இந்திய பங்குச்சந்தையில் மிகப்பெரிய முதலீட்டுத் தலையாக இருக்கும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா-வுக்குத் தொட்டது எல்லாம் தங்கமாக மாறும் ராசி உள்ளது என நினைக்கும் அனைவரும் தெரிந்துகொள் வேண்டியது யானைக்கும் அடி சறுக்கும் என்பது தான்.
இந்திய முதலீட்டுச் சந்தையில் பல துறையில் பல நிறுவனத்தில் முதலீடு செய்து 5.9 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்து மதிப்பைக் கொண்டு இருக்கும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா-வுக்கு ஒரு நிறுவனம் பெரும் நஷ்டத்தைக் கொடுத்து வருகிறது.
10 நிமிடத்தில் ரூ.186 கோடி சம்பாதித்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா.. எப்படி சாத்தியம்..!

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மற்றும் அவருடைய மனைவி இணைந்து முதலீடு செய்து கைப்பற்றியுள்ள ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைய்டு இன்சூரன்ஸ் நிறுவனம் மீண்டும் மோசமான காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது.

ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைய்டு இன்சூரன்ஸ்
ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைய்டு இன்சூரன்ஸ் நிறுவனத்தைப் பற்றி எம்கே குளோபல் கூறுகையில், வேகமாக வளர்ச்சி அடைய அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. இன்னும் இந்தியாவில் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரபலம் இல்லாத துறையாக இருக்கும் நிலையில் அடுத்த 10 ஆண்டில் 20 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது எனக் கணித்துள்ளது.

வர்த்தகச் சந்தை ஆதிக்கம்
ஸ்டார் ஹெல்த் நிறுவனம் இத்துறையில் இருக்கும் சக நிறுவனங்களைக் காட்டிலும் 3 மடங்கு அதிக வர்த்தகச் சந்தையைக் கொண்டு உள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் சேவை அனைத்துத் தரப்பு மக்களுக்கும், வர்த்தகங்களும் பெரிய அளவில் பயனுள்ளதாக இருப்பதால் வளர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது.

578.37 கோடி ரூபாய் நஷ்டம்
இந்நிலையில் ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் கொரோனா மற்றும் இதர வியாதிகள் மூலம் கிளைம் செய்யப்பட்ட அளவு 135 சதவீதமாக உயர்ந்த நிலையில், டிசம்பர் காலாண்டில் ஸ்டார் ஹெல்த் நிறுவனம் 578.37 கோடி ரூபாய் நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளது.

ஸ்டார் ஹெல்த் பங்குகள்
செப்டம்பர் காலாண்டில் 170.49 கோடி ரூபாய் நஷ்டத்தைப் பதிவு செய்த ஸ்டார் ஹெல்த் நிறுவனம் தற்போது 578.37 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளது. இதன் வாயிலாக ஸ்டார் ஹெல்த் பங்குகள் இன்று அதிகப்படியாக 712.15 ரூபாய் வரையில் சரிந்தது.

பெரும் நஷ்டம்
ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தில் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மற்றும் அவருடைய மனைவி இணைந்து 17.51 சதவீத பங்குகளை வைத்துள்ள நிலையில் ஐபிஓ வெளியிட்ட பின்பு அடைந்த உச்ச அளவான 940 ரூபாயில் இன்று 712.15 ரூபாய் என்ற 52 வார சரிவை தொட்டு பெரும் நஷ்டத்தைக் கொடுத்துள்ளது.