எச்சரிக்கும் ரகுராம் ராஜன்... விழித்துக் கொள்ளுமா மத்திய அரசு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகத்தின் ஆகச் சிறந்த பொருளாதார மேதைகளில் ஒருவரான ரகுராம் ராஜன், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்து, இந்திய வங்கிகளுக்கு வழிகாட்டிய அனுபவம் கொண்டவர்.

2008-ம் ஆண்டில் உலக பொருளாதார சரிவு மற்றும் மந்த நிலை வரும் என்பதை முன் கூட்டியே கணித்த மிக மிகச் சிலரில் இவரும் ஒருவர். தற்போது ரகுராம் ராஜன் தொடர்ந்து மத்திய அரசின் நடவடிக்கைகள் விமர்சித்துக் கொண்டு இருக்கிறார்.

அரசுக்கு எதிராக விமர்சித்தால் மிரட்டுகிறார்கள் என்று கூட சமீபத்தில் பகிரங்கமாகச் சொன்னார் ரகுராம் ராஜன்.

இப்போது
 

இப்போது

தற்போது அமெரிக்காவில் ஆசிரியராக பணியாற்றி வரும் ரகுராம் ராஜன் இந்திய அரசாங்கத்தையும், இந்திய வங்கிகளையும் எச்சரித்து இருக்கிறார். இந்த முறை ரியல் எஸ்டேட், கட்டுமானம், இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மற்றும் அந்த துறைகள் சார்ந்த தொழில்களுக்கு கடன் கொடுத்து இருப்பதைக் குறிப்பிட்டு எச்சரித்து இருக்கிறார் நம் ரகுராம் ராஜன்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

அதாவது, இந்தியாவில் தற்போது ரியல் எஸ்டேட், கட்டுமானம் மற்றும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் போன்ற துறைகளில் பெரிய பிரச்னைகள் இருக்கின்றன. இந்த துறைகளில் கடன் கொடுத்து இருக்கும் என் பி எஃப் சி நிறுவனங்கள் தங்கள் சொத்துக்களை மறு பரிசீலனை செய்து கொள்ள வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார்.

என்ன பிரச்ச்னை

என்ன பிரச்ச்னை

இந்தியா தற்போது வளர்ச்சி ரெசசன் (Growth Recession)ல் இருக்கிறது. இந்த வகை ரெசசன் காலத்தில் தான் வளர்ச்சி குறைவாக இருக்கும், வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் எனச் சொல்லி இருக்கிறார். அதாவது வேலை வாய்ப்புகள் குறைந்து வரும் என்கிறார். ஏற்கனவே இந்தியாவில் வேலை இல்லா திண்டாட்டம் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

வளர்ச்சி சரிவு
 

வளர்ச்சி சரிவு

இந்திய பொருளாதாரத்தின் ஜிடிபி கடந்த செப்டம்பர் 2019 காலாண்டில் 4.5 சதவிகிதம் மட்டுமே அதிகரித்து இருக்கிறது. இது கடந்த ஆறு வருடங்களில் இல்லாத வீழ்ச்சி என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் தான் இந்தியாவின் நிழல் வங்கிகள் பிரச்னை அதிகரித்துக் கொண்டு இருக்கின்றன. இதனால் மொத்த பொருளாதாரமே ஸ்தம்பித்து இருக்கின்றன.

என் பி எஃப் சி கடன் சிக்கல்

என் பி எஃப் சி கடன் சிக்கல்

இந்தியாவின் நிழல் வங்கி என்று சொல்லப்படும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (என் பி எஃப் சி) சகட்டு மேனிக்கு கடன் கொடுத்துவிட்டார்கள். இப்போது அந்த நிறுவனங்களிடம் இருந்து பணத்தை வசூலிக்க முடியாமல் தவிக்கிறார்கள். இதனால் என் பி எஃப் சி நிறுவனங்களால் வியாபாரம் செய்ய முடியவில்லை. அதாவது மேற்கொண்டு புதிதாக கடன் கொடுக்க முடியவில்லை.

