இனி ரயில் டிக்கெட் புக் செய்ய ஆதார், பான், பாஸ்போர்ட் வேண்டும்..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்தான இந்திய ரயில்வே துறையின் சேவை தரம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், ஐஆர்சிடிசி தளத்தில் டிக்கெட் பதிவு செய்வதில் இருக்கும் பிரச்சனைகள் மட்டும் குறையவே இல்லை.

 

இந்தச் சூழ்நிலையில், மக்களின் டிக்கெட் புக்கிங் சேவையின் தரத்தை மேம்படுத்தவும், தேவையில்லாமல் இத்தளங்களில் இருப்பவர்களைக் களையவும் புதிய மாற்றத்தைக் கொண்ட வர ஆலோசனை செய்து வருகிறது.

ஐஆர்சிடிசி டிக்கெட் புக்கிங்

ஐஆர்சிடிசி டிக்கெட் புக்கிங்

இந்திய மக்களின் மிகப்பெரிய தலைவலியாக இருக்கும் ஐஆர்சிடிசி தளத்தில் டிக்கெட் புக்கிங் சேவையை மேம்படுத்தும் வகையிலும், தேவையில்லாமல் இத்தளத்தில் இருப்பவர்களை வெளியேற்றும் வகையிலும் ஐஆர்சிடிசி தளத்தில் லாக்இன் செய்யப்படும் அனைவரும் ஆதார், பான் மற்றும் பாஸ்போர்ட் போன்ற அடையாள ஆவணங்களை ஐஆர்சிடிசி கணக்குடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என்ற விதிமுறையைக் கொண்டு வர ஆலோசனை செய்து வருகின்றனர்.

அடையாள ஆவணங்களை இணைப்பு

அடையாள ஆவணங்களை இணைப்பு

இதுகுறித்து ரயில்வே பாதுகாப்புத் துறையின் (RPF) தலைவர் அருண் குமார் கூறுகையில், ஐஆர்சிடிசி தளத்தில் தேவையில்லாமல் இருப்போரைக் களைய இதற்கு முன்பு human intelligence பயன்படுத்தப்பட்டது, ஆனால் இதின் மூலம் எவ்விதமான பலனும் கிடைக்கவில்லை, இதனால் ஐஆர்சிடிசி கணக்குடன் அடையாள ஆவணங்களை இணைக்கத் திட்டத்தைச் செயல்படுத்தத் திட்டமிட்டு உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார் அருண் குமார்.

ஐஆர்சிடிசி கணக்கு
 

ஐஆர்சிடிசி கணக்கு

லாக்இன் செய்யும் போதே ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார், பான் மற்றும் பாஸ்போர்ட் போன்ற அடையாள ஆவணங்களை இணைப்பது மூலம், இத்தளத்தில் தேவையில்லாமல் பயன்படுத்துவோர் வெளியேற்றப்பட்டு மக்களுக்குச் சிறப்பான மற்றும் விரைவான சேவையை அளிக்க முடியும்.

2 வருட முயற்சி

2 வருட முயற்சி

கடந்த 2 வருடங்களாக ஐஆர்சிடிசி தளத்தில் தரம் மற்றும் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்த அமைப்பு ரயில்வே பாதுகாப்புத் துறை (RPF) பணியாற்றி வருவதாகத் தெரிவித்தார்.

ரயில் சுரக்ஷா செயலி

ரயில் சுரக்ஷா செயலி

இதேபோல் ரயில்வே பாதுகாப்புத் துறையின் (RPF) தலைவர் அருண் குமார் ரயில் பயணிகளின் பாதுகாப்பு பிரச்சனைகளைக் களைய வேண்டும் என்று பாதுகாப்பு பிரச்சனைகளைப் பதிவு செய்யும் தளமான ரயில் சுரக்ஷா செயலி உருவாக்கப்பட்டு உள்ளது என்று கூறினார். இந்தச் செயலியின் மூலம் ரயில் பயணிகள் தங்களது பயணத்தில் ஏற்படும் பிரச்சனைகளைப் பதிவு செய்ய முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Railways Planning to link Aadhaar, PAN, Passport for booking tickets on IRCTC website

Railways Planning to link Aadhaar, PAN, Passport for booking tickets on IRCTC website
Story first published: Saturday, June 26, 2021, 19:11 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X