காரணம்..?

இந்த அதிர வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் முதலீட்டை ஈர்ப்பதற்காகப் பிப்ரவரி 5ஆம் தேதி குறிப்பிட சதவீத பங்குகளை நிறுவன முதலீட்டாளர்களுக்கு (institutional investors) விற்பனை செய்தது. ஒரு பங்கின் விலை 2,049 ரூபாய் அடிப்படையில் சுமார் 4000 கோடி ரூபாய் அளவிலான நிதியை திரட்டியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Radhakishan Damani becomes India’s 2nd richest person

Radhakishan Damani, founder of retailer Avenue Supermarts, has become India’s second-richest person with a networth of $17.8 billion, next only to his Altamount Road neighbour Mukesh Ambani, who heads the leader-board for the uber-rich not just in the country but in the Asian continent.
Story first published: Monday, February 17, 2020, 12:55 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X