வங்கி கடன் சிக்கல்

வங்கி கடன் சிக்கல்

என் பி எஃப் சி-க்களில் எப்படி கொடுத்த கடன்கள் வரவில்லையோ அதே போல, பொதுத் துறை வங்கிகளிலும் கொடுத்த கடனை வசூலிக்க வழி தெரியாமல் முழித்துக் கொண்டு இருக்கிறார்கள். வாராக் கடனால், வங்கிகளிடம் புதிதாக கடன் கொடுக்க முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆக இந்திய பொருளாதாரமே கடன் இல்லாமல் Liquidity Crunch-ல் தவித்துக் கொண்டு இருக்கிறது.

பரிசீலனை செய்யனும்

பரிசீலனை செய்யனும்

எனவே, மத்திய ரிசர்வ் வங்கி, என் பி எஃப் சி நிறுவனங்களின் சொத்துக்களின் தரத்தை மறு பரிசீலனைச் செய்ய வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறார் ரகுராம் ராஜன். இந்த முறையாவது, முன்னாள் மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் சொல்வதை அரசு கேட்குமா..? என்கிற கேள்விக்கு ஆர்பிஐ ஆளுநர் சக்தி காந்த தாஸ் நெருக்கமாக ஒரு பதில் கொடுத்து இருக்கிறார்.

ஆர்பிஐ ஆளுநர்

ஆர்பிஐ ஆளுநர்

ரகுராம் ராஜனின் அறிவுரைக்கு பதில் சொல்லும் விதத்தில் கடந்த டிசம்பர் 05, 2019 அன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ். இந்தியாவின் டாப் 50 என் பி எஃப் சி நிறுவனங்களை மத்திய ரிசர்வ் வங்கி நெருக்கமாக கண்காணித்து வருகிறது எனச் சொன்னார் சக்தி காந்த தாஸ். என் பி எஃப் சி நிறுவனங்கள் கொடுத்திருக்கும் மொத்த கடனில் 75 சதவிகித கடன்கள் இந்த டாப் 50 நிறுவனத்துக்கு சொந்தமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவாக தெரியும்

தெளிவாக தெரியும்

எங்களுக்கு இந்தியப் பொருளாதாரத்தில் எங்கு பிரச்னை இருக்கிறது என ஓரளவுக்கு நல்ல புரிதல் இருக்கிறது எனவும் சொன்னார். அதோடு, இந்தியாவின் எந்த ஒரு பெரிய வங்கி அல்லாத கடன் கொடுக்கும் நிறுவனத்தையும் (என் பி எஃப் சி) நொடிய விட மாட்டோம் எனவும் அழுத்தம் திருத்தமாகச் சொல்லி இருக்கிறார் சக்திகாந்த தாஸ்.

நல்லது

நல்லது

ஆக, ரகுராம் ராஜன் குறிப்பிடுவதற்கு முன்பே, தற்போதைய ஆர்பிஐ ஆளுநர் என் பி எஃப் சி நிறுவனங்களை நெருக்கமாக கண்காணித்து வருவதாகச் சொல்லி இருக்கிறார். ஆக மத்திய ரிசர்வ் வங்கி, சரியான பாதையில் தான் பயணித்துக் கொண்டு இருக்கிறது என்பது இதில் தெளிவாகிறது.

செய்துவிடலாமே

செய்துவிடலாமே

அப்படியே ரகுராம் ராஜன் சொன்னது போல, என் பி எஃப் சி நிறுவனங்களின் சொத்துக்களை பிரத்யேகமாக ஒரு மறு பரிசீலனை செய்துவிடுங்களேன். நல்ல அனுபவமுள்ள ஒருவரின் கருத்தை, அதிகாரத்தில் இருப்பவகள்ர் செவி சாய்த்து கேட்டு, தவறுகளைச் சரி செய்துவிட்டால் பெரும்பாலான பிரச்னைகளை தொடக்கத்திலேயே சரி செய்துவிடலாமே..! சக்தி காந்த தாஸ் செய்வார் என நம்புவோம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Raghuram rajan warning about real estate insisting asset review in NBFCs

The former RBI governor Raghuram G Rajan is warning deep trouble in indian real estate sector and insisting the rbi to review the NBFCs asset quality.
Story first published: Saturday, December 7, 2019, 19:50 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X