வரும் காலத்தில் இதற்கும் இழப்பீடு வழங்கப்படலாம்.. நடைமுறைக்கு வந்தால் நல்லாதான் இருக்கும்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முதல் தனியார் ரயில் தாமதமாக வந்தால் இழப்பீடு வழங்கி வருவதைப் போல, இந்தியாவின் சரக்கு போக்குவரத்து ரயிலும் தாமதமாக வந்தால், அதற்கு இழப்பீடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படலாம் என்றும் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து கூறியுள்ள பியூஷ் கோயல், ஐஆர்சிடிசி தேஜஷ் ரயிலில் தாமதமாக வந்தால் அந்த தாமதமான நேரத்திற்கு ஏற்ப இழப்பீடு வழங்கி வருகிறது.

இதைப்போலவே சரக்கு ரயில்கள் தாமதமாக வந்தால் அதற்கு ஈடு செய்யும் விதமாக இழப்பீடு வழங்கும் திட்டம் விரைவில் கொண்டு வரப்படலாம் என்றும் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் சுட்டிக் காட்டியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

சரியான நேரத்தில் டெலிவரி செய்ய உறுதி

சரியான நேரத்தில் டெலிவரி செய்ய உறுதி

இது ரயில்கள் சரியான நேரத்திற்கு பொருட்களை டெலிவரி செய்யும் உறுதிப்பாட்டையும் கொடுக்கும் என்றும் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். டெல்லியில் கடந்த சனிக்கிழமையன்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோயல், டெல்லி - லக்னோ ரயிலில் தாமதமாக வந்தால், எவ்வாறு இழப்பீடு வழங்கப்படுகிறதோ, அதே போல சரக்கு ரயிலிலும் திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

தாதமதற்திற்கு இழப்பீடு

தாதமதற்திற்கு இழப்பீடு

முதல் தனியார் ரயிலான டெல்லி- லக்னோ இடையே தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில், தாமதத்திற்கு ஏற்ப இழப்பீடுகளை வழங்கி வருகிறது. அதிலும் தற்போது ஒரு மணி நேரம் தாமதமாக வந்தால் 100 ரூபாய் இழப்பீடும், இதே 2 மணி நேரத்திற்கு மேல் தாமதமாக வந்தால், 250 ரூபாய் இழப்பீடும் வழங்கப்பட்டும் வருகிறது. இந்த நிலையில் இதே போன்றதொரு திட்டத்தினை சரக்கு ரயிலிலும் கொண்டு வர திட்டமிட்டிருப்பதாகவும் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

தாமதம் குறையும்
 

தாமதம் குறையும்

தற்போது இந்தியாவின் முதல் தனியார் ரயிலில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த இழப்பீட்டு தொகை அறிமுகமானது, சரக்கு ரயிலுக்கும் கொண்டு வந்தால், வரும் காலத்தில் சரக்கு போக்குவரத்து அதிகரிக்கலாம். இதனால் ரயில்வே துறைக்கு வருமானமும் அதிகரிக்கும். இது நல்ல விஷயம் தான் என்றும் ஆர்வலர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

எவ்வளவு இழப்பீடு?

எவ்வளவு இழப்பீடு?

சரக்கு ரயில் இப்படி திட்டத்தினை கொண்டு வர திட்டமிட்டிருப்பாதாக கூறியிருந்தாலும், எவ்வளவு இழப்பீடு, எப்போதிலிருந்து அமலுக்கு கொண்டு வரப்படலாம் என்றும் எதையும் தெளிவாக குறிப்பிடவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Railway minister Piyush goyal indicates customers to get compensation for delayed delivery

Railway minister Piyush goyal indicates customers to get compensation for delayed delivery. Just like IRCTC which pays compensation for delays in its Tejas trains.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